எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ?
Are You greater than our father Abraham, who is dead? (John 8:51,52)
Zec1:5,6; Heb11:13; Jn8:58; Jn4:12; Jn10:29,30;Jn 12:34; Mt12:6,41,42; Ro9:5; Heb3:2,3; Heb7:1-7; Jas2:21; Isa9:6.
ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 8:51
அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம், ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்.
(யோவான் 8:52)
சகரியா 1:5,6; எபிரெயர் 11:13; யோவான் 8:58; யோவான் 4:12; யோவான் 10:29,30; யோவான் 12:34; மத்தேயு 12:6,41,42; ரோமர் 9:5; எபிரெயர் 3:2,3; எபிரெயர் 7:1-7; யாக்கோபு 2:21; ஏசாயா 9:6.
ஆபிரகாமிலும் பெரியவர்:
ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளின் தகப்பன் என்று பொருள். ஆதியாகமம் 17:5. ஆனால் இயேசுவோ தம்மை பலியாக கொடுத்து சம்பாதித்து கொள்கின்ற மக்கள் கூட்டத்தை யாராலும் எண்ணமுடியாது. ஏசாாய 53:8,11,12.
ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன் எனப்படுகின்றார். கலாத்தியர் 3:7. ஆனால் இயேசுகிறிஸ்துவோ விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறார். எபிிரெயர் 11:1.
ஆபிரகாம் தன் ஒரே மகனை பலிக்காக ஒப்புக்கொடுத்து தனக்கும் தேவனுக்கும் உள்ள உறவை வெளிபடுத்தினார். ஆதியாகமம் 22. இயேசுவோ தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்து தனக்கும் பிதாவுக்கும் உள்ள உறவை வெளிபடுத்தி அனேகரை அவரோடு இணைத்துகொண்டார். யோவான் 3:16; 1யோவாான் 3:16.
ஆபிரகாம் மரித்துப்போனார். இயேசுவோ மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். ரோமர் 14:9.
ஆபிரகாம் மூலம் பல வாக்குதெதத்தங்கள் உருவாயின. இஸ்ராயேல் தேசத்தை வாக்குதத்த பூமியாக பெற்றுக்கொண்டார். ஆனால் ஆபிரகாமால் உண்டான வாக்குதத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளேதான் நிறைவேற இயலும். இயேசுகிறிஸ்துவோ முழு உலகையும் சொந்தமாக்க இயலும் என்ற வாக்குதத்தத்தையும் பெற்றார். மத்தேயு 28:18-20.
இப்படியிருக்க இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் பழமைகளுக்கு திரும்பி ஆபிரகாமை பின்பற்றாதபடிக்கு இயேசுவின் நாளைக் காண ஆவலாயிருந்த ஆபிரகாமை விட்டுவிட்டு கிறிஸ்துவின் விசுவாசத்தையும், தந்தையோடுள்ள இணக்கத்தையும் பிடித்துகொண்டு நமக்கு நியமித்துள்ள ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி ஜெயமெடுப்போம்.
கர்த்தாவே ஆபிரகாமிலும் பெரியவராக தரப்பட்ட உம் குமாரனை நாங்கள் பின்பற்றி குமாரனின் இராஜ்யத்தில் பங்கடைய உதவிடும்.