அவர்கள் உலகத்துக்குரியவர்கள், உலகம் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

அவர்கள் உலகத்துக்குரியவர்கள், உலகம் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

They are of the world. Therefore they speak as of the world, and the world hears them. (1John 4:5)

Luke 16:8; John 3:31; John 7:6,7; John 8:23; John 15:19,20; John 17:14,16; 2Timothy 4:3; 2Peter 2:2,3; Revalation 12:9.

அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். (1 யோவான் 4:5)

லூக்கா 16:8; யோவான் 3:31; யோவான் 7:6,7; யோவான் 8:23; யோவான் 15:19,20; யோவான் 17:14,16; 2தீமோத்தேயு 4:3; 2பேதுரு 2:2; வெளி 12:9.

உலகத்துக்குரியவர்கள்.

5 ஆம் வசனத்தையும், 6 ஆம் வசனத்தையும் இணைத்துப்பார்க்கும்போது உலகத்துக்குரியவர்கள் தேவனால் பிரந்தவர்களல்ல என்றும் அவர்கள் உலகத்தாலும் , மாம்சத்தாலும், பிசாசினாலும் உண்டானவர்கள் என்றும் அறியமுடிகின்றது. உலகத்துக்குரியவர்கள் உலகத்தைக் குறித்தே பேசுவார்கள், நாட்டைக்குறித்துப் பேசுவார்கள், காட்டைக் குறித்துப் பேசுவார்கள். இயற்கை ஆர்வலர்கள் அதைக் குறித்தே பேசுவார்கள். மிருக ஆர்வலர்கள் அவைகள் குறித்துப் பேசுவார்கள். மாசத்துக்குரியவர்கள் மாசத்துக்கேற்றவைகள் குறித்துப் பேசுவார்கள்.

உல்கத்துக்குரியவர்கள் உலகத்தைக் குறித்துப் பேசக் காரணம் என்ன?. உலகம் அவர்களுக்கு செவிகொடுக்கிறது. ஒருவருக்கு இசைந்தவாறு பேசும்போது அவர்கள் அப்படி பேசுகிறவரோடு ஐக்கியமாயிருப்பார்கள். அதுபோலவே உலகத்துக்குரியவர்கள் தங்களுக்குள் ஐக்கியமாயிருக்கிறார்கள். அவர்கள் ஒரே மனமாய் ஒன்றையே சிந்தித்து அதை நிறைவேற்றப் பிரயாசப்படுகிறார்கள். இதேபோலொத்த நிலைமையை சாலொமோன் ஞானி கண்டதாகக் கூறுகின்றார். நீதி 1:10-19. சாலொமோனின் தகப்பன் தாவீது இராஜாவும் சங்கீதத்தில் இவ்வாறு கூறுகின்றார். சங்கீதம் 2:1-5.

மாசத்தில் வந்த இயேசுவை அறிக்கை பண்ணாதவர்களும், கள்ளதீர்க்கதரிசிகளுமானவர்கள் உலகத்துக்குரியவர்கள். ஆகையினால்தான் இவ்வுலக லோகாதிபதிக்கு இசைவாக நடந்துக் கொள்ளுகிறார்கள். அழியவேண்டியவைகள் என்று விவிலியம் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளாமல் இவ்வுலகத்தின்மேல் அதிக ஆர்வம் கொண்டவர்களாயுள்ளனர். உலக வழக்கப்படி வாழ்வதற்கு தங்களை அடிமைப்படுத்திக் கொண்டவர்கள். ரோமர் 1 ஆம் அதிகாரத்தில் பவுல் சொல்லியுள்ளபடி இவர்கள் இப்படி நடக்கும்படியாக தேவன் அவர்களை அத்தகையவற்றுக்கு ஒப்புக்கொடுத்துள்ளார்.

தேவனுடைய மனிதர்கள் உலகத்துக்குரியவர்களாய் தங்களைக் காண்பித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களை யாவரும் கவனிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியாகவும், மிடுக்காகவும், ஆடம்பரமாகவும் வாழ தலைப்படுகிறார்கள். இவர்களில் இயேசு இருந்திருந்தால் இயேசுவை வெளிப்படுத்தவே முயற்சித்திருப்பார்கள். இவர்களுக்குள் உலகம் குடிகொண்டதினிமித்தம் உலகத்தின் மாண்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். வாயிலே தேவனுடைய வாக்கைப்பேசிக்கொண்டு வாழ்க்கையிலே இயேசுவைப்போல எளிமையாக வாழ விரும்பாத மாய்மாலக்காரர்களாயுள்ளனர்.

உல்கம் தனக்குரியதை வெளிப்படுத்தட்டும். மாம்சத்துக்குரியவர்கள் மாசத்தின் அழகை வெளிப்படுத்தட்டும். பிசாசுக்குரியவர்கள் பிசாசின் குணங்களை வெளிப்படுத்தட்டும். ஆனால் கிறிஸ்துவுக்குரியவவர்களோ கிறிஸ்துவை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.

நீவிர் ஆயத்தமா… ஆயத்தப்படும்.. பிறரை ஆயத்தப்படுத்தும்.

கேள்வி. விவிலியபடி ஐசுவரியத்துக்கும் ஆடம்பரவாழ்வுக்கும் தொடர்பு உண்டா?..

என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்; என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.

பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். நீதிமொழிகள் 1:10-19.

ADD YOUR COMMENT

Powered By Indic IME