அவர் வெளிப்படும்போது நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம்.
but we know that when He is revealed, we shall be like Him, for we shall see Him as He is. (1John 3:2)
Matthew 5:8; John 17:24; Romans 8:29; 1Corinthians 13:12; 1Corithians 15:49; 2Corithians 5:6-8; Philipians 3:21.
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். (1 யோவான் 3:2)
மத்தேயு 5:8; யோவான் 17:24; ரோமர் 8:29; 1கொரிந்தியர் 13:12; 1கொரிந்தியர் 15: 9; 2கொரிந்தியர் 3:18; 2கொரிந்தியர் 5:6-8; பிலிப்பியர் 3:21.
அவருக்கு ஒப்பாயிருப்போம்.
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பது உண்மையாயின் அவர்கள் தாங்கள் முன்னர் கொண்டிருந்த சரீரத்தை மகிமையின் சரீரமாகக் கொண்டிருப்பர் என்பது நமது நம்பிக்கையாகும். இயேசு கிறிஸ்துவும் மரித்து உயிர்த்த பின்பு அதே சரீரத்தையே கொண்டிருந்தார். அச்சரீரம் மகிமையின் சரீரமாக காணப்பட்டது. கிறிஸ்துவை போலவே மகிமையின் சரீரத்தை பெறும்படியான காலம் வைக்கப்பட்டுள்ளது. கடைசி எக்காளம் தொனிக்கும்போது அல்லது இயேசு கிறிஸ்து ஆகாயத்தில் வெளிப்படும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மகிமையின் சரீரத்தோடு அவரிடம் சேர்க்கப்படுவார்கள். அதேவேளையில் கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ்கின்ற தேவனுடைய பிள்ளைகளும் மகிமையின் சரீரத்தை பெற்று அவரிடம் சேர்க்கப்படுவார்கள். இந்த காட்சியானது நாம் அவரைப்போலவே காணப்படுகிறோம் என்பதற்கான அத்தாட்சியாகும்.
அவருக்கு ஒப்பாயிருப்பதற்கு ஒரு நிபந்தனை தரப்பட்டுள்ளது. அவருக்கு ஒப்பாக மாற்றப்படுவதற்கு அவரை தரிசிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். அவரை தரிசிப்பதற்கு தேவனுடைய பிள்ளைகளாக – வெளிச்சத்தின் பிள்ளைகளாக மாற வேண்டும். ஒளியினிடம் பிரவேசிக்க ஒளியின் பிள்ளைகளாகுதல் அவசியமாயுள்ளது. அவருடைய பிள்ளைகளாவதற்கு விசுவாசமும், கீழ்படிதலும் தேவைபடுகிறது. இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று முழு நிச்சயமாக நம்புவதே விசுவாசமாகும். கீழ்படிதல் என்பது அவரது கட்டளைகளுக்கு இணங்கி நடப்பதாகும். விசுவாசமும், கீழ்படிதலும் ஒரு மனிதனை கிறிஸ்துவுக்குள்ளாய் கொண்டு வருகிறது. இவர்களில் தேவன் தமது ஆவியை ஊற்றுகிறார். ஆவியினால் நிரப்பப்பட்டு தேவனை அப்பா பிதாவே என்று அழைக்கும் உரிமையை பெறுகின்றார்கள். இவர்களே தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மகிமையின் வெளிப்படுதலை தரிசித்து அவரைப்போல மாறுகின்றார்கள்.
அவருக்கு ஒப்பாக மாறியவர்கள் அவரைப்போலவே இருக்கிறார்கள். இதனைதான் பரலோகில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லையென்றும், அவர்கள் தேவதூதர்களைப் போலிருப்பார்கள் என்றும் இயேசு மத்தேயு 22:30ல் கூறுகின்றார். அங்கே மாறுபட்ட தன்மையும், வேறுபட்ட தன்மையும் காணப்படுவதில்லை. எல்லாரும் ஒன்று போலிருந்தாலும் தங்களின் ஆண்டவரை மட்டும் அடையாளம் காண்கின்றவர்களாகவும் அவரை தொழுது சேவிக்கிறவர்களாகவும் காணப்படுவர்.
கேல்வி. நீங்கள் தேவர்களைப்போல இருப்பீர்கள் என்று சர்ப்பம் கூறியதற்கும் இவ்வசனத்துக்கும் உள்ள தொடர்புகள் என்ன?..
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்;
தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். 2கொரிந்தியர் 5:1-9.