அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்.
There is no fear in love; but perfect love casts out fear, because fear involves torment. (1John 4:18)
Luke 1:69-75; Romans 8:15; 2Timothy 1:7; Hebrew 12:28; James 2:19; Job15:21; Psalms 73:19; Psalms88:15,16; Psalms 119:120; Job 3:25,26.
அன்பிலே பயமில்லை. பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. (1 யோவான் 4:18)
லூக்கா 1:69-75; ரோமர் 8:15; 2தீமோத்தேயு 1:7; எபிரேயர் 12:28; யாக்கோபு 2:19; யோபு 15:21; சங்கீதம் 73:19; சங்கீதம் 88:15,16; சங்கீதம் 119:120; யோபு 3:25,26.
பயமில்லா அன்பு.
பாவத்தினிமித்தம் மனுகுலம் தேவனோடு பகைமை கொண்டது. தேவனும் மனுகுலத்தின் மீது வெறுப்புக் கொண்டார். இந்த வெறுப்பு அவரின் கோபத்தினால் உண்டானது. தேவனுடைய கோபத்தையும், ஆக்கினை தீர்ப்பையும் அறிந்த, அனுபவித்த மனுகுலம் தேவனை விட்டு விலகியது. இதற்கு காரணம் பயமே. இந்த பயம் அவரை விடவும் கொடுமையான சாத்தானிடம் கொண்டு சேர்த்தது. இதை கண்ட இரக்கமும், கிருபையும், தயவும், காருண்ணியமும் உள்ள அன்பின் தேவன் மனுகுலத்தின் மீதுள்ள கோபத்தையும், வெறுப்பையும் விட்டு நீங்கினார். தமது குமாரனை பூமிக்கு அனுப்பி தமது அன்பை நிரூபித்தார். பூமிக்கு அனுப்பியதின் மூலம் மாத்திரமல்ல மீட்பின் பலியாகவும் அவரை ஒப்புக்கொடுத்து உன்னதமான – சிறந்ததான – உயரிய அன்பை வெளிப்படுத்தினார். அதே நேரத்தில் தமது மகனை மரணத்திலிருந்து எழுப்பி மகன்மீதும் அன்பை வெளிப்படுத்தினார். இந்த அன்பை உணர்ந்துக்கொண்டு கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொண்டு தேவனோடு சமாதனமானவர்களுக்கு பயமில்லாத வாழ்வு உண்டாயிற்று.
கிறிஸ்துவின் அன்பு இரட்சிக்கப்பட்ட மனிதனில் பூரணபட வேண்டுமானால் தேவனின் அன்பையும் கிறிஸ்துவின் அன்பையும் ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து அவரது வழியிலே நடக்க வேண்டும். இதனையே பவுல் சொல்லுகிறார். இந்த அன்பு எனக்குள் பிரவாகித்து எழும்புவதினால் எதைக்குறித்தும் நான் பயப்பட மாட்டேன் என்கிறார். பவுல் பயமில்லாதவராய் வறுமையையும், வியாதிகளையும், உபத்திரவங்களையும் சந்தோஷத்தோடு சகித்தார். ஆகையினால்தான் நான் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்களும் சந்தோஷமாயிருங்கள் என்று சொல்லுகிறார்.
அன்பில் நாம் எவ்வளவாய் வளர்கிறோமோ அவ்வளவாய் பயமில்லாத வாழ்வு வாழமுடியும். பாவத்தை கண்டோ, சாத்தானை கண்டோ, மரணத்தை கண்டோ பயப்பட வேண்டியதில்லை. ஆகையினால்தான் அனேக பரிசுத்தவான்கள் தேவன்மேல் அதீத அன்புடையவர்களாய் தங்களை மரணத்துக்கு கையளித்தார்கள். மகிழ்ச்சியோடு கஷ்டங்களை அனுபவித்தார்கள். இந்த தேவனின் அன்பு நம்மில் ஊற்றப்பட்டிருக்குமானால் அதில் வலி கிடையாது மகிழ்ச்சியே காணப்படும்.
அன்பில் வளர்வோம்.. அன்பில் பூரணப்படுவோம்.
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப்பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; எபிரேயர் 11:32-37..
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். பிலிப்பியர் 4:4.