நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்

நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்

 Jesus said to them, “Just what I have been saying to you from the beginning. (John 8:25)

Mt26:62-64; Lk22:66-70; Jn1:45; Jn10:24-30; Jn5:17-29; Jn8:56-59; 1Jn2:13,14,22-25.

அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
(யோவான் 8:25)

மத்தேயு26:62-64; லூக்கா22:66-70; யோவான் 1:45; யோவான் 10:24-30; யோவான் 5:17-29; யோவான் 8:56-59; 1யோவான் 2:13,14,22-25.

ஆதிமுதலானவர்:

  துவக்கத்திலிருந்தே இருக்கிறவர், அல்பாவாயிருக்கிறவர், ஆதியானவர், காணப்படுகிற, காணப்படாதவைகள் யாவும் உண்டாக்கப்படும்போதே இருக்கிறவர். இருக்கிறவராகவே இருக்கிறவர். அன்று எப்படியிருந்தாரோ, இன்று எப்படியிருக்கிறாரோ, நாளையும் அப்படியே இருப்பார். மாற்றமில்லாது இருக்கிறவர்.

மனிதனே நீ பிறக்கும்போதே அவர் இருக்கிறார். இப்பொழுதும் இருக்கிறார். நீ மரித்தாலும் அவர் இருப்பார். எனவே அவர் யார், எங்கே யிருக்கிறார் என்று கேள்வி கேட்காதே. நீ பிறந்ததுவே உனக்கு தெரியாது, உன் பெற்றோர் சொல்லித்தான் உனக்கு தெரியும். தேவன் இல்லை இல்லவே இல்லை என்று சொல்லாதே. விவிலியம் தேவன் இல்லை என்று சொல்பவன் முட்டாள் என்று சொல்கிறது. அவர் இருக்கிறார். நீ சண்டையிட்டாலும், சபைகளை அழித்தாலும், ஊழியங்களை நசுக்கினாலும் அவர் இருக்கிறார். ஆதி முதலாய் இருக்கிறவரை நீ ஒன்றும் செய்ய இயலாது. பாறையில் மோதி அழியாதே. அவர் இருக்கிறார்.

எல்லா கடவுளும் கடவுள்தான். இயேசு ஆதிமுதலாய் இருக்கிறாரென்றால் எங்கள் தெய்வமும் ஆதிமுதலாய் இருக்கிறவர்தான் என்று சொல்லும் மனிதா ஒரு வீட்டுக்கு ஒரு அப்பா தான் உண்டு. ஒரு நாட்டுக்கு ஒரு தலைவர்தான் உண்டு. அதுபோல முழு உலகிற்கும் ஒரே தேவன்தான் உண்டு. என் அப்பா நான் உண்டாகுமுன்பே இருக்கிறார். அவர் இருந்ததினால்தான் நான் இருக்கிறேன். அதுபோல மனிதா நீ உருவாகும் போது அவர் இருந்தார். அவர் இருந்ததினால்தான் மனுக்குலம் உருவாகிற்று. அவர் இருக்கிறார் என்பதினால் நீ இருக்கிறாய். நீ இருக்கமாட்டாய் என்பதினால் அவரும் இருக்கமாட்டார் என்று நினைக்காதே. அவர் இருந்தார். இருக்கிறார்.இருப்பார்.

ஆதிபகவான் என்று யாருமில்லை. ஆதிதேவன் மட்டுமே ஆதிமுதலாய் இருக்கிறவர். அவரையே நீ நம்பு. நீ இருப்பது வரையிலும் சுகமுடனும், பெலமுடனும், நீண்ட ஆயுளுடனும் இருக்க என்றென்றும் இருக்கும் அவரை மட்டும் நம்பு.

நீ ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் அவர் இருக்கிறார்.

கர்த்தாவே உம்மைபோலவே உம் குமாரனும் ஆதிமுதலாய் இருக்கிறவர் என்று கற்று கொடுத்ததற்காய் உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME