ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.

ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.

Jesus said,Most assuredly,I say to you,before Abraham was,I Am. (John 8:58)

Jn1:1,2; Jn17:5,24; Col1:15-18; Heb1:10-12; Heb13:8; Rev1:11,17,18; Rev2:8; Pr8:28-30; Mic5:2; Ex3:14; Isa3:13; Isa44:6,8; Isa48:12.

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:58)

யோவான் 1:1,2; யோவான் 17:5,24; கொலோசெயர் 1:15-18; எபிரெயர் 1:10-12; எபிரெயர் 13:8; வெளி1:11,17,18; வெளி 2:8; நீதிமொழிகள் 8:28-30; மீகா 5:2; யாத்திராகமம் 3:14; ஏசாயா 3:13; ஏசாயா 44:6,8; ஏசாயா 48:12.

நான் இருக்கிறேன்:
இயேசுகிறிஸ்து ஆபிரகாம் தோன்றவதற்கு முன்னதாகவே இருக்கிறார் என்பதற்கான சில விவிலிய ஆதாரங்களைக் கவனிப்போம்.

  • சிலர், இயேசுகிறிஸ்து ஆபிரகாமுக்கு முன்னமேயே மத்தியஸ்தராயிருந்தார் என்கின்றனர்.
  • ஆதியாகமம் 3:16 ல் ஸ்திரீயின் வித்தாக அறியப்பட்டார்.
  • அவர் தேவ ஆட்டுகுட்டியாக – பஸ்கா ஆடாக – பாவமில்லாத ஆடாக – ஈசாக்குக்கு பதிலாக பலியிடப்பட்ட ஆடாக அறியப்பட்டார்.
  • நீதிமொழிகளில் பூமி உண்டாகப்படும்போது ஞானமாக இருந்ததாக அறியப்பட்டார்.
  • தீர்க்கதரிசனங்களின்படி இயேசு ஒரு தீர்க்கதரிசியாக அறியப்பட்டார்.
  • யோவான் சுவிசேஷத்தின்படி ஆதி வார்த்தையாக அறியப்பட்டார். இயேசு இருளை போக்கும் ஒளியாக அறியப்பட்டிருந்தார்.
  • இன்னும் பல…
    நான் இருக்கிறேன் என்று இயேசு கூறியதில் ஒருசில உண்மைகள் காணப்படுகின்றன.
  • யாத்திராகமம் 3:14 ன்படி தேவனுக்கு சமமானவர் என்றோ, தேவமகன் என்றோ அறியலாம்.
  • இயேசு மனுஷரூபத்தில் வந்தாலும் தெய்வத்துவமானவர் என்று அறியலாம்.
  • இயேசு நித்தியமாய் இருக்கிறார் என்று அறியலாம்.
  • மனுக்குலம் இவரை பின்பற்றித்தானாக வேண்டும் என்ற கட்டாயம் தரப்பட்டுள்ளது.
  • மனுஷ உள்ளங்களையும், உலக ஆழங்களையும், சாத்தான்களின் ஆழங்களையும் அறிந்திருப்பவர் எனலாம்.
  • இவரை பற்றிக்கொள்ளும்போது இவருடைய தன்மைகள் நம்மிலும் உண்டாகி யாவையும் அறிகிற அறிவை அடைகிறோம்.
  • இந்த இயேசுவை நம்புங்கள்…
    இவர் மட்டுமே ஆதியானவர்…
    மீதியெல்லாம் பாதியானவைகள்…
    இதை புரிந்துகொண்டால் நீதியாவாய்…
    கர்த்தாவே உம் மகனைக்கொண்டு எங்களுடைய ஆதி நிலைமையை உணர வைத்து தேவனோடு எங்களை இணைத்து தேவ பிள்ளைகளாக வளர வைப்பதற்காய் நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME