என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.
He who eats My flesh and drinks My blood abides in Me,and I in him. (John 6 :56)
Jn14:20,23; Jn15:4,5; Jn17:21-23; 2Cor6:14-18; Eph3:17; 1Jn3:24; 1Jn4:12,15,16; Rom3:20; Ps90:1; Ps91:1,9; Lam3:24.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
(யோவான் 6:56)
யோவான் 14:20,23; யோவான் 15:4,5; யோவான் 17:21-23; 2 கொரிந்தியர் 6:14-18; எபேசியர் 3:17; 1யோவாான் 3:24; 1யோவான் 4:12,15,16; ரோமர் 3:20; சங்கீதம் 90:1; சங்கீதம் 91:1,9; புலம்பல் 3:24.
கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்:
மெய்யான சரீரம், இரத்தத்தை உணவாக உண்டு அவரோடு இணைந்து வாழ்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்.
அவரில் நிலைத்திருப்பவனில் மட்டுமே கிறிஸ்து நிலைத்திருக்க முடியும். தோட்டத்தில் வேலைசெய்கிறவனோடு கூடத்தான் எஜமான் இணைந்து செல்வான். அதுபோல கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவனில் மட்டுமே அவர் இணைந்துவர இயலும்.
கிறிஸ்துவாகிய உணவு மட்டுமே – கிறிஸ்துவின் உபதேசம் மட்டுமே – கிறிஸ்து மட்டுமே நாம் பற்றிபடர்ந்து வாழ்வதற்கான ஊன்றுகோல்.
நமது வளர்ச்சி, ஆசீர்வாதம் யாவும் அவரில் தான் உள்ளது.
நமது ஜீவன் அவரில் மட்டும்தான் உள்ளது.
நமது பணிகள் அவரில் மட்டும்தான் நிறைவு பெற வேண்டும்.
நமது நோக்கங்கள், செயல்கள் யாவும் அவரில் மையம் கொள்ள வேண்டும்.
அவரில் நிலைத்திருக்கவே கிறிஸ்தவ ஐக்கியத்தின் வெளி அடையாளமாகிய அப்பம், ரசம் தரப்பட்டுள்ளது.
நான் கிறிஸ்துவை உண்கிறேன் என்ற நல் உணர்வுகளில் வாழ்பவர் மட்டுமே அவரில் நிலைத்திருக்க இயலும். ஏனெனில் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யமாட்டோம்.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மெய் உணவை உண்கிறவன் என்ற பெயர் அடையாளம் நம் மேலும், நமக்குள்ளும் இருப்பதே நிலைத்திருத்தலின் தன்மையாகும்.
அவரில் நிலைத்திருக்கிறேன் என்பது வாயளவில் அல்ல, வாழ்க்கையில் காணப்பட வேண்டும்.
நிலைத்திருங்கள்.
கர்த்தாவே, உம்மிலும், உம் குமாரனிலும் நிலைத்திருக்கவே நல் விருந்தை தந்துள்ளீர். நாங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருந்து உமது நன்மைகளை பெற்று வாழ உதவிடும்.