தோமாவே, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.

தோமாவே, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு.

Thomas, put it into My side.Do not be unbelieving, but believing. (John 20:27) 

Matthew 17:17; Mark 9:19; Luke 9:41; Romans 4:19; Philippians 4:19; 2Corinthians 4:4; 2 Corinthians 6:14; 1Timothy 5:8; Hebrews 3:12,19; Revelation 21:8. 

பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். (யோவான் 20:27)

மத்தேயு 17:17; மாற்கு 9:19; லூக்கா 9:41; ரோமர் 4:19; பிலிப்பியர் 4:19; 2கொரிந்தியர் 4:4; 2கொரிந்தியர் 6:14; 1தீமோத்தேயு 5:8; எபிரெயர் 3:12,19; வெளி 21:8. 

அவிசுவாசம்.
அவிசுவாசம் என்பது விசுவாசம் இல்லாமை, நம்பிக்கையின்மை, பற்றின்மை, சார்ந்திருக்காமை, உண்மையில்லாமை என்று பலவாறாக பொருள் தருகின்றது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தோமாவிடம் கூறும்போது அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றுக் கூறினார். நீ என்னால் அழைக்கப்பட்டவன், தெரிந்துக் கொள்ளப்பட்டவன், என்னோடுகூட இருந்தவன், என் கட்டளைகளை சுமந்து செல்ல கட்டளை பெற்றவன். அப்படிபட்ட நீ அவிசுவாசிகளைபோல இராமல் விசுவாசியாயிரு என்று கூறுகிறார். 
விசுவாசம் என்பது தேவனால் துவக்கப்படுகிறதும், முடித்து வைக்கப்படுகிறதுமானது. அவிசுவாசமோ பிசாசினால் துவக்கப்படுகிறதும் முடித்து வைக்கப்படுகிறதுமாகும். விசுவாசம் என்பது தேவனை சார்ந்து வாழும் வாழ்க்கையாகும். அவிசுவாசம் என்பது தன்னையும், மாம்சத்தையும், உலகத்தையும், சாத்தானையும் சார்ந்து வாழும் வாழ்க்கையாகும். எனவே விசுவாசத்தில் நன்மை வாசமாயிருக்க, அவிசுவாசத்தில் தீமை வாசமாயிருக்கிறது. அவிசுவாசம் மரணத்துக்கும், விசுவாசம் ஜீவனுக்கும் வழி நடத்துகிறது. ஆகவே தேவனுடைய பிள்ளைகள் அவிசுவாசிகளுடன் பங்காளித்தனம் கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். விசுவாசத்துக்குள் வந்தவர்கள் திருடர்களோடும், விபசாரகார்களோடும், அந்நிய தெய்வ வணக்ககாரர்களோடும், பாவிகளோடும் ஒருமித்து பயணிக்க அனுமதியில்லை. அவர்களோடு வாரிக்கொள்ளப்படாதபடிக்கு அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்போமாக. 

தோமாவின் அவிசுவாசம் கிறிஸ்துவை பின்பற்றுகிற அனேகரின் தன்மைகளாயிருக்கிறது. அழிந்துபோகிற உலக நன்மைகளுக்காக ஆண்டவரை சார்ந்து வாழ்வது அவிசுவாசமாகும்.

கிறிஸ்துவைபோல பாடுகளையும், உபத்திரவங்களையும் அனுபவிக்க தயங்குவதும் விலகி செல்வதும் செழிப்பை பற்றி நிற்பதும் அவிசுவாசமேயாகும். சிலுவையை சுமந்து செல்லாமல் பின்னிட்டு செல்வதும் அவிசுவாசமேயாகும். சுவிசேஷ பணியை செய்யாமல் ஜனங்கள் இரட்சிக்கப்பட செயல்படாமல் இருப்பதும் அவிசுவாசமே. விவிலியத்தின் உண்மை தன்மையை மறுத்து பேசுவதும் சந்தேகிப்பதும் தாராள கொள்கை கொண்டிருப்பதும் அவிசுவாசமேயாகும். 

சோதித்து பற்றிக்கொள்ள நினைப்பது,ம், கண்டு விசுவாசிக்க நினைப்பதும், அனுபவித்து நம்ப முயல்வதும் அவிசுவாசத்துக்குள் வழிநடத்தும். கிறிஸ்துவை குறித்து சொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், கிறிஸ்துவினால் செய்யப்படுகிறவைகளை சந்தேகப்படுவதும் அவிசுவாசமேயாகும். 


விசுவாசம் தேவனோடும், தேவனுடைய பிள்ளைகளோடும், தேவனுடைய சபையோடும் தோழமை பாராட்டும். அவிசுவாசம் சாத்தானோடும், மாம்சத்தோடும், உலகத்தோடும், உலக ஐக்கியத்தோடும் தோழமை பாராட்டும். 

அவிசுவாச உலகத்தில்  மக்கள் மத்தியில் நாம் வாழ்ந்துக்கொண்டே அவர்களோடு பங்காளித்துவம் கொள்ளாமல் தேவனோடு உறவுக்கொண்டு வாழ்வதே விசுவாச வாழ்க்கையாகும். பாலும் தண்ணீரும் போலல்ல, எண்ணையும் தண்ணீரும் போல காணப்பட வேண்டும். 

சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம். எபிரெயர் 3:12-19.

ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. எபிரெயர் 6:4-8.

ADD YOUR COMMENT

Powered By Indic IME