உயிர்ப்பிக்கிறது

ஆவியே உயிர்ப்பிக்கிறது.

It is the Spirit who gives life.  John 6:63)

Gen2:7; Rom8:2; 1Cor15:45; 2Co3:6; Gal5:25; 1Pet3:18; Eze37:9,10.

ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. (யோவான் 6:63) 

ஆதியாகமம் 2:7; ரோமர் 8:2; 1கொரிந்தியர் 15:45; 2கொரிந்தியர் 3:6; கலாத்தியர் 5:25; கலாத்தியர் 3:18; எசேக்கியேல் 37:9,10.

உயிர்ப்பிக்கும் ஆவி:

சிதறிப்போன எலும்புகளாய் சிதறிக்கிடந்த எலும்புகளில் உண்டான மாற்றங்களை அடிப்படையாகக்கொண்டு ஆவியின் உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெரும் சேனைத்திரளாய் நிற்க உதவிற்று.

ஆவியின் உயிர்ப்பிக்கும் ஆற்றல் ஆதிமனிதனில் இருந்து ஆரம்பமாயிற்று.
தேவனால் உருவாக்கப்பட்ட மனிதனில் உயிர்ப்பிக்கும் – உயிரூட்டும் ஆவி வந்தபோது மனிதன் ஜீவாத்துமாவானான்.

மரித்துபோன மனிதனுக்குள் தேவ ஆவி வந்தபோதுஅவன் உயிர் பெற்று நின்றான்.

கடைசி எக்காளம் தொனிக்கும்போது தேவனுடைய ஆவி கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களில் பிரவேசித்து ஜீவனுடையவர்களாய் மாற்றுகிறது.

பலவீனத்தினாலும், பாவத்தினாலும் செயலற்ற நிலையில் இருப்போரில் தேவ ஆவி பிரவேசிக்க இடம் உண்டாகுமானால் பலமடைந்து மகாபரிசுத்த ஜாதியாய் எழும்பி நிற்பார்கள்.

தேவனுடைய ஆவியினால் கிறிஸ்தவர்கள், சபைகள் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.
சபை பிதாக்கள், ஊழியர்கள், மூப்பர்கள் உயிர்ப்பிக்கப்படவேண்டும்.

ஆவியினால் உண்டாகும் உயிர்ப்பிக்கப்படுதலே புது சிருஷ்டியின் வெளிப்பாடு ஆகும்.

பரிசுத்த ஆவியின் செயலுக்கு இடம் தருவீர். பாதை மாறமாட்டீர். இடறிப்போக மாட்டீர்.

கர்த்தாவே உம் ஆவியானவரை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி. செத்த அனுபவங்களிலிருந்து பயனுள்ள அனுபவங்களுக்கு நேராய் நாங்கள் கடந்துசெல்ல மேலும் எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME