அந்திகிறிஸ்துவின் ஆவி இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

அந்திகிறிஸ்துவின் ஆவி இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

every spirit that does not confess that[fn] Jesus Christ has come in the flesh is not of God. And this is the spirit of the Antichrist. (1John 4:3)

1John 2:18,22; 2Thes 2:7,8; 2John 1:7; Romans 10:9,10; Hebrew 5:7-10; Hebrew 9:11,12; Hebrew 10:5.

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல. வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திகிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1 யோவான் 4:3)

1யோவான் 2:18,22; 2தெசலோனிக்கேயர் 2:7,8; 2யோவான் 1:7; ரோமர் 10:9,10; எபிரெயர் 5:7-10; எபிரெயர் 9:11,12; எபிரெயர் 10:5.

அறிக்கையிடாத ஆவியே அந்திகிறிஸ்துவின் ஆவி.

நசரேயனாகிய இயேசு ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாக வாக்கிலும் செய்கையிலும் ஜீவிதத்திலும் சிறந்து விளங்கினார். அவர் ஒரு ஸ்தாபகர் அல்ல, தேவனுடைய இராஜ்யத்தை மனித உள்ளங்களில் உருவாக்க வந்தவர். பூமிக்குரிய இராஜ்யத்தை அவர் உருவாக்க வந்தார் என்று சொல்வது அபத்தமானது. விவிலியத்தின் சுவிசேஷங்களும் , சபைகளை உருவாக்கிய ஆதி அப்போஸ்தலர்களும் உருவாக்கியுள்ள ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு சபைகள் கிறிஸ்துவின் சரீரமாக பரிணமிக்க வேண்டும். வரலாற்றில் தோன்றி மறைந்தவரல்ல இயேசு கிறிஸ்து, அன்று வரலாற்றை உருவாக்கினார், இன்று வரலாற்றை இயக்குகிறார், இனி வரலாற்றை முடித்து வைக்கப்போகிறார். ஆகவே அவரின் மானுடவதாரம் ஒருநாளும் ஒருவராலும் ஒருபோதும் கொச்சைப்படுத்தப்படும்படியான உபதேசங்களையோ, வாழ்க்கை முறைகளையோ, செயல்களையோ, விவாதங்களையோ செய்யலாகாது என்று கூறுகின்றேன்.

தாம் நியமித்த மனிதனை கொண்டே தேவன் எல்லாவற்றையும் நியாயந்தீர்க்கப்போகிறார். ஆகையினால் மாம்சத்தில் வந்த இயேசுவை பாவம் நிறைந்த உலகத்தில் பிரகடனப்படுத்த வேண்டும். தோன்றிய மானுடவதாரங்கள் யாவும் துர்கிரியைகளை பூமியில் விதைத்துப்போயினர். பாவம் மேலும் மேலும் பெருகிக்கொண்டே போனது. இவைகளில் பரிசுத்தமான – பாவமில்லாத ஒரு சிறந்த மானுடவதாரமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாவார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைமுறையை நாம் பின்பற்றுவதும், பிறருக்கு போதிப்பதும் மிகவும் அவசியமானதாகும். கிறிஸ்துவின் சாயலையும், கிறிஸ்துவின் நறுமணத்தையும் கொண்டிராத ஒருவரும் தேவன் முன்னிலையிலோ தேவ இராஜ்யத்திலோ பிரவேசிக்க இயலாது. நாம் இயேசுவை போல வாழ்வோம். நாம் இயேசுவையே சொல்லுவோம்.

கேள்வி. இயேசுவை பிரசங்கிக்காத எவரும் இயேசுவின் ஊழியக்காரர்களா? இயேசுவைப்போல வாழாத எவரும் விசுவாசிகளா?

மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். ரோமர் 8:19-25.

ADD YOUR COMMENT

Powered By Indic IME