ஆவியினால் பிறந்தவரெவரும் அப்படியே இருக்கிறான்

ஆவியினால் பிறந்தவரெவரும் அப்படியே இருக்கிறான்.

cannot tell where it comes from and where it goes. So is everyone who is born of the Spirit.(John 3:7,8)
Mk4:26-29;1Cor2:7-11;12:11;2Cor4:16-18;Job38:4f;Ecc11:5,6;Isa558:8-11.

நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்
காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது: ஆவியினாலும் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
(யோவான் 3:7,8)

மாற்கு 4:26-29; 1கொரிந்தியர் 2:7-11; 1 கொரிந்தியர் 12:11; 2கொரிந்தியர் 4:16-18; யோபு 38:4f; பிரசங்கி 11:5,6; ஏசாயா 58:8-11

மறுபிறப்படைதல் ஆச்சரியபடவேண்டிய காரியமல்ல, பின்பற்றப்படவேண்டிய காரியம்.

மறுபடிபிறத்தல் இரு விதமானது

1. வார்த்தை சார்பு கொண்டது.
– கட்டளைகளுக்குள் வருகிறான்.
– தன்னை கட்டளைகளுக்குள் உட்படுத்துகிறான்.
– அதன் விளைவுகளே அவன் கட்டளைகளுக்கு அடங்கி நடந்தான் என்று காட்டுகிறது.

2. அனுபவ சார்பு கொண்டது.
– ஆவியை ஏற்றுக்கொள்கிறான்.
– ஆவிக்குள் தன்னை கொண்டுபோகிறான்.
– அதன் விளைவே ஆவியின் நடத்துதலின் செயலை தீர்மானிக்கும்.

மறுபடி பிறப்பதால் உண்டாகும் உன்னத மாற்றத்தை.
1. பிறர் காண்கிறார்கள்.
2. சாத்தான் கவனிக்கிறான்.
3. தேவன் கவனிக்கிறார்.
இவர்களின் கவனித்தல்படி நேர் விளைவோ, எதிர் விளைவோ உண்டாகும்.

புதிய ஏற்பாட்டில் கீழ்கண்ட முறையில் ஆவியின் செயல் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. உள்ளீகமானது. பழைய ஏற்பாட்டில் வெளிப்புறமாக காணப்பட்டது. இங்கோ பின்னர்தான் அறிய இயலும். இதனை மறைமுகமானது, இரகசியமானது எனவும் கூறலாம்.
2. தேவன் தீர்மானிப்பது. யாரில் தம் ஆவியை கொண்டு கிரியை செய்யவேண்டும் என்று அவரே தீர்மானிக்கிறார். அவர் தமக்கு இஷ்டமான இடத்திலே தம் ஆவியை அனுப்பி கிரியை செய்கிறார்.
3. தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாகும். ஆவியானவர் தம் இஷ்டபடி கிரியை செய்யார். தேவன் தீர்மானிப்பதை கிறிஸ்து செய்கிறார். கிறிஸ்து செய்வதையே ஆவியானவர் பிரதிபலிக்கின்றார். இதனால் மாம்சத்தின் – இரத்தத்தின் விருப்பபடி செயல்படாது.
4. சடப்பொருள் சார்ந்த மாம்ச உடலையும் பரிசுத்த ஆவியானவர் ஆவி உருவில் செயல்படும்படியாய் மாற்றியமைக்க இயலும். ஒரு மனிதன் ஆவிக்குள்ளானவனாக இருக்கும்போது அவனை ஓரிடம் விட்டு ஓரிடம் கொண்டுபோகவும் அவரால் இயலும்.
5. உள்ளானவைகளை – மறைமுகமானவைகளை – இரகசியங்களை அறிந்துணர செய்யவும் ஆற்றல் படைத்தவர்.

இந்த 5 விதங்களில் ஆவியானவர் ஒருவரை பயன்படுத்தவியலும்.

கர்த்தாவே, உமது ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உமது செயல்களை எப்படி அறிவேன்? நான் உமக்குள்ளும், நீர் எனக்குள்ளும் இருப்பதினாலல்லவோ உம்மை அறிய இயலும். எனவே உம் ஆவியால் நான் நிரம்பி வழிய உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME