ஆடுகள் அவனுக்குப் பின்செல்லுகிறது.
The sheep follow him, for they know his voice. (John10:4b)
Jn12:26; Jn13:15; Mt16:24; 1Cor4:16; 1Cor11:1; Eph5:1,2; Phil2:5-11; Heb12:1,2; 1Pet2:21,22; 1Pet4:1; 1Pet5:3; Ps80:1; Ps95:7; Isa49:10; Son2:8;5:2.
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. (யோவான் 10:4)
யோவான் 12:26; யோவான் 13:15; மத்தேயு 16:24; 1கொரிந்தியர் 4:16; 1 கொரிந்தியர் 11:1; எபேசியர் 5:1,2; பிலிப்பியர் 2:5-11; எபிரெயர் 12:1,2; 1பேதுரு 2:21,22; 1பேதுரு 4:1; 1பேதுரு 5:3; சங்கீதம் 80:1; சங்கீதம் 95:7; ஏசாயா 49:10; உன்னதப்பாட்டு 2:8; உன்னதப்பாட்டு 5:2.
பின் செல்லும் ஆடுகள்:
பெயர் சொல்லி அழைத்த மேய்ப்பனின் சத்தத்தை அடையாளம் கண்டுகொண்ட ஆடுகள் தொழுவ வாசல் வழியாக மேய்ப்பனை வந்தடைந்தது. மேய்ப்பன் அவைகளை வெளியே நடத்திச் செல்கிறான். ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்தை அறிந்திருக்கிறபடியால் மேய்ப்பனைப் பின்பற்றிச் செல்கிறது.
கிறிஸ்தவம் ஒரு இயக்கமல்ல, ஒரு இனமல்ல, ஒரு தத்துவ சிந்தனையல்ல. ஒரு மனிதனக வந்த இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவதாகும். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களே கிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11:26). எந்த சபை பிரிவுகளாக இருந்தாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும், அவரது உபதேசங்களையும், அவரது வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுகிறவனே உண்மையான கிறிஸ்தவன். தேவனுடைய ஆவியில்லாமல் மாம்சத்தில் வந்த இயேசுவை கிறிஸ்து என்றும், ஆண்டவர் என்றும், தெய்வம் என்றும் அறிக்கையிடவும் இயலாது. அவரை அப்படியே பின்பற்றவும் இயலாது. (1யோவான் 4:2). தேவன் தம்முடைய ஆவியை தந்திருப்பதின் அடிப்படை நோக்கமே இயேசுவை பின்பற்றுவதற்குதான். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவிலே உருவாகி, கிறிஸ்துவிலே வளர்ந்து, கிறிஸ்துவிலே முதிர்ந்து, கிறிஸ்துவிலே நிறைவடைவதாகும்.
உண்மையான ஆடுகள் அந்தந்த சபை பிரிவுகளாகிய தொழுவங்களில் காணப்பட்டாலும் இயேசுகிறிஸ்துவையே பின்பற்றும். தேவனால் நியமிக்கப்பட்டவர் அவரே. அவர் தம்மை பின்பற்றுகிறவர்களை அறிவார். அவைகளை பரம கானானில் கொண்டு சேர்ப்பார்.
பரிசுத்த ஆவியானவர் முன்செல்லும் கிறிஸ்துவை பின்பற்றி செல்லும் ஆடுகளாய் நம்மை கிறிஸ்துவுக்கு நேராய் நடத்துகிறார். அடங்கி இயேசுவை பார்த்து அவருக்கு பின்செல்லுங்கள். அவரை பின்பற்றாத ஆடுகள் திரும்ப தொழுவத்தில் சேர்க்கப்படாது. கசாப்பு கடைகாரனுக்கு வைக்கப்படும். இயேசுவை பின்தொடர்… வறுமையிலும், குறைவிலும் அவரை பின்பற்று.
கர்த்தாவே உம்மை பின்செல்லும் ஆடுகளாக எங்களை தெரிந்தெடுத்தீர். இப்பொழுது எங்களை பின்தொடர்ந்து உம்மிடம் வந்து சேரும் ஆடுகளை மேய்க்கும்படி பெலன் தாரும்.