அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.
Beloved, let us love one another, for love is of God. (1John4:7)
1Corinthians 16:14; Galathians 5:22; 1Thessolonians 4:9,10; 2Timothy 1:7; Deu 30:6; John 3:16; 1John 3:16.
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். (1 யோவான் 4:7)
1கொரிந்தியர் 16:14; கலாத்தியர் 5:22; 1தெசலோனிக்கேயர் 4:9,10; 2தீமோத்தேயு 1:7; உபாகமம் 30:6; யோவான் 3:16; 1யோவான் 3:16.
தேவ அன்பு.
தேவனால் உண்டானதினால் தேவ அன்பு என்று கூறுகிறோம். மாசத்தினால் உண்டான அன்பு, உலகத்தினால் உண்டான அன்பு, இச்சையினால் உண்டான அன்பு யாவும் தேவனால் உண்டானதல்ல. ஒருபோதும் காதல் அன்பு என்பது தேவனால் உண்டானதல்ல, அது இச்சையினால் உண்டானதாகும். காதல் தெய்வீகமானது என்பது தேவதைகள் மற்றும் தேவர்கள் சம்பந்தப்பட்டவையாயிருப்பதினாலேயாகும். பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாதபடிக்கு செய்யப்படும் எல்லாமே இச்சையின் மறுபிறப்பாகும்.
தேவ அன்பை ஒருபோதும் இச்சையோடும், உடல் சார்ந்த உறவுகளோடும் சம்பந்தபடுத்தலாகாது. . தேவ அன்பு தேவனிடமிருந்து உருவாகி தேவ குமாரனின் வழியாக இரத்தத்தினூடே உறுதிபடுத்தப்பட்டதாகும். தூய்மையான இரத்தமே இந்த அன்புக்கான சாட்சி. இந்த அன்பை கொச்சைபடுத்தும்போதும், வெறொன்றோடு சேர்க்கும் போதும் இந்த இரத்தம் அதெற்கெதிராக சாட்சிக் கொடுக்கும். இது கிறிஸ்துவின் இரத்தத்தோடு இணைந்து வருவதினால் உயிருள்ள அன்பாகவும், கிறிஸ்துவின் அன்பாகவும் அறியப்படுகின்றது. கிறிஸ்துவால் மீட்கப்பட்ட ஒவ்வொருவரிலும் பரிசுத்த ஆவியானவர் இந்த அன்பை இருதயங்களில் ஊற்றுகிறார். இந்த அன்பை தன்னில் பெற்றுக்கொண்ட ஒருவர் பொருளாசையின் மீதும் உடல் இன்பங்களின் மீதும் அந்நிய மார்க்க அனுஷ்டானங்களின் மீதும் சாயும் போது இந்த தேவ அன்பு அவர்களிலிருந்து நீக்கப்படுகிறது. இதனால் பொறாமையும் சண்டைகளும் பிரிவினைகளும் உண்டாகின்றது.
தேவனால் உண்டான அன்பு நம்மை தேவனோடும் கிறிஸ்துவோடும் , ஆவியோடும், வசனத்தோடும், சபையோடும், ஊழியத்தோடும் மட்டுமே இணைக்கும். இவைகளுக்கே முதலிடம் கொடுக்க தூண்டும். ஏனெனில் இந்த அன்பு இவைகளோடு இணைந்ததுவே ஆகும். இதன் விளைவு இரண்டு விதமானது. ஒன்று கிறிஸ்துவின் சிந்தயை வெளிபடுத்துவது. இன்னொன்று ஆத்தும ஆதாயம் செய்வது. இந்த இரண்டையும் பிறப்பிக்காத எந்த அன்பும் தேவனால் உண்டான அன்பல்ல, அது உலக அன்பு.
கேள்வி. உங்களில் உள்ள அன்பை எதன்மேல் உரசிப்பார்த்து உண்மை அன்பு என்று கண்டீர்?
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37.
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:5-10.