அவரின் வஸ்திரங்களை எடுத்து ஒவ்வொருபங்காக நாலு பங்காக்கினாஅவரின் வஸ்திரங்களை எடுத்து ஒவ்வொருபங்காக நாலு பங்காக்கினார்கள்கள்

அவரின் வஸ்திரங்களை எடுத்து ஒவ்வொருபங்காக நாலு பங்காக்கினார்கள்.

Soldiers took His garments and made four parts,to each soldier a part,and also the tunic.  (John 19:23)

Matthew 27:35; Mark 15:24; Luke 23:34; 1Kings 11:29-39; Psalm 22:18; Mark 14:52; 2Corinthians 5:3; Hebrew 4:13; Revelation 3:17,18; Revelation 16:15.

போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. (யோவான் 19:23)

மத்தேயு 27:35; மாற்கு 14:52; மாற்கு 15:24; லூக்கா 23:34; 1இராஜாக்கள் 11:29-39; சங்கீதம் 22:18; 2கொரிந்தியர் 5:3; எபிரெயர் 4:13; வெளி 3:17,18; வெளி 16:15.

நிர்வாணமாக்கப்பட்ட இயேசு:
இயேசு அணிந்திருந்த உள்ளான வஸ்திரங்கள் நான்கு என்றும், அதனால்தான் நான்கு போர்வீரர்களும் தங்களுக்குள் அதை பங்கிட்டுக்கொண்டனர் என்றும் கூறப்படுகின்றது. அவரின் மேலங்கியை சீட்டு போடுதலுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். இதினிமித்தம் இயேசு கோவணம் கட்டப்பட்ட நிர்வாணியாக்கப்பட்டார் என்று அறியலாம். 

வஸ்திரம் அல்லது உடை என்பது நிர்வாணத்தை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒன்று. இயேசு கிறிஸ்து தேவசாயலை உடையவராக இருந்தாலும் மனிதனாக வந்ததினிமித்தம் உடை கொண்டு மூடலையும் தெரிந்துக் கொண்டார். இப்பொழுது அவருடைய உடையையும் பிடுங்கிக் கொண்டார்கள். அவர் பிறப்பதற்கு இடம் தராத உலகம் அவர் தங்குவதற்கு இடம் தராத உலகம் அவரின் அங்கவஸ்திரங்களையும் பிடுங்கிக் கொள்கின்றது. 

தேவசாயலாக்கப்பட்ட மனிதன் பாவம் செய்து தேவசாயலை இழந்து நிர்வாணியானான். அவனது நிர்வாணம் காணப்படாமலிருக்க தோலுடைகளை செய்துக் கொடுத்தார் தேவன். என்றாலும் திரும்பவும் பாவம் செய்து நிர்வாணியானான். தேவன் இரக்கமுள்ளவராயிருப்பதினால் அவனது நிர்வாணம் மூடப்படும்படியாக பிரமாணங்களைக் கொடுத்தார். பிரமாணங்களை பெற்றிருந்தும் திரும்பவும் பாவம் செய்து நிர்வாணியானான் மனிதன். தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராயிருப்பதினால் தமது மகனை அனுப்பி மகனின் இரத்தத்தால் பாவமனிதனின் நிர்வாணத்தை மூடினார். 

பாவத்தினால் உண்டான நிர்வாணத்தை மூட விரும்பிய தேவன் தமது மகன் நிர்வாணமாக்கப்படுவதை கண்டு மனம் வருந்தினார். 
நேர்மையாய் நடக்கிற மனிதர்கள் மீது பாவகறைகளை வாரி இறைத்து அவர்களை நிர்வாணமாக்குவது சாத்தானின் வேலையாகும். சாத்தானின் பணியை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூச்சமில்லாமல் செய்கிறார்கள். இயேசு நேர்மையுள்ளவராயிருந்தும் அவர்மேல் குற்றம் சுமத்தி வஸ்திரத்தையும் உரிந்து அவரை நிர்வாணமாக்கினார்கள். அவருடைய வஸ்திரத்தை பங்கிட்டும் சீட்டுபோட்டும் எடுத்துக் கொண்டு தங்கள் நிர்வாணத்தை மூடுகிறார்கள். ஆம் இயேசுவினால் கிடைக்கும் இரட்சிப்பின் வஸ்திரம் என்ற தேவசாயல் நமது பாவங்களினால் உண்டான நிர்வாணங்களை மூடி நம்மை தேவபுத்திரர்களாக விளங்க செய்கிறது. 

பாவத்தால் நிர்வாணமாக்கப்பட்டவன் இயேசுவை நிர்வாணமாக்க துடிக்கின்றான். 

நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய். 

நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி, சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து, உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு, உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்.. இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய். உன் அழகினாலே உன் கீர்த்தி புற ஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 16:8-14.

ADD YOUR COMMENT

Powered By Indic IME