பிதாக்களே ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

பிதாக்களே ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

I write to you, fathers, Because you have known Him who is from the beginning. (1John 2:13)

1John 2:14; 2Timothy 5:1; John 2:3,4; Luke 10:22; John 8:19; John 14:7; John 17:3; Psalms 91:14.

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். (1 யோவான் 2:13)

1யோவான் 2:14; 2தீமோத்தேயு 5:1; யோவான் 2:3,4; லூக்கா 10:22; யோவான் 8:19; யோவான் 14:7; யோவான் 17:3; சங்கீதம்91:14.

பிதாக்களே…

இங்கே பிதாக்கள் எனப்படுவோர் வயது முதிர்ந்தோர் என்றும், முந்தி கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் என்றும், ஆதிமுதலே தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டு அவருக்கு கீழ்படிந்து, அவரை நேசித்து, அவருக்குரியவர்களாய் வாழ்ந்தவர்கள் என்றும் அறியலாம். சுவிசேஷம் அவர்களிடத்தில் வந்தபோது அதை தேவ வார்த்தையாக ஏற்றுக்கொண்டு இயேசு கிறிஸ்துவை ஆதியிலிருக்கிறவராக நம்பி விசுவாசித்து அப்படியே அறிக்கை செய்தவர்கள்.

கர்த்தராகிய இயேசு தம்மை பிதாவோடு ஒப்பிட்டு பேசியதை கேட்டவர்களாக மாத்திரமல்ல, கேட்டு விசுவாசிக்கிறவர்களாக காணப்பட்டனர். நிருபத்தை எழுதிய ஆக்கியோனைப்போல இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தவர்கள். இயேசுவை அறிவதே நித்திய வாழ்வாகும். இயேசுவை அறிவதற்கு விசுவாசம் மட்டும் போதுமானதல்ல, பரிசுத்த ஆவியின் நிறைவும் அவசியமாகும். பரிசுத்த ஆவியினால் தான் யாவரும் இயேசுவை விசுவாசித்து அவருக்கு கீழ்படிந்து பாவங்கள் போக கழுவப்பட்டு அவருடைய பிள்ளைகளாக வாழ முடியும். பரிசுத்த ஆவி இல்லாமல் இயேசுவுக்கும் கீழ்படியமாட்டார்கள். போதகருக்கும் கீழ்படியமாட்டார்கள். சபைக்கும் அடங்கார்கள். நாம் தேவனுடைய ஆவியை கொண்டிருப்பதினால்தான் அவருக்கும் அவர் ஊழியருக்கும் அவரின் சமூகத்துக்கும் பயந்து நடக்கிறோம்.

துவக்கத்திலே கொண்டிருந்த ஆதி அன்பை உடையவர்களாயிருந்த அநேகர் இயேசுவுக்கு இரத்தசாட்சிகளான உயிருள்ள சாட்சிகளாக வாழ்ந்து மடிந்தனர். ஆதி அன்பை இழந்த அநேகர் ஆவியிலே செத்து போனவர்களாக மடிந்தனர். நாம் ஆதியிலே கொண்டிருந்த விசுவாசத்தை விடாமல் பற்றிக்கொண்டு வாழ்வதுதான் ஆசீர்வாதமானதாகும். ஆதிமுதலாய் இருந்தவரும் இருக்கிறவரும் இருப்பவருமாகிய அவரை அறிகிற அறிவிலே வாழ்வோமாக.

பிதாக்கள்…
விசுவாசத்திலும் கற்பிலும் அன்பிலும் உறுதியாய் நின்றவர்கள்….
மாம்சத்திலிருந்து ஆவிக்கு நேராய் பயணித்தவர்கள்…
நல்ல சாட்சியங்களை பின்சந்ததிக்கு வைத்துப்போனவர்கள்….

சில கேள்விகள்….
இன்று நம்மில் காணப்படும் தெய்வீக அறிவு பின் சந்ததிக்கு பரிமாற்றம் செய்யப்படுமா?
நமது நம்பிக்கையும் விசுவாசமும் நம் கண்முன்பதாகவே தகர்க்கப்படுகிறதை காணும்போது என்ன நினைக்கிறீர்கள்?..

எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. 1தெசலோனிக்கேயர் 1:5-8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME