அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழக்கவில்லை. தேவ சித்தமாயிருக்கிறது.
All He has given Me I should lose nothing,but should raise it up at the last day. (John 6:39)
Jn10:37-40; Jn17:12; Jn18:9; Col3:3,4; 1Tim5:22; 2Tim1:5,6; 1Pet1:5; Judah1:1; Ro8:11,28-39; 2Tim2:19.
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. (யோவான் 6:39)
யோவான் 10:37-40; யோவான் 17:12; யோவான் 18:9; கொலோசெயர் 3:3,4; 1தீமோத்தேயு 5:22; 2தீமோத்தேயு 1:5,6; 1 பேதுரு 1:5; யூதா 1:1; ரோமர் 8:11,28-39; 2தீமோத்தேயு 2:19.
கொடுக்கபட்டதை இழக்கவில்லை:
கொடுக்கிறவர் தேவன். நாம் பெற்றுகொள்ளும் இடத்தில் இருக்கிறோம். நாம் கொடுக்கிறவர்கள் அல்ல, பெறுகிறவர்கள் மட்டுமே.பகிர்ந்து கொடுப்பவர்கள். தேவன் தம்மிஷ்டபடி தனக்கு பிரியமானவனுக்கு கொடுக்கிறார் என்பது உண்மை. கொடுத்துவிட்டு யோசிப்பவர் தேவன் அல்ல, ‘நாம் அறியாம கொடுத்துவிட்டோமே’ என்று சொல்லுகிறவர் அல்ல. பெற்றுக்கொண்டவர் தராதரமற்றுபோனால் கொடுத்தவரின் தெரிந்துகொள்ளுதல் தவறானதல்ல. பெற்றுக்கொண்டவர்கள் அதற்குரிய பொறுப்பை அவமதித்து விட்டார் என்றே பொருளாகும். தேவனுக்கு அது தெரியும். தெரிந்தும் அவனுக்கு கொடுத்தார்.பெற்றுக்கொண்டவர்கள் பெற்றுக்கொண்டதைக்குறித்த சரியான தெளிவு பெற்றிருக்க வேண்டும். உண்மை, உத்தமம், நேர்மை, பிறர் நல பயன்பாட்டில் தேறியிருத்தல் போன்றவை அவசியம்.
தேவன் கொடுப்பதில் 2 வகையுண்டு.
1. தனிபட்ட நன்மைகள் சார்ந்தது. இதற்கு அளவீடு உண்டு. இது குடும்பம், தனித்துவம் சார்ந்தது.
2. பொதுநலம் சார்ந்த நன்மைகள் சார்ந்தது. இதற்கு அளவீடு கிடையாது. தாராளமாகவும், பூரணமாகவும் கொடுக்கிறார். இந்த இரண்டாம் வகை அனேகமாக சபை சார்ந்ததாகவே இருக்கும்.
நாம் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்குமுன்பு நாம் எதற்காய் பெற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறோம் என்பதை குறித்த நம்பிக்கையை, நமக்கு கொடுக்கும் தேவன் எதிர்பார்ப்பார்.
இயேசுகிறிஸ்து பிதாவினிடமிருந்து தனக்கென்று கிடைத்தவைகளை உடைமையாக்கி கொள்ள துணியாமல் எல்லாம் இழந்து வெளிப்பட்டார். அவரிடம் மகிமை, ஆற்றல், ஞானம் போன்றவைகள் இருந்தும் பொதுஜன பயன்பாடு சார்ந்த இரட்சிப்புகென்றே செயல்பட்டார். அவருடைய தெய்வீகதன்மையை வெளிபடுத்த விரும்பவில்லை.
மாம்சீக – உலகார்ந்த ஆளுகை சார்ந்த எவற்றையும் பின்பற்றவில்லை. தம்மை பின்பற்றுகிறவர்கள் பலபாடுகளை அடைவர் என்று அறிந்தும் அவர்களை காப்பதற்கு Theocentric சார்ந்த பரிசுத்த ஆவியையே நியமித்துள்ளார். அவரே Gaurding Spirit ஆவார்.
தேவசித்தம் பரிபூரணமாக நிறைவேற்றியதினால்தான் தேவன் அவரை எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தினார். இயேசு தமக்கு கொடுக்கபட்ட பாடுபடும் தாசன் என்ற நிலையை ஏற்றுகொண்டதினால் அனேகரை கொள்ளாபொருளாக சம்பாதித்தார் என்று ஏசாயா 53:12 கூறுகின்றது.
தேவன் அவருக்கு எதை, எவைகளைக் கொடுத்தாரோ அதை, அவைகளை அவர் இழக்கவில்லை.
கர்த்தாவே, நாங்கள் உங்கள் குமாரனின் மூலமாக பெற்றவைகளைகொண்டு உண்மையாய் உழைக்க விரும்புகிறீர். இடறிவிழும்படியானவைகளில் நாங்கள் ஈடுபடாமல் தேவனுடைய நாமமும், கிறிஸ்துவின் சபையும் மகிமைபடும்படியாக மட்டுமே செயல்பட்டு எங்களுக்காய் உன்னதத்தில் வைத்துள்ள ஜீவகிரீடத்தை பெற தொடர்ந்து ஓட பெலந்தாரும்.