அவர் சொல்லுகிறது இன்னதென்று விளங்கவில்லையே
They said,What is this that He says,A little while? We do not know what He is saying. (John 16:17,18)
Mark 9:10,32; Luke 9:45; Luke 18:34; Matthew 16:9-11; Luke 24:25; Hebrews 5:12; John 16:1,5,19; John 12:16.
அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி: (யோவான் 16:17)
கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.
(யோவான் 16:18)
மாற்கு 9:10,32; லூக்கா 9:45; லூக்கா 18:34; மத்தேயு 16:9-11; லூக்கா 24:25; எபிரெயர் 5:12; யோவான் 16:1,5,19; யோவான் 12:16.
விளங்கி கொள்ளாத இருதயம்:
இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து வந்தவராகையினால் பரலோகத்துக்கடுத்த காரியங்களையே பேசினார். இயேசுவின் உபதேசங்கள் உவமைகளாகவும், அடையள மொழிகளாகவும் காணப்பட்டது. இஸ்ராயேலரிடையில் காணப்பட்ட பலவிதமான இனகுழுக்கள் அவரின் உபதேசத்தை அவர்களுக்கேற்ற மாதிரியாக புரிந்துக் கொண்டனர். இதனால் கர்த்தராகிய இயேசு எல்லாராலும் வெறுக்கப்படவும், பகைக்கப்படவும் தக்கவரானார்.
இயேசுவைப் பின்பற்றிய சீஷர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவருடைய உபதேசங்களை அறியாதிருந்தாலும் அவரோடுள்ள நெருக்கத்தினிமித்தம் கேட்டு அறியக்கூடியவர்களாயிருந்தனர். ஆனாலும் பல விஷயங்கள் அவர்களுக்கு மறைபொருளாகவே காணப்பட்டது. எப்பொழுது பரிசுத்த ஆவியின் நிறைவையும், அபிஷேகத்தையும் பெற்று கொண்டார்களோ அப்பொழுது இவைகளின் பொருளை அறிந்துக் கொண்டனர். விசுவாசத்தில் உறுதிபட்டனர். உலகமுழுவதற்கும் சாட்சிகளாக மாறினர்.
ஜென்ம சுபாவத்தினாலும், மாம்ச சுபாவத்தினாலும் நிரப்பப்பட்ட இருதயம் கிறிஸ்துவின் உபதேசங்களை விளங்கிக்கொள்ள இயலாது. அதைபோலவே பிறசமய கருத்துக்களினாலும், தத்துவ கருத்துக்களினாலும், உளவியல் கருத்துக்களினாலும் , விஞ்ஞான கருத்துக்களினாலும் நிரப்பப்பட்ட இருதயம் ஒருபோதும் கிறிஸ்துவின் உபதேசங்களை விளங்கிக்கொள்ள இயலாது. அப்படியே மூல ஆராய்ச்சி போன்றவைகளினால் விளங்கி கொள்ள முயன்றாலும் ஆவியின் சிந்தையை ஒருவராலும் அறிய இயலாது.
தவறான வெளிப்பாடுகள், தவறான புரிந்துக்கொள்ளுதலகள் விவிலியத்தின் மாண்பையும், பொருளையும் சிதைத்து தேவனை கோபமடைய செய்கின்றது. எளிமையாய் சொல்லப்பட்டுள்ள செய்தியை எளிமையாக விளங்கிக்கொள்ள முன் வரவேண்டும். ஆழம் தேடப்போய் மூழ்கிப்போய் விடலாகாது.
தேவனுடைய ஆவியினாலேயன்றி ஒருவரும் தேவனுக்குரியவைகளை அறியான். நாம் பரிசுத்த ஆவியை பெற்றிருந்து கிறிஸ்துவுக்கு கீழ்படிந்தும் தேவனுக்கு பயந்தும் வாழ முயலுவோம்.
நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். எபிரேயர் 5:11-14.