பிதாவை ஆவியோடு தொழுதுகொள்ள வேண்டும்.
true worshipers will worship the Father in spirit. (John 4:23)
Ro1:9; Ro5:5; Ro8:15,26; Gal4:6; Eph4:6; Eph5:18-21; 6:18; Phi3:3; 1The4:8; 1Tim2:8; Judha1:20,21; Zec12:10; Jer3:21.
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். (யோவான் 4:23)
ரோமர் 1:9; ரோமர் 5:5; ரோமர் 8:15,26; கலாத்தியர் 4:6; எபேசியர் 4:6; எபேசியர் 5:18-21; எபேசியர் 6:18; பிலிப்பியர் 3:3; 1 தெசலோனிக்கேயர் 4:8; 1தீமோத்தேயு 2:8; யூதா 1:20,21; சகரியா 12:10; எரேமியா 3:21.
ஆவியில் தொழுதுகொள்ளல்:
23,24 ஆகிய வசனங்களில் ஆவியோடு என்று காணப்படுகிறது. ஆனால் மூலத்தில் ஆவியிலே (In Spirit) or ஆவிக்குள் தொழுது கொள்ளல் என்றே தரப்பட்டுள்ளது.
எனவே இங்கு இதோடு இணைந்து செல்லும் 4 விதங்களை தியானிக்கலாம்.
1. பரிசுத்த ஆவியை என்னில் கொண்டு தொழுதல். பரிசுத்த ஆவி நம்மிடம் இல்லாமல் விவிலியத்தையோ, இயேசுவையோ, பிதாவையோ நாம் அறிந்து கொள்ளவியலாது. அதனால் தான் பரிசுத்த ஆவியர் நமது உள்ளங்களில் ஊற்றபட்டுள்ளார். அபிஷேகம் என்பது ஒன்றிற்காக நியமம் செய்யப்படுதல், நிரப்பப்படுதல் என்பது அதன் கட்டுபாட்டுக்குள் இயக்கப்படுதலாகும். ஆவியினால் நிரப்பப்படுகிறவர்கள் மட்டுமே இயேசுவின் நாமத்தில் பிதாவை தொழுகை செய்ய இயலும். நாம் ஆவியால் நிரப்பப்பட்டுள்ளோமா அல்லது வேறு ஆவிகளால் இயக்கபடுகிறோமா?
2. பரிசுத்த ஆவியோடு தொழுதல். ஆவியானவரே நம்மை நடத்துகிறார். பிதாவை தொழுகை செய்யும்போது ஆவியானவர் நம்மோடு இணைந்து செல்கிறார். பரிசுத்த ஆவி நம்மோடு இணைந்து கொள்ளவியலாத சுபாவ கிளைகள் நம்மில் இருக்குமானால் நமது தொழுகை பொய்யானதாக மாறிவிடும். ஆவியானவரோடு இணைந்து – சேர்ந்து வாழும் வாழ்க்கையே தொழுகையின் வாழ்வாகும்.
3. பரிசுத்த ஆவியின் மேற்பார்வையில் – கண்காணிப்பில் தொழுகை செய்தல். பிதாவை தொழுகை செய்யக்கூடிய நேரம், சமயம், இடம், சூழல், முறைமைகள் ஆகிய யாவையும் அவரே தீர்மானிக்கின்றார் – கண்காணிக்கின்றார். அவரின் நடத்துதல் இல்லாமல் நாம் பிதாவை நெருங்க முடியாது. அவரின் கட்டுபாடுகள், ஆலோசனைகள், வழிநடத்துதல்கள் யாவும் கவனிக்கபட வேண்டியவை.
4. பரிசுத்த ஆவிக்குள் தொழுகை செய்தல். பரிசுத்த ஆவியோடு இணைந்து செல்லலாம், பரிசுத்த ஆவியின் மேற்பார்வையில் இருக்கலாம், அவரை தனக்குள் கொண்டிருக்கலாம். நல்லதுதான். ஆனால் ஆவிக்குள் நாம் கடந்து சென்று பிதாவை தொழுகை செய்தலே முக்கியமானது. அவருக்குள் நாம் இருந்து – வாழ்ந்து பிதாவை குறித்து அறிந்து – கற்று கொண்டு பிதாவை எப்பொழுதும் தொழுகை செய்ய வேண்டும். ஆவிக்குள் செல்லுதல் என்பது என்னை நான் விட்டுவிடுதல், என்னை இழத்தல் என்பதாகும். அனேக ஆவிக்குரியவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் அரசியல்வாதிகளோடும், சமய தலைவர்களோடும், ஊர் பெரிய மனிதர்களோடும் பயணிக்கின்றவர்களாகவும், யோகா போன்றவைகளோடு வாழ்கிறவர்களாகவும் உள்ளனர்.
சில கேள்விகளை உங்களிடம் வைக்கின்றேன்.
– எப்பொழுது ஆவிக்குள்ளிலிருந்து வெளியே வந்தீர்கள்?
– ஆவிக்குள் நீங்கள் முழுமையான திருப்தியடையவில்லையா?
– ஆவிக்குள் இத்தியாதி புற அனுபவங்களை கொண்டு செல்ல முடியுமா?
சிந்தியுங்கள்…
சிறைகளைவிட்டு வெளியே வாருங்கள். சிறந்த வாழ்விடமாகிய ஆவிக்குள் நிலைத்திருங்கள்.
உள்ளேயிருந்து வெளியே எட்டி பாராதிருங்கள்.
உள்ளே திருப்தியுடன் வாழுங்கள். ஆவிக்குள் நிலைத்து வாழ்வதே ஆவிக்குரிய வாழ்க்கை.
அவர் கோபபட்டால்….
தொலைந்து போவீர்…
கர்த்தாவே, நாங்கள் உம் ஆவியானவரால், ஆவியானவரோடு, ஆவிக்குள்ளாக, ஆவியானவரின் கண்காணிப்பில் அனுதினமும் வாழ்ந்து பிதாவாகிய உம்மை தொழுகை செய்ய உம் குமாரனின் இரத்தத்தால் எங்களை மீட்டீர். இதை நாங்கள் உணர்ந்து ஆவியானவரின் கோபத்துக்கு ஆளாகாமல் தொடர்ந்து உம்மை தொழுகை செய்வதில் கவனம் செலுத்த எங்களுக்கு உதவும்.