அழுகிறதைக் கண்டு ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்.
Jesus saw her weeping, and the Jews who came with her weeping, He groaned in the spirit and was troubled. (John 11:33,34)
Jn11:38; Jn12:27; Jn13:21; Mt14:14; Mk3:5; Mk9:19; Mk14:33-35; Ro12:15; Heb4:15; Heb5:7,8.
அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து. (யோவான் 11:33)
அவனை எங்கே வைத்தீர்கள்என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். (யோவான் 11:34)
யோவான் 11:38; யோவான் 12:27; யோவான் 13:21; மத்தேயு 14:14; மாற்கு 3:5; மாற்கு 9:19; மாற்கு 14:33-35; ரோமர் 12:15; எபிரெயர் 4:15; எபிரெயர் 5:7,8.
துயரமடைந்த இயேசு.
இயேசுவைக் கண்டவுடம் மரியாளும், அவளோடேகூட வந்திருந்த ஜனங்களும் துயரம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். அழுகையானது ஆண்டவருடைய சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாகும். தன் விண்ணப்பங்களை அழுகையோடும், புலம்பலோடும் தேவனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒரு நியமம்.
இவர்களுடைய தாங்கொணா துயரத்தை கண்ட இயேசு தன் ஆவியிலே கலங்கி துயரமடைந்தார் என்று தரப்பட்டுள்ளது. ஆவி என்பதற்கு பரிசுத்த ஆவிக்கு பயன்படுத்தும் மூலச்சொல்லே பயன்படுத்தியிருப்பதினால் தன் தெய்வீக சிந்தைக்குள், தேவனுக்குள், ஆவியானவருக்குள் உடைந்தவராய் கலங்கி, துயரபட்டார். அவர் ஆவியில் கலங்கி துயரபட்டதினால்தான் 35 ஆம் வசனத்தில் கண்னீர் விட்டார் என்றுள்ளது. இந்த 34 ஆம் வசனத்தை கவனிக்கும்போது இயேசுவின் மனதுருக்கததை நாம் நினைவில் கொள்ளுகிறோம். அவருடைய மனதுருக்கம் மனிதர்கள் பார்க்கும்படியானதாக அல்ல, தேவனே பார்க்கும் படியானதாகும். இயேசுவின் துயரம் பிதாவினால் உணரப்பட்டது, ஆவியில் செயல்படும் எந்த காரியமும் பிதாவாகிய தேவனைச் செயல்பட வைக்கும்.
தாம் படைத்த மனிதர்களின் துயரத்தை கண்ணுற்றவர் பிதாவிடம் அழுதார். மனிதர்கள் இயேசுவிடம் அழுதனர். இயேசுவோ பிதாவிடம் அழுதார். பாவம் மனுகுலத்தை எவ்வளவாய் பாதித்திருக்கிறது என்பதை கண்கூடாக காண்கிறார். இழக்கும்படியாகவும், துக்கப்படும்படியாகவும் மனிதனை தேவன் படைக்கவில்லை. எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பதே அவரின் விருப்பம்.
பாவம் தேவனைக் கோபப்படுத்தியது. அதேவேளையில் பாவம் மனிதனை அசுசிப்படுத்தியது. அசுத்தங்களினூடே மனிதரை தொடர்புகொள்ள முடியாததினால் தேவனுடைய கோபம் பற்றியெரிந்தது. இதன் விளைவாக மரணமும், வேதனைகளும், துயரங்களும், சாபங்களும், வியாதிகளும் உண்டாயிற்று. தமது தந்தையின் கோபத்தினால் மனுக்குலம் படும் துயரத்தைக் கண்ட இயேசு ஆவியிலே தேவனிடம் அழுதார். கண்ணீர் விட்டார். முறையிட்டார். புலம்பினார். இதனையே யோவான் இவ்வாறு கூறுகின்றார்.
அன்னை தெரசா போன்ற மாமனிதர்கள் இயேசுவைப்போல ஆவியிலே தேவனிடம் கதறியதினால் தான் இந்திய மனுகுலத்தில் பரிணாம வளர்ச்சி உண்டாயிற்று. மறறவர்க்காய் துயரபடுங்கள். துயரப்படுத்தாதீர்கள்.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4.