அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

He is faithful and just to forgive us our sins. (1John 1 :9)

Deu 7:9,10; Lam 3:23; Isaiah 45:21; Zechariah 9:9; 1Corinthians 1:9; 1 Timothy 1:15; Hebrew is 10:23; Hebrews 11:11; Hebrew is 6:10; Revelation 15:3.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)

உபாகமம் 7:9,10; புலம்பல் 3:23; ஏசாயா 45:21; சகரியா 9:9; 1கொரிந்தியர் 1:9; 1 தீமோத்தேயு 1:15; எபிரெயர் 10:23; எபிரெயர் 11:11; எபிரெயர் 6:10; வெளி 15:3.

நம்பிக்கைக்குரிய தேவன்.

உண்மையுள்ளவர் என்பதற்கு நம்பிக்கைக்குரியவர் என்றும், நீதியுள்ளவர் என்பதற்கு தேவனுக்கு பிரியமானவர் குற்றமில்லாதவர் தேவ கட்டளைகளை பின்பற்றுகிறவர் என்றும் பொருள் கொள்ளலாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்ததினிமித்தம் எல்லா மனிதர்களையும் போன்றவராகவே காணப்பட்டார் என்பதை விவிலியம் ஒத்துக்கொள்ளவில்லை. பாவம் உண்டாகுமுன்பதாக காணப்பட்ட ஆதிமனிதர்களைபோலவே இயேசு கிறிஸ்து காணப்பட்டார். ஆகையினால்தான் இயேசுவை இரண்டாம் ஆதாம் என்று விவிலியம் கூறுகின்றது.

மனுகுலத்தின் பாவங்களை மன்னிக்கவும், பாவ அழுக்குகளை நீக்கி சுத்தமாக்கவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார். மனிதர்கள் இயேசுகிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வைப்பதற்காகவே இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தினால் உண்டாகும் நீதியை உடையவராயிருந்து தேவனுக்கு பிரியமானவரென்று சாட்சிப் பெற்றார்.

மனிதர்களை இரட்சிக்க அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து தம்மை அனுப்பியவரின் நம்பிக்கைக்குரியவராயிருந்தார். மனிதர்களில் காணப்படும் பாவங்களை நீக்கி இரட்சிக்க தம்மை நம்பி வருவோருக்கும் நம்பிக்கைக்குரியவராயிருக்கிறார்.

ஆதாம் தேவனுடைய நம்பிக்கைக்குரியவராக விளங்கவில்லை. ஆதாமின் மூலம் விழுந்துபோன மனுகுலத்தை மீட்டெடுப்பதற்கு இஸ்ராயேலர்களை தெரிந்தெடுத்து, பிரமாணத்தைக் கொடுத்து அவர்களை நம்பிக்கைக்குரியவர்களாக விளங்க செய்ய எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே தேவன் தமது ஒரேபேறான குமாரணை மனுகுலத்தினூடே இந்த பூமிக்கு அனுப்பி தமக்கு நம்பிக்கைக்குரியவராக ஆக்கிக்கொண்டார். ஆகையினால் மனுகுலத்தின் மீட்புக்காக தமது மகனை பலியாகக் கொடுத்தார். இப்பொழுது இரசிட்சிப்புக்கான நம்பிக்கை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே .

இயேசு கிறிஸ்து நம்பிக்கைக்குரியவர் என்பதை எதன்மூலம் நிரூபித்தார்.?
தம்மை அனுப்பிய பிதாவின் அடிப்படையை விட்டு இறுதிவரையிலும் விலகாதிருந்தது.
தம்மை நம்பியவர்களை மீட்டு தேவனுடைய சாயலாகவும், தேவனுடைய குணங்கள் உடையவர்களாகவும் மாற்றுவதன் மூலம்.
மீட்கப்பட்டவர்களை தமது இராஜ்ஜியத்தின் வாக்கை கொடுத்து இறுதியில் தமது இராஜ்ஜியத்திலே சேர்த்துக் கொள்வதினால்.

சில கேள்விகள்…
இயேசு கிறிஸ்துவை தவிர பூமியில் உள்ள எந்த தெய்வங்களும் நம்பிக்கைக்குரியவர்கள் இல்லையா?
கிறிஸ்துவின் நம்பிக்கைக்குரியவராயிருக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இயேசு கிறிஸ்துவை கொண்டு சகலவற்றையும் செய்து முடித்த தேவனுக்கு சபையாகிய நம்மை ஏன் நம்பவேண்டும்?

வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை அப்போஸ்தலர் 4:11,12.

ADD YOUR COMMENT

Powered By Indic IME