என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரிடம் கேட்டதை உலகிற்குச் சொல்லுகிறேன்.
He who sent Me is true;and I speak to the world those things which I heard from Him.(John 8:26)
Jn8:17; Jn7:28; 2Co1:18; Deu32:4; 1Jn5:20.
உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:26)
யோவான் 8:17; யோவான் 7:28; 2கொரிந்தியர் 1:18; உபாகமம் 32:4; 1யோவான் 5:20.
சத்தியமுள்ள தேவன்:
சத்தியம் என்ற சொல்லில் உண்மை, நம்பகதன்மை, சரியானது, நேர்மை போன்ற சொற்கள் உள்ளடங்கியுள்ளன. இயேசுகிறிஸ்து வெளிபடுத்திய தேவன் சத்தியமுள்ளவராய் இருக்கிறார். அதாவது அவரே உண்மை தேவனாயிருக்கிறார். வேறு எல்லாம் பொய்யாய் உள்ளது. அவரே உண்மை பேசுகிறவர். சத்தியம் உரைக்கிறவர். மெய்யாகவே என்று உறுதிபடுத்துகிறவர். அவரது சொற்கள் உண்மையானவைகள். அவர் செய்வது யாவும் உண்மையாகவே உள்ளது. மாய்மாலம், பொய் வசனிப்பு அவருக்கு தூரமானது.
சத்திய தேவனால் அனுப்பப்பட்ட இயேசுகிறிஸ்துவும் சத்தியமாகவே இருக்கின்றார். எனவேதான் சத்திய தேவனின் விருப்பத்திற்கிணங்க தன்னையே பலியாக தந்தார்.
சத்திய தேவனால் கொடுக்கப்பட்ட விவிலியமும், பரிசுத்த ஆவியானவரும் சத்திய வார்த்தைகள், சத்திய ஆவி என்று அழைக்கப்படுகின்றனர். சத்திய குமாரனால் ஏற்படுத்தப்பட்ட சபையும் சத்திய சபை என்றே அழைக்கப்படுகின்றது. விசுவாசிகளின் வேலை சத்தியத்திற்கு சாட்சி கொடுப்பதே ஆகும். எனவே விசுவாசிகள் சத்திய சாட்சிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
திருச்சபையானது சத்திய தேவனை கொண்டிருப்பதினால் சத்தியத்திற்கு மாறானவைகளை சபை செய்யலாகாது. விசுவாசிகள் சத்திய ஆவியை கொண்டிருப்பதினால் சத்தியத்திற்கு மாறானவைகளை செய்யலாகாது.
சத்தியமே நமது உயிர் மூச்சாக வேண்டும்.
இயேசுவைபோல் சத்தியத்தையே பேச வேண்டும்.
கர்த்தாவே நீர் சத்தியமுள்ளவராய் இருப்பதுபோல் உம் குமாரனும் சத்தியமுள்ளவராயிருந்து எங்களை சத்திய வழியிலே நடத்தி நித்திய கரை சேர்ப்பதற்காய் நன்றி.