ஸ்திரீயே ஏன் அழுகிறாய்?
Angels asked, Woman why weepest thou? (John 20:13)
John 20:15; John 14:27,28; John 16:6,7,20-22; Luke 24:17; Acts 21:13; Psalms 43:3-5; Ecc 3:4; Jermiah 31:16.
அந்த தேவதூதர்கள் மரியாளிடம், “பெண்ணே! ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டனர். (யோவான் 20:13)
யோவான்20:15; யோவான் 14:27,28; யோவான் 16:6,7,20-22; லூக்கா 24:17; அப்போஸ்தலர் 21:13; சங்கீதம் 43:3-5; பிரசங்கி 3:4; எரேமியா 31:16.
ஏன் அழுகிறாய்:
இதே கேள்வியை தூதர்கள் மட்டுமல்ல இயேசு கிறிஸ்துவும் மரியாளிடம் கேட்டார் என்று அறிகின்றோம். ஏன் அழுகிறாய் என்று கேட்ட தூதர்களுக்கு இயேசுவை காணவில்லை என்பதே அவர்களின் பதிலாக இருந்தது. இயேசு வைக்கப்பட்டிருந்த இடத்தில் தூதர்கள் இருப்பதை கண்ட மரியாளின் சந்தேகம் அதிகமாயிற்று. அதனால்தான் மரியாள் அழுதாள். மரியாள் மட்டுமல்ல மரியாளோடு கூட இருந்த பெண்களும் அழுதார்கள். சுகந்தவர்க்கமிட முடியவில்லையே, அந்த வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் அழுதார்கள். துக்கத்தினாலும், ஏமாற்றங்களினாலும், இழப்புகளினாலும், தோல்விகளினாலும், பயத்தினாலும் அழுவதுண்டு. மனிதனின் இருதயத்தில் உண்டாகும் உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்கு அழுகையும் கண்ணீரும் ஒரு காரணமாக அறியப்படுகின்றது. பவுல் கூறினார்: அழுகிறவர்களுடனே அழுங்கள் என்பதாகும். ஆம் காயப்படவர்களோடு சேர்ந்து காயபடாதவர்களும் அழுவது அவர்களின் துக்கத்தில் பங்கு அடைவதாகும். லாசரு மரித்த போது இயேசு கிறிஸ்துவும் கண்ணீர்விட்டு அழுதார் என்று விவிலியம் கூறுகின்றது. அழகை அவமானத்தின் அடையாளமல்ல விடுதலைக்கான அடையாளம்.
யோசேப்பும் பென்யமீனும் அழுதார்கள். சபையில் கூடார வாசல் முன்பு இஸ்ராயேலர்கள் அழுதார்கள். நகோமியின் மருமக்கள் அழுதார்கள். அன்னாள் அழுதாள். யோனத்தானும் தாவீதும் அழுதார்கள். எஸ்றா அறிக்கையிட்டு அழுதார். நெகேமியா அழுது உபவாசித்தார். எஸ்தர் ராஜாவின் பாதத்தில் அழுதாள். தாவீது என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன் என்கிறார். ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுதாள். பேதுரு மனங்சந்து அழுதார். விதவைகள் தபீத்தாளுக்காக அழுதார்கள்.
பெண்கள் இயேசுவுக்காக அழுதார்கள். ஏற்கனவே இயேசு கிறிஸ்து எனக்காக அழவேண்டாம் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று கூறியிருந்தும் அழுது கொண்டிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மரணம் அவரோடு இருந்தவர்களுக்கும் பழகியவர்களுக்கும் அவரிடம் நன்மையை பெற்றவர்களுக்கும் வருத்தத்தையும் வேதனையையும் கொடுத்தது. இதனால்தான் இயேசுவின் மரணத்தை நினைவு கூர்ந்து சபையார் துக்கத்தை அனுஷ்டிக்கின்றனர். இது சரியானதா தவறானதா என்று விவாதம் செய்யப்படாமல் அழிந்து போகிறவர்களுக்காகவும் உபத்திரவ படுபவர்களுக்காகவும் அழும்படியாக நமது சிந்தனைகளை செயல்படுத்தலாமே. இயேசுவுக்காய் அழுகிறவர்கள் அழட்டும். அதை கொச்சைப்படுத்த வேண்டாம். நாம் நம் தேவனின் திருப்பணிகளினிமித்தம் அடைகின்ற பாடுகளுக்காக அழுது தேவ சமூகத்தை கண்ணீரால் நிரப்புவோமே. நமது கண்ணீர் அவரது துருத்தியில் நிரப்பபடும்வரை பிரயாசப்படுவோம்.
தூதன் ஸ்திரீயே ஏன் அழுகிறாய்?
மனிதம் அழுகிறது. அவர்களின் அழுகையே விசாரிப்பார் ஒருவருமில்லை.
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது, உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன், அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது. இரட்டை என் உடுப்பாக்கினேன், அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள், மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன். ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன், தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். நான் அமிழ்ந்திப் போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும், என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது, உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும், நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும். நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும், என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும். தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர், என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது, நான் மிகவும் வேதனைப்படுகிறேன், எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை, தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். சங்கீதம் 69:9-20