இங்கு எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு செய்தார்.
Truly Jesus did many other signs in the presence of His disciples, which are not written in this book. (John 20:30)
John 21:25; Luke 1:3,4; Romans 15:4; 1Corinthians 10:11; 2Timothy 3:15-17; 2Peter 3:1,2; 1John 1:3,4; 1John 5:13.
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். (யோவான் 20:30)
யோவான் 21:25; லூக்கா 1:3,4; ரோமர் 15:4; 1கொரிந்தியர் 10:11; 2தீமோத்தேயு 3:15-17; 2பேதுரு 3:1,2; 1யோவான் 1:3,4; 1யோவான் 5:13.
விபிலியோன்.
இவ்வசனத்தில் புஸ்தகம் என்று வருகின்ற சொல்லின் கிரேக்க பெயர் விபிலியோன் அல்லது விவிலியோன் என்பதாகும். இச்சொல் விபிலோஸ் என்ற சொல்லிலிருந்து வருகிறது. விபிலியோன் என்றசொல் பு.ஏ ல் 32 தடவைகள் வருகிறது. வெளிப்படுத்தலில் தான் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுவிசேஷத்தை எழுதிய யோவான் இதனை இந்த புஸ்தகம் என்று அழைக்கிறார். இதனை எழுதிய யோவான் இந்த புஸ்தகத்தில் பதிவிட்டிராத அநேக அற்புதங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார் என்று சாட்சியம் கூறுகின்றார். ஆகையினால் யோவான் தன் மனதில் கொண்டிருந்த நோக்கத்தையும், எதிர்பார்ப்பையும் நாம் அறிந்து கொள்வது நல்லது.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து செய்த எல்லா அற்புதங்களும், அடையாளங்களும் சீஷர்கள் முன்னிலையிலே நடைபெற்றது. ஆகையினால் சீஷர்கள் யாவரும் இயேசுவின் அற்புத கிரியைகளுக்கு உயிருள்ள சாட்சிகளாக இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து செய்த எல்லா அற்புத கிரியைகளையும் எழுத்தேடுகளில் வடிக்காமலிருந்தாலும் அவர்கள் பிரசங்கித்த இடங்களில் எல்லாம் அவைகளை குறித்து குறிப்பிட்டிருக்க வேண்டும். அவைகள் ஆதிகால சபை மக்களிடையில் பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும்.
ஆதிசபைகளில் அறியபட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் குறித்த பல பாரம்பரியங்கள் பின்னாட்களில் சபைகளில் எழும்பியிருக்க வேண்டும். மட்டுமல்ல, அவைகளைக் குறித்து அவர்கள் பிற்காலங்களில் எழுதவும் செய்திருக்க கூடும். ஏனெனில் இயேசுவை குறித்து அனேகர் சரித்திரம் எழுத முன்வந்தார்கள் என்று லூக்காவும் கூறுகின்றார்.
இப்படியிருக்க இக்காலத்திலும் இயேசு கிறிஸ்து தமது ஆவியினால் சபை நடுவிலும், தேசத்திலும் செய்கிற பலத்த கிரியைகள் குறித்து தேவனுடைய மனிதர்கள் விமர்சனங்களை செய்வது குறித்து கவனமாயிருக்க வேண்டும். உண்மையானவைகளா இல்லையா என்பதை காலம் வரும்போது வெளிப்படுத்தப்படும்.
இயேசுகிறிஸ்து அற்புதங்களை இன்றும் செய்கிறார். அவருடைய கிரியைகளை மனிதர்களோ, பிசாசுகளோ. உலகமோ கட்டுபடுத்த முடியாது. அவர் செய்கிற கிரியைகளை வரையறை செய்யவும் இயலாது. ஆனால் அற்புத கிரியைகள் யாவும் இயேசுவில் விசுவாசம் வைப்பதற்கு பயன்படுத்த வேண்டுமேயன்றி அவைகளை தங்களின் சுயசார்புகளுக்காக எப்பொழுதும் பயன்படுத்தலாகாது.
இயேசுகிறிஸ்து நம் வாழ்வில் என்ன செய்தார் என்று நாமறிவோம். என்ன செய்யப்போகிறார் என்பதை நாம் அறியமாட்டோம். ஆகையினால் அவரின் கிரியைகள் நம்மில் வெளிப்பட சுவிசேஷங்கள் நம்மை அனல்மூட்டி எழுப்பிவிடுகின்றன. இங்கு எழுதபட்டுள்ளவைகளை விடவும் அதிகமான அற்புதங்களை செய்ய இயேசு வல்லவராயிருக்கிறார்.
விவிலியம் என்னில் கிறிஸ்து செயல்பட தூண்டுகின்றது.
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 1கொரிந்தியர் 3:7-17.