அவரோடுகூட இரண்டுபேரை இயேசுவை நடுவிலுமாகச் சிலுவையில் அறைந்தனர்

அவரோடுகூட இரண்டுபேரை இயேசுவை நடுவிலுமாகச் சிலுவையில் அறைந்தனர்.

where they crucified Him,two others with Him,one on either side,Jesus in the center. (John 19:18)

Matthew 27:38,44; Mark 15:27,28; Luke 23:39-43; Galathians 3:13; Hebrew 12:2; Psalm 22:16; Isaiah 53:12; Revelation 12:10. 

அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். (யோவான் 19:18)

மத்தேயு 27:38,44; மாற்கு 15:27,28; லூக்கா 23:39-43; கலாத்தியர் 3:13; எபிரெயர் 12:2; சங்கீதம் 22:16; ஏசாயா 53:12; வெளி 12:10. 

குற்றவாளிகளின் நடுவில் இயேசு. 
கர்த்தராகிய இயேசுவோடுகூட சிலுவையில் இரண்டு கள்வர்களை – குற்றவாளிகளை சிலுவையில் அறைந்தனர். இயசுவை அக்கிரமகாரர்களில் ஒருவராகவும், குற்றவாளிகளில் ஒருவராகவும், காண்பிப்பதற்காக இப்படிச் செய்தார்கள். இந்த செயல் உரோம சட்டத்தின்படியா? அல்லது பிலாத்துவின் யோசனையா? அல்லது போர்வீரர்களை தூண்டிவிட்ட யூதர்களின் செயலா என்று நிதானிக்க முடியவில்லை. எப்படியும் இயேசு குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். 

இயேசுவுக்கு பின்வரும் சந்ததிகள் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக பிசாசானவன் செய்த செயலாகவும் இருக்கலாம். ஆனால் தேவன் அவருக்கு அநேகரை பங்காகக் கொடுக்கப் போகிறார் என்பதை பிசாசு அன்று அறிந்திருக்கவில்லை. 

உலகத்தில் வந்த இயேசு உலகத்தால் நிராகரிக்கப்பட்டார். இஸ்ராயேலரிடையில் வந்த இயேசு இஸ்ராயேலரால் நிராகரிக்கப்பட்டார். குற்றவாளிகள் மத்தியில் அறையபட்ட இயேசு பாவிகளாலும், துன்மார்க்கர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதை லூக்கா ஆசிரியர் கூறுகின்றார். 

மனிதர்கள் ஒருவரை குற்றவாளியாக்குவதினாயோ, சட்டம் ஒருவரை குற்றவாளியாக்குவதினாயோ, சமுதாயம் ஒருவரை குற்றவாளியாக்குவதினாயோ அந்நபர் குற்றவாளியாவதில்லை. குற்றம் செய்வதினாலேயே மாத்திரம் தான் அந்நபர் குற்றவாளியாகின்றார். இயேசு கிறிஸ்து குற்றம் செய்யவில்லை. ஆகவே அவர் குற்றவாளியாக்கப்பட்டாலும் குற்றவாளியாவதில்லை. 

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தேவனுடைய பிள்ளைகள் பொல்லாங்கனுக்குள் விழுந்து கிடக்கும் உலகத்திலும், தீயை வாரி இறைக்கும் மனுபுத்திரருக்குள்ளும், சீர்கெட்ட சமுதாயத்துக்குள்ளும், நீதி தவறிபோன அரசாங்கத்துக்குள்ளும், இருட்டறையாகிப்போன சட்டங்களுக்குள்ளும் அகப்பட்டு சிக்கிதவித்து  குற்றவாளியாக்கப்பட்டாலும் குற்றவாளியாவதில்லை. ஏனெனில் அவர்களை நீதிமானாக்குகிறவர் அவர்கள் அருகில் இருக்கிறார். அநீதி செய்கிறவர்களுக்கு நீதியுள்ள தீர்ப்பு செய்ய இயேசு கிறிஸ்து வரப்போகின்றார். 

நாம் எங்கு இருக்கிறோம் என்பதல்ல முக்கியம், நாம் எப்படியிருக்கிறோம் என்பதுவே முக்கியம். 
நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். 
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. 
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. புறம்பே இருக்கிறவர்களைக்குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக்குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள். 1கொரிந்தியர் 5:7-13.

ADD YOUR COMMENT

Powered By Indic IME