எனக்கு முன் வந்தவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை

எனக்கு முன் வந்தவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை

All who ever came before Me are thieves and robbers,but the sheep did not hear them. (John 10:8)

Jn10:1,5,10,12; Act5:36,37; Isa56:10-12; Eze22:25-28; Eze34:2; Zep3:3,4; Zec11:4-17.

எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள், ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. (யோவான் 10:8)

யோவான் 10:1,5,10,12; அப்5:36,37; ஏசாயா 56:10-12; எசேக்கியேல் 22:25-28; எசேக்கியேல் 34:2; செப்பனியா 3:3,4; சகரியா 11:4-17.

முன் வந்தவர்கள்:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு மனிதனாக வந்து யூதர்கள் மத்தியில் ரபீயாக வெளிப்பட்டபோது ஆடுகளின் நிலைமையை அறிந்தவராய் மேய்ப்பர்களின் தன்மையைக் குறித்து இங்கு குறிப்பிடுகின்றார். கிறிஸ்துவுக்கு முன்வந்த மேய்ப்பர்கள் கள்ளரும் கொள்ளைகாராருமாய் இருந்ததினால் ஆடுகள் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை. எவ்விதத்தில் அவர்கள் கள்ளரும் கொள்ளைகாரருமாயிருந்தார்கள்?

  • விவிலியத்தின் மாண்பாகிய மேசியா வெளிப்பட வேண்டும் என்ற நீரோட்டத்தினின்று ஆடுகளை திருப்ப முயற்சித்தார்கள்.
  • பரிசுத்தமும், நீதியும், நம்பிக்கையும் இல்லாதவர்களாய் பொருளாசையும், விபசாரமும் மிகுந்தவர்களாக காணப்பட்டனர்.
  • மந்தைகளின் கொழுமையானவைகளிலே தங்கள் கவனத்தை செலுத்தி அவர்களை மேய்ப்பதிலே நேரம் செலவிட்டார்கள்.
  • அன்னிய மார்க்க அனுசாரங்களை பின்பற்றி சோரம் போனவர்களாய் காணப்பட்டார்கள்.
    இப்படிப்பட்ட மேய்ப்பர்களினிமித்தமாக ஆவியின் ஒருமைபாடு சிதைந்து போய் வேற்றுமைகளும், முறைகேடுகளும் உண்டாகி கீழ்படியாமை ஆடுகளின் உள்ளங்களில் வேரூன்றியது.
    தேவனுடைய மாட்சிமை, ராஜாங்கம், ராஜ்யம் போன்றவைகளில் கவனம் செலுத்தாமல் உலகபிரகாரமான மாட்சிமை, ராஜாங்கம், ராஜ்யம் , ஆளுகையில் கவனம் செலுத்தி, இருந்த தேசத்தையும் இழந்து அன்னியருக்கும், அன்னிய மார்க்கத்தானுக்கும் அடிமைப்பட்டுப் போனார்கள்.
    தேவனை மறந்தார்கள். தேவனுடையவைகளை வெறுத்தார்கள்.
  • இக்காலத்திலும் கிறிஸ்துவின் மாட்சிமையையும், ராஜாங்கத்தையும், ஆளுகையயும் சபைகளில் வெளிபடுத்தி தேவனுடைய ராஜ்யத்தின் வருகைக்கு நேராக ஜனங்களை வழிநடத்த வேண்டிய மேய்ப்பர்கள் சுற்றிலும் உள்ள கலாச்சாரத்தினாலும், உபதேசங்களினாலும், நெருக்கங்களினாலும் உடைபட்டு, சிதைபட்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை தீட்டுபடுத்துகிறார்கள். இதனால் மேய்ப்பர்கள் மந்தையை துவம்சம் செய்கின்றனர். ஆடுகளுக்கு கொம்பை முளைக்கப்பண்ணி மேய்ப்பர்களோடு யுத்தம்பண்ன ஆண்டவரும் கிரியை செய்கிறார்.
  • மேய்ப்பர்களே மந்தயை தப்பவிடாத கொடிய ஓநாய்கள் மேய்ப்பனின் ரூபத்தில் சபைகளுக்குள் புகுந்துவிட்டதோ என்று அறிந்து அப்படிபட்டவர்களை களையெடுத்து ஆடுகளை நல்ல கொழுமையான மேடுகளில் மேய்க்க ஆயத்தமாகுங்கள்.
    மேய்ப்பனுக்கு கீழ்படியும் ஆடுகளே ஆடுகள்
  • ஆடுகளின் நன்மையை தேடுகிறவனே மேய்ப்பன்.
    கர்த்தாவே கொடிய மேய்ப்பர்களினால் கொடிய ஆடுகள் பிறப்பிக்கப்படுகின்றன. நல்ல மேய்ப்பர்களினால் ஆடுகள் சீர்திருத்தம் செய்யப்பட நல்ல மேய்ப்பர்களை எழுப்பும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME