நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதுவே என் கற்பனை.
This is My commandment, that you love one another as I have loved you. (John 15:12)
John 13:34; Romans 12:10; Romans 15:18; Ephesians 5:1,2; 1Thessalonians 3:12,13; 1Thessalonians 4:9; 2Thessalonians 1:3; 1Peter 1:22; 1Peter 3:8; 1Peter 4:8; 1John 2:7-10; 1 John 3:11-18,23; 1 John 4:21.
நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (யோவான் 15:12)
யோவான் 13:34; ரோமர் 12:10; ரோமர் 15:18; எபேசியர் 5:1,2; 1தெசலோனிக்கேயர் 3:12,13; 1தெசலோனிக்கேயர் 4:9; 2தெசலோனிக்கேயர் 1:3; 1பேதுரு 1:22; 1பேதுரு 3:8; 1பேதுரு4:8; 1யோவான் 2:7-10; 1யோவான் 3:11-18,23; 1யோவான் 4:21.
அன்பினால் அன்புடையோர்:
இயேசுகிறிஸ்து பிதாவினால் நேசிக்கப்பட்டார். சீஷர்கள் இயேசுவினால் நேசிக்கப்பட்டார்கள். பலதடவைகளில் சீஷர்கள் கடிந்துகொள்ளப்பட்டாலும் அவர்களை நேசிப்பதில் குறை வைக்கவில்லை. அன்பும் கடிந்துகொள்ளுதலும் இணைந்து வருகின்றது. அடிக்கிற தேவனே அணைக்கிறார். இவ்விதம் இயேசுகிறிஸ்து சீஷர்களிடத்தில் முழுமையானதும், உண்மையானதுமான அன்பு வைத்ததுபோல சீஷர்களும் ஒருவரிலொருவர் அன்பு வைக்க வேண்டும். இதனை ஆலோசனையாக அல்ல கற்பனையாகவே கூறுகின்றார்.
சீஷர்கள் உடலாலும், உள்ளத்தாலும், உணர்வாலும், தன்மைகளாலும், பழக்கவழக்கங்களினாலும் வேறுபட்டவர்களாயிருந்தாலும் ஒருவரிலொருவர் அன்புகாட்டுவதை கட்டளையாக கொள்ள வேண்டும். அன்புக்கு கட்டுபடாதவர்கள் வெளியேற்றபட வேண்டும். கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்துகொள்ள விரும்பாத சீஷன் இயேசுவின் சீஷர் கூட்டத்தில் இருக்க முடியாது. கிறிஸ்துவின் அன்பின் கயிறினால் இணைக்கப்பட்டவர்களாகிய சீஷர்கள் சுவிசேஷம் அறிவிப்பதிலும், சபைகளை ஸ்தாபிப்பதிலும், பாடுபடுவதிலும், மரணத்திலும் இணைந்து நின்றார்கள்.
ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்று இயேசுவும், அவருக்கு பின் அவரது சபைகளும் காலம் காலமாக போதித்து வருகின்றது. இதனால்தான் படிப்பு, அந்தஸ்து, கவுரவம், ஜாதி, மொழி, இனம் கடந்து கிறிஸ்துவின் இராஜ்யத்தின் வளர்ச்சிக்காய் பணத்தையும் பொன்னையும் பொருளையும் நேரத்தையும் செலவு செய்கிறார்கள். பாடுகள் அனுபவிக்கின்றார்கள். குறைவை அடைகின்றார்கள். பலவீனங்களை அடைகின்றார்கள். கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் பேதமைகளை மறந்து ஒன்றுபட்டு பாடுபடுவோம், துன்பங்களை அனுபவிப்போம்.
திருமணத்துக்காகவும், படிப்புக்காகவும், வேலைக்காகவும், அந்தஸ்துக்காகவும் வாழ்வதை விட்டுவிட்டு கிறிஸ்துவின் இராஜ்யத்தின் வளர்ச்சிக்காய் பாடுபடுவோம்.
அன்பு இழக்கத்தான் சொல்லும், ஆதாயமடைய வாஞ்சிக்காது.
நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. 1தெசலோனிக்கேயர் 3:12,13.