நாங்கள் ஆபிரகாமின் சந்ததியார், யாருக்கும் அடிமையாகவில்லை.
We are Abraham’s descendants, and have never been in bondage to anyone. (John 8:33)
Jn8:39; Mat3:9; Lk16:24-26; Lev25:42.
அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை, விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். (யோவான் 8:33)
யோவான் 8:39; மத்தேயு 3:9; லூக்கா 16:24-26; லேவியராகமம் 25:42.
நாங்கள் அடிமைகளல்ல:
நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாராய் இருப்பதினால் நாங்கள் அடிமைகளல்ல. நாங்கள் ஒருபோதும் ஒருக்காலும் ஒருவருக்கும் அடிமையாயிருக்கவில்லை என்று இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை தவறான புரிதலின் அடிப்படையில் பதில் கொடுக்கின்றனர் யூதர்.
இவர்கள் கூறிய கூற்று உண்மையா என்று ஆராய்ந்தால் நேர்மறையின் அடிப்படையில் அவர்கள் எகிப்துக்கு அடிமைபட்டிருந்தார்கள் எனலாம். அடிமைதனத்தின் மக்களாய் காணப்பட்டனர். மேலும் நியாயாதிபதிகளின் புத்தகத்தின் அடிப்படையில் அருகாமையிலுள்ள பல நாடுகளால் பல சந்தர்ப்பங்களில் அடிமைபட்டு வாழ்ந்ததையும் அறிகின்றோம்.
எதிர்மறையின் அடிப்படையில் இஸ்ராயேல் ஜனங்கள் தேவனின் பலத்தாலும், வல்லமையாலும் மீட்கப்பட்ட ஜனங்கள். அடிமைபடுவதற்கல்ல, அடிமைபடுத்துவதற்காகவே அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் சொல்வதுபோல அடிமைதனத்தின் மக்களாய் அல்ல, விடுதலையின் மக்களாய் உள்ளனர்.
இவர்கள் கூறுவதுபோலவே இயேசுகிறிஸ்துவும் உங்கள் பாவங்களே உங்களை பிறருக்கு அடிமைபடுத்துகின்றது. உங்கள் அவிசுவாசமே உங்களை பாவிகளாக்குகின்றது. என்னை ஏற்றுகொள்ளாததுவே உங்களை அவிசுவாசிகளாக்குகின்றது என்கிறார்.
எந்த மனுக்குலமும் நேர்வழி வாழுமென்றால் அடிமைபடுதல் உண்டாகாது. பாவத்தின் அகோரமே மனிதனை மனிதன் அடிமைபடுத்த தூண்டுகின்றது.
இஸ்ராயேலர் விடுதலையாக வேண்டும். மனிதர்கள் உருவாக்கும் அடிமைதனத்தை மேற்கொள்ள மோசே, யோசுவா மற்றும் நியாயாதிபதிகள் எழும்பினர். பாவத்தின் அடிமைபடுதலிலிருந்து வெளியேறி விடுதலையின் மக்களாய் இருக்க இயேசுகிறிஸ்துவை மட்டுமே விசுவாசிக்க வேண்டும். பாவங்களிலிருந்து விடுதலை தருபவர் இயேசு ஒருவர் மட்டுமே.
நமது பேச்சை விடவும் நமது செயல்பாடு முக்கியமானது.
கர்த்தாவே எங்களை முழுமையான விடுதலை மக்களாய் இருக்க வைக்க பாவம், மனிதர், உலகம், சாத்தான் போன்றவைகளிலிருந்து முழுமையான விடுதலைக்கு கொண்டுபோகவே தம் குமாரனை தந்தீர். அவரைக்கொண்டு விடுதலையோடு வாழ உதவிடும்.