என்னை அனுப்பினவரின் சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்.
I have come down from heaven,not to do My own will,but the will of Him who sent Me. (John 6:38)
Jn4:34; Jn5:30; Mt20:28; Mt26:39-42; Ro15:3; Phi2:7,8; Heb5:7-9; Heb10:7-9; Ps40:7,8; Isa53:10.
என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். (யோவான் 6:38)
யோவான் 4:34; யோவான் 5:30; மத்தேயு 20:28; மத்தேயு 26:39-42; ரோமர் 15:3; பிலிப்பியர் 2:7,8; எபிரெயர் 5:7-9; எபிரெயர் 10:7-9; சங்கீதம் 40:7,8; ஏசாயா 53:10.
பிதாவை பின்பற்றிய இயேசு:
யோவான் 6:38 ன் தேவசித்தம் செய்தல் என்ற தலைப்பை யோவான் 4:34 ல் நாம் ஏற்கனவே தியானித்துள்ளோம்.
இங்கு பிதாவை பின்பற்றிய குமாரன் குறித்த மேன்மைகளை அறிய முயல்வோம்.
பிதாவினால் அனுப்பப்பட்டவர் பிதாவை பின்பற்றுகிறார். தன் விருப்பம் செய்ய இயலாது. ஆதாம் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்றாததினாலே 2 ம் ஆதாமுக்கு வழி உண்டாயிற்று.
சுவிசேஷங்களின் மையபொருளே இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்பதாகும். இயேசு பிதாவின் குமாரன் ஆனதினால் அவர் பிதாவின் உடமைகளுக்கு உரிமையாளராகவும், பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவராகவும் வெளிப்பட்டுள்ளார். பிதா தம்மைவிட்டு விலகிபோனாலும் இயேசு பிதாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்.
இயேசுகிறிஸ்துவின் தெய்வீக அம்சமும், ராஜரீக மேன்மையும், ஆற்றலின் ஆதிக்கமும், ஞானத்தின் நிறைவும் ஒருபோதும் தேவனுடைய நோக்கத்திற்கு மாறாக பயன்படும்படி செயல்படவில்லை.
பாவத்திலிருந்து மனிதனை மீட்பதற்காக மட்டுமே இயேசு அனுப்பப்பட்டார். உலகியல் ராஜ்ஜிய அமைப்பை நிறுவும்படியாய் அனுப்பபடவில்லை. அவ்வித சிந்தனைக்கும் அவர் இடம் தரவில்லை.
சமீபகாலமாக இயேசுகிறிஸ்துவின் அடியவர்கள் தங்களின் தெய்வீக நோக்கங்களைவிட்டு வெளியேறி தங்களை பலவிதமான சுய அம்புகளால் உருவ குத்திக்கொள்கின்றனர்.
பாவத்துக்கு முடிவு உண்டாக்கவே இயேசு அனுப்பப்பட்டார்.
தற்சமயம் இயேசுவின் இடத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் வைக்கப்பட்டுள்ளோம்.
நாம் கிறிஸ்துவின் கிரியைகளைகொண்டு பாவத்துக்கு எதிராக போராடவேண்டும்.
பவுல் ஜனங்களிடம் கூறிய சிந்தனையாவது.
பிதாவை இயேசு பின்பற்றினார். இயேசுவை நான் பின்பற்றுகிறேன். என்னை நீங்கள் பின்பற்றுங்கள் என்பதாகும்.
பிள்ளையானவனுக்கு உரிமை உண்டுதான்.
ஆனால் அதனை உரிமை கொண்டாடி பெறுவதல்ல, அப்பா விருப்பம் செய்து பெறுவதாகும்.
கர்த்தாவே, நீர் உம் மகனைகொண்டு நல்ல ஒழுங்குமுறைகளை எங்களுக்கு கற்று தந்துள்ளீர். நாங்கள் எங்கள் கிறிஸ்தவ பெற்றோருக்கு எல்லா விதத்திலும் கீழ்படிந்து நடப்பதுபோல உமக்கும் கீழ்படிந்து நடக்கதக்கதான சிந்தையை உம் ஆவியினால் எங்களில் புதுப்பித்தருளும்.