சாட்சியை

அவரின் சாட்சியை ஏற்பவன் தேவன் சத்திய பரர் என்று நம்புகிறான்.

He who has received His testimony has certified that God is true.(John 3:33)
Jn7:28; Jn17:8; Ro3:3,4; Ro4:18-21; 2Co1:18; 1The5:24; heb6:17; 1Jn5:9,10; Ps19:7; Ps81:8; Pr4:10; Isa8:16; Jer32:10.

அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். (யோவான் 3:33)

யோவான் 7:28; யோவான் 17:8; ரோமர் 3:3,4; ரோமர் 4:18-21; 2கொரிந்தியர் 1:18; 1தெசலோனிக்கேயர் 5:24; எபிரெயர் 6:17; 1 யோவான் 5:9,10; சங்கீதம் 19:7; சங்கீதம் 81:8; நீதிமொழிகள் 4:10; ஏசாயா 8:16; எரேமியா 32:10.

சாட்சியங்களை ஏற்பவன்:
இயேசு யார் என்று அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவின் சாட்சி உரைகளை உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படிபட்டவரே தேவன் சத்தியமுள்ளவர் என்று நம்புகிறவர். இயேசுவை நம்பாமல், அவரின் சாட்சியங்களை நம்பாமல் தேவனை சத்தியமுள்ளவராக காணவியலாது. யோவான் 14:1 ல் தேவனிடத்திலும், தன்னிடத்திலும் விசுவாசமாயிருக்க இயேசு கூறினார்.
இஸ்ராயேலர் தேவனை நம்பினர். மோசேயை நம்பினர். நியாயபிரமானத்தை நம்பினர். ஆனால் அவைகளில் குறிப்பிடபட்டுள்ள இயேசுவை நம்பவில்லை. எனவே, அவர்கள் தள்ளபட்டனர்.
தேவன் சத்தியமுள்ளவர் என்ற அறிவு இயேசுவே சத்தியம் என்று அறிகிற அறிவில்தான் வருகிறது.
இயேசுவுக்கு வெளியே யாவும் அசத்தியம்.
ப.ஏ நூல்கள் மட்டுமே இயேசுவை பிதாவின் சாயலாகவும், பிரதிநிதியாகவும் காண்பிக்கின்றது.

தேவன் சத்தியமுள்ளவர்:
1. அவரின் அசரீரி வார்த்தைகளில் உண்மையை விளங்க செய்தார்.
2. வாக்குதத்தங்களில் உண்மையை விளங்க செய்தார்.
3. நியாயபிரமணங்களில் உண்மையை விளங்க செய்தார்.
4. அவர் சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும்.
5. அவர் சொல்லியும் செய்யாமலிருப்பாரோ?
6. அவர் மனம் மாறுகிறவர், வார்த்தையை மாற்றுகிறவர் அல்ல.
7. கொடுத்த வாக்கை நிறைவேற்றுகிறவர்.

கர்த்தாவே, நாங்கள் உம்முடைய சத்தியத்தை அறிய உம் குமாரன் மூலம் எங்களுக்கு இரட்சிப்பை தந்தீர். எனவே, நாங்கள் உமது சத்தியத்தை அசத்திய உலகில் சுமந்து சென்று நிரூபணம் செய்ய இடம் தாரும், உதவி செய்யும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME