இயேசுவின் சீஷனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய யூதாஸ்.
But one of His disciples, Judas Iscariot, Simon’s son, who would betray Him. (John 12:4)
Jn6:70,71; Jn13:2,26; Jn18:25; Mt10:4; Mt26:8; Mk3:19; Mk14:4; Lk6:16; 1Sam17:28,29; Ecc4:4.
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: (யோவான் 12:4)
யோவான் 6:70,71; யோவான் 13:2,26; யோவான் 18:25; மத்தேயு 10:4; மத்தேயு 26:8; மாற்கு 3:19; மாற்கு 14:4; லூக்கா 6:16; 1சாமுவேல் 17:28,29; பிரசங்கி 4:4.
யூதாஸ்:
யூதாஸ் என்றச் சொல் யூதா என்றச் சொல்லிலிருந்து வந்ததாகையினால் அவர் துதிக்கப்படத்தக்கவர் என்று பொருளாகின்றது. யூதாஸ் குறித்த விவிலிய குறிப்புகள் சிலவற்றை இந்த நாளில் தியானிக்கலாம். நறுமணம் வீசும் பரிமளதைலத்தின் மத்தியில் துர்மணம் வீசும் ஒரு களை.
யூதாஸ்……
இயேசுவின் சீஷனாயிருந்தான். மத்தேயு 10:4; அப்்போஸ்தலர 1:17.
இயேசுவை காட்டிக்கொடுக்கிறவனாயிருந்தான். மாற்கு 3:19.
30 வெள்ளிக்காசுக்கு ஆசைப்படுகிறவனாயிருந்தான். மத்தேயு 26:15.
இவன் முத்தம் செய்து காட்டிக்கொடுக்கிறவனாயிருந்தான். மத்தேயு 26:49.
இவன் துரோகி என அழைக்கப்படுகிறான். லூக்கா 6:16.
தனக்குள் சாத்தான் நுழைய இடம் கொடுத்தான். லூக்கா 26:3.
இவன் பிசாசாயிருக்கிறான். யோவான் 6:70.
அவன் திருடன் என அழைக்கப்படுகிறான். யோவான் 12:6.
இவன் பணப்பையை சுமக்கிறவனாயிருந்தான். யோவான் 13:29.
இயேசுவின்மேல் தன் குதிகாலை தூக்கினவன். யோவான் 13:18; சங்கீதம்41:9.
இவன் கேட்டின் மகன் என்று அழைக்கப்படுகிறான். யோவாான் 17:12.
இவன் மனஸ்தாபப்பட்டான். மத்தேயு 27:3-10.
இவன் மனஸ்தாபப்பட்டும் மனந்திரும்ப மனமில்லாமல் தற்கொலை செய்து கொண்டான். அப்போஸ்தலர் 1:18.
இவன் கண்காணிப்பை இழந்தவன் என்ற பெயர் பெற்றான். அப்போோஸ்தலர் 1:20.
உள்ளத்தில் ஒன்றைவைத்துக்கொண்டு உதட்டில் புன்னகையுடனும், வாயில் நல் வார்த்தைகளுடனும், வெளி வேஷத்தில் பரம யோக்கியன்போலும் நடந்துகொண்ட யூதாஸின் சிந்தனைகளை அறிந்திருந்தும் அவனை தன்னிடமாய் வைத்துக் கொண்டார். வார்த்தைகளினாலும், நற்செயல்களினாலும் அவனை நேசித்து, கடிந்துகொண்டு மனந்திரும்பும்படியாய் பல தருணங்களை அவனுக்குக் கொடுத்தார். அப்படியிருந்தும் தனக்குள் சாத்தான் நுழையும்படி பிசாசுக்கு இடம் கொடுத்தான். பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள் என்று சொல்லியும், பிசாசை எதிர்த்து நிற்க – பிசாசின் கிரியைகளை எதிர்த்து நிற்க துணிவில்லாமல் பிசாசின் ஆலோசனைக்குள் விழுந்தான்.
நாமும் பிசாசின் யோசனைகளுக்கு ஆமாம் சாமி போட்டு வாழ்வோமானால் ஒருநாள் அவன் நமக்குள் பிரவேசித்து நம்மையும் கழுமரம் எற்றவைப்பான். எச்சரிக்கை.
நேர்மறை சிந்தை… நேர்மறை பேச்சு.
நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு – துர்மனசாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேர்க்கடவோம். எபிரெயர் 10:22.