அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்
By this we know love, because He laid down His life for us. (1John 3:16)
1John 4:9,10; Matthew 20:28; John 3:16; John 10:15; John 15:13; Acts 20:28; Romans 5:8; Ephesians 5:1,2,26,27; Titus 2:14; 1Peter 1:18,19; 1Peter 2:24; 1Peter 3:18; Revalation 1:5; Revalation 5:9.
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1 யோவான் 3:16)
1யோவான் 4:9,10; மத்தேயு 20:28; யோவான் 3:16; யோவான் 10:15; யோவான் 15:13; அப்போஸ்தலர் 20:28; ரோமர் 5:8; எபேசியர் 5:1,2,26,27; தீத்து 2:14; 1பேதுரு 1:18,19; 1பேதுரு 2:24; 1பேதுரு 3:18; வெளி1:5; வெளி 5:9.
அன்பு என்பது உயிரை கொடுப்பது.
இயேசு கிறிஸ்து தம்மை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து அன்பை விளங்க செய்தார். இந்த அன்பை குறித்து விவிலியத்தில் பல தருணங்களில் பல முறைமைகளில் விவரித்து கூறுகின்றது. நியாயபிரமாணத்தின்படி வரப்போகிறவர் தமது ஜீவனைக் கொடுத்து மனுகுலத்தை மீட்பார் என்று தீர்க்கதரிசிகளின் மூலம் காலாகாலங்களில் கூறப்படுள்ளது. யோவான் ஸ்நானகன் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுகுட்டி என்று கூறினார். பிதாவாகிய தேவன் தள்ளப்பட்ட மனுகுலத்தினை மீட்டெடுக்கும்படி தமது ஒரேபேறான குமாரனை கொடுத்திருக்கிறார் என்று விவிலியம் கூறுகின்றது. இயேசுகிறிஸ்துவும் தம்மைதாமே பலியாக ஒப்புக்கொடுக்கப்பட இருப்பதாக பல தருணங்களில் கூறியிருக்கிறார். இயேசுவுக்கு பின்பு அவருடைய சீஷர்களும் பின்னடியார்களும் இயேசுவின் ஜீவனை கொடுத்த நிகழ்வை குறிப்பிட்டார்கள். இன்றுவரையிலும் கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு உயிர்பெற்றெழுந்தார் என்று பிரசங்கிக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய மீட்பின் செயலை 5 விதங்களில் தியானிக்கலாம். ஒன்று இது தீர்மானத்தின் அடிப்படையிலானது. தேவன் தமக்குள் தீர்மானித்தார் அல்லது சித்தம் கொண்டார். 2 வது கட்டளையின் அடிப்படையிலானது. இவ்விதம் செய்யும்படியாக தமது குமாரனுக்கும் , அறிவிக்கும்படியாக தீர்க்கதரிசிகளுக்கும் கட்டளையிட்டார். அதை சட்டமாக்கினார். அதுவே நியாயபிரமாணமாகும். 3 வது இது அன்பின் அடிப்படையிலானது. குமாரனிடம் தேவன் கொண்டிருந்த அன்பின் அடிப்படையிலானதல்ல, அழிந்து கொண்டிருக்கும் மனுகுலத்தின் மீது கொண்டிருந்த உள்மன அன்பாகும். என்றைக்கு மனுகுலம் பின்வாங்கி போயிற்றோ அன்று முதல் ஒரு தகப்பனைப்போல தன் பிள்ளைகள் திரும்பி வருவார்கள் என்று பொறுத்திருந்தார் தேவன். மனுகுலத்தின்மேல் கொண்ட அன்பினால் அவர்களை மீட்க தம் குமாரனை கட்டளைக்கு கீழ்படுத்தினார். 4 வது இது நம்பிக்கையின் அடிப்படையிலானது. தமது குமாரனால் மீட்கப்படும் ஜனம் தமது பிள்ளைகளாக தம்மை பின்பற்றி தம்மிடம் வந்து சேர்வார்கள் என்று இன்னும் நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறார். இந்த எதிர்பார்ப்பை தமது ஐந்துவித ஊழியர்கள் மூலம் நிறைவேற்றுகிறார். 5 வது இது இராஜ்யத்தின் அடிப்படையிலானது. தம்மிடம் சேர்க்கப்படும் ஜனங்களைக்கொண்டு தாம் தமது குமாரனுக்கு வாக்களித்துள்ள குமாரனின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கின்றார். அது அழிவில்லாததும், குறைகளில்லாததும், பழுதில்லாததுமான மகிமையின் இராஜ்யமாகும்.
இந்த 5 காரியங்களில் 3 வது செயலையே யோவான் இவ்விடத்தில் குறிப்பிடுகின்றார். தேவன் தமது குமாரனின் இராஜ்யத்தை ஸ்தாபிக்கும்படியாக தமது குமாரனை மனுகுலத்தின் மீட்புக்காக தந்தார். அன்பு இரண்டு விதங்களில் வெளிப்பட்டது. தமக்கு பிரியமானதும் நேசமானதும் உயிரோட்டமுமான குமாரனை கொடுப்பதின் மூலம் தேவன் அழிந்துபோகும் மனுகுலத்தின் மீது கொண்டுள்ள அன்பை வெளிபடுத்துகின்றது. தேவன் தாம் மரணமடையாமல் தன் உயிரை கொடுத்தார். கிறிஸ்து தாம் மரணமடைந்து தம் உயிரை கொடுத்தார்.
கேள்வி. தேவன் மனுகுலத்தை மீட்கும்படியாக அன்பு காட்டியதின் அடிப்படை நோக்கம் என்ன?.
அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:6-10.