அன்புகூர்ந்தால் தேவன் நம்மில் நிலைத்திருப்பார், அன்பும் நம்மில் நிலைத்திருக்கும்

அன்புகூர்ந்தால் தேவன் நம்மில் நிலைத்திருப்பார், அன்பும் நம்மில் நிலைத்திருக்கும்.

No one has seen God at any time. If we love one another, God abides in us, and His love has been perfected in us. (1John 4:12)

1John 4:20; John 1:18; 1Corinthians 13:13; 1Timothy 1:17; 1Thimothy 6:16; Hebrew 11:27; Genesis 32:30; Exodus 33:20; Numbers 12:8.

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். (1 யோவான் 4:12)

நிலைத்திருப்பவை.

தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை என்பது விவிலிய போதனையாகும். காணக்கூடாத தேவனை கண்டவரும், காண்பிக்கிறவரும் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே. இயேசு கிறிஸ்துவை கண்டவர்களும், அறிந்தவர்களும், அனுபவித்தவர்களும் தேவனை காண்கிறார்கள், அறிகிறார்கள், அனுபவிக்கிறார்கள். நம்மில் அன்புகூர்ந்து நமது பாவங்களை நீக்கி நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிய இயேசு கிறிஸ்துவின் அன்பைக் கொண்டு பிறரை இரட்சிப்புக்குள் நடத்தும்போது அந்நபரில் தேவன் நிலைத்திருக்கிறார், அன்பும் நிலைத்திருக்கிறது. அன்பு நிலைத்திருக்கிறது என்பதை பவுலும் கூட போதிக்கின்றார்.

ஒருவரிலொருவர் அன்புகூருதல் என்பது மூன்று வழிக் கொண்டதாகும். கிறிஸ்துவை தன்னில் ஏற்றுக்கொண்டு தேவ அன்பை உடையவராகுதல், அன்பினால் பிறிதொருவரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி அவரில் அன்பை தரிக்க செய்தல், கிறிஸ்துவையும் அன்பையும் கொண்டுள்ளோரோடு மாய்மாலமில்லாத சூதுவாதில்லாததுமான வெளிப்படையான சிநேகம் பாராட்டி வாழ்வது ஆகியவையாகும். இவ்விதமான மூன்றுவித அன்பின் பரிமாணங்களும் எவரொருவரில் காணப்படுகின்றதோ அவர்களே பூரண அன்பை கொண்டிருக்கிறவர்கள் ஆவர். இந்த பூரண அன்பு மரண பயத்தை புறம்பே தள்ளும். மரணவாசனையை சுமந்து திரிந்தாலும் மரணபயமில்லாத வாழ்வு வாழ முடியும்.

நிலைத்திருக்கக்கூடியவைகளை நம்மில் நிலைநிறுத்திக்கொள்வதே ஞானமாகும். கிறிஸ்துவும் அன்பும் மட்டுமே நிலைத்திருக்கக்கூடியவைகள். கிறிஸ்து நம்மில் இருப்பது உண்மையாயின் அவரின் அன்பும் நம்மில் நிரம்பியிருக்கும். அவரின் அன்பு நம்மில் நிலைத்திருப்பது உண்மையாயின் சிலுவைக்கு போவதையோ, சிலுவை சுமப்பதையோ, கிறிஸ்துவினிமித்தம் துன்பப்படுவதையோ பாக்கியமாக கருதுவோம். துன்பங்களுக்கு காரணம் பாவந்தான். பாவம் பூமியில் இருப்பது வரையிலும் கிறிஸ்துவை சுமந்து செல்வோரை துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். ஆனால் நம்மில் இருக்கும் அன்பில் அதை சந்தோஷமாகக் கருதுவோம்.

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1கொரிந்தியர் 13:13..

அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்2கொரிந்தியர் 12:10..

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர் 2:20..

ADD YOUR COMMENT

Powered By Indic IME