அனுப்பினார்

அவரால் உலகம் இரட்சிக்கபடுவதற்காகாவே அவரை அனுப்பினார்

God send His son, that the world through Him might be saved.(John 3:17b) Jn1:29; Jn6:40; Mt1:23; Mt18:11; Lk2:10,11; Lk19:10; 1Tim1:15; 1Tim2:4-6; 1Jn2:2; 1Jn4:14; Isa45:21-23; Isa49:6,7; ISA53:10-12; Zec9:9.

அவரால் உலகம் இரட்சிக்கபடுவதற்காகாவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17b)

யோவான் 1:29; யோவான் 6:40; மத்தேயு 1:23; மத்தேயு 18:11; லூக்கா 2:10,11; லூக்கா 19:10; 1தீமோத்தேயு 1:15; 1 தீமோத்தேயு 2:4-6; 1 யோவான் 2:2; 1 யோவான் 4:14; ஏசாயா 45:21-23; ஏசாயா 49:6,7; ஏசாயா 53:10-12; சகரியா 9:9.

இரட்சகர் இயேசு.
இயேசுவே இரட்சகர்.
இயேசுவே உலகை இரட்சிக்கிறவர்.
இயேசுவே மனிதரை இரட்சிக்கிறவர்.

தமது குமாரனாகிய இயேசுவை மரணத்தினூடாக அனுப்பி உலகை, மனுகுலத்தை இரட்சிக்க விரும்பினார். அதற்காகவே அவரை அனுப்பினார். பிதாவின் இந்த விருப்பத்தை இயேசுகிறிஸ்து அனுப்பபடுமுன்பதாகவே அறிந்திருந்தார். அதன் பலாபலனையும் நன்றாக அறிந்திருந்தார். ஏசாயா 53:12.

இயேசு கிறிஸ்து:
1. இழந்து போனதை இரட்சிக்க வந்தார்.
மத்தேயு 18:11; லூக்கா 19:10
2. உலகை இரட்சிக்க வந்தார். யோவான் 12:47
3. இஸ்ராயேல் மக்கள் இரட்சிக்கபட வந்தார். ரோமர் 10:11; ரோமர் 11:26
4. பாவிகளை இரட்சிக்க வந்தார். 1தீமோத்தேயு 1:15
5. அநேகரை மீட்கவும், ஜீவனை கொடுக்கவும் வந்தார். மத்தேயு 20:28, மாற்கு 10:45
6. சொந்தமானவர்களை மீட்க வந்தார். எபேசியர் 1:14

சில விஷயங்களை அறியலாம்:

– எல்லாரும் இரட்சிக்க படுவார்களா? எல்லாரும் இரட்சிக்கபட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். 1தீமோத்தேயு 2:4. ஆனால் இரட்சிப்புக்கு நியமிக்கபட்டவர்களே இரட்சிக்கபடுவார்கள். அப்போஸ்தலர் 13:48; மாற்கு 10:25-27; அப்போஸ்தலர் 2:47

– இரட்சிப்பு முக்காலமும் சார்ந்தது. இரட்சிக்கபட்டேன், இரட்சிக்கபடுகிறேன், இரட்சிக்கபடுவேன். இறுதிவரையிலும் – கூட்டிலிருந்து ஜீவன் அவரிடம் செல்வது வரையிலும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கபடுவான். மத்தேயு 10:22; மத்தேயு 24:13

– இரட்சிப்பு பூமி சார்ந்தது. பாவம் இவ்வுலகு சார்ந்ததாயிருப்பதினாலும், இயேசுவின் பாடு மரண உயிர்ப்பு இவ்வுலகு சார்ந்ததாயிருப்பதினாலும் இரட்சிப்பு இவ்வுலகில் மட்டுமே. மறு உலகு போய் – மரணத்துக்கு பின்பு இரட்சிப்பு கிடையாது.

– வேறு எவராலும் – எந்த முறைமையினாலும் இரட்சிப்பு இல்லை. இயேசு கிறிஸ்துவினாலேயன்றி, அவரது மரணத்தினாலேயன்றி, அவரை விசுவாசிப்பதினாலேயன்றி வேறு வழியாய் இரட்சிப்பு இல்லை. அப்போஸ்தலர் 4:12

– இஸ்ராயேலரின் இரட்சிப்புதான் இறுதியானது. அவர்களின் மீட்பு தள்ளிபோவதினால் தான் புறஜாதியாராகிய நமக்கு மீட்பு உண்டாயிற்று. அவர்கள் இரட்சிக்கபட தேவன் காத்து கொண்டிருக்கிறார்.

– சபை இந்த பூமியில் இருப்பது வரையிலும் தான் இரட்சிப்பு உண்டு. சபை எடுத்து கொள்ளபட்டபின்பு இந்த பூமியில் இரட்சிப்பு கிடையாது.

– பரிசுத்த ஆவி இந்த பூமியில் உள்ள சபையில் இருப்பது வரையிலும்தான் இரட்சிப்பு. அவர் நீக்கபட்ட பின்பு இரட்சிப்பு கிடையாது. 2தெசலோனிக்கேயர் 2:7,8

– 1000 வருட ஆட்சி இரட்சிப்பின் காலம் அல்ல, தேவ நீதி வெளிப்படும் காலம். கிறிஸ்து முழு உலகையும் அரசாளுவார். அவருடைய நீதிக்கு – அதிகாரத்துக்கு யாவரும் கட்டுபட்டிருப்பர். 1000 வருடம் முடிந்த பின்பு எல்லா புறஜாதியாரும் அவருக்கு எதிராக எழும்புவர். பின்னர் யாவும் அழிக்கபடும்.

கர்த்தாவே, உம் குமாரனை எங்களது மீட்புக்காக அனுப்பினீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். அவரால் நாங்கள் முழுமையான மீட்பை பெற்றுக்கொண்டோம் என்றும் நம்புகிறோம். இந்த மீட்பே எங்களுக்கு போதுமானது என்றும் நாங்கள் நம்புகிறோம். எனவே நாங்கள் உண்மையாய் உம்மில் சார்ந்து வாழ கிருபை செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME