அவர் வேளை இன்னும் வராததினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை

அவர் வேளை இன்னும் வராததினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

They sought to take Him;but no one laid a hand on Him,because His hour had not yet come. (John 7:30)
Jn7:6,8,44-46; Jn8:20; Jn9:4; Jn11:9,10; Mt26:18; Jn13:1; Jn17:1,2; Jn19:11; Lk13:32,33; Lk22:53; Isa46:10; Ecc7:29; Ecc3:11.

அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. (யோவான் 7:30) 

யோவான் 7:6,8,44-46; யோவான் 8:20; யோவான் 9:4; யோவான் 11:9,10; மத்தேயு 26:18; யோவான் 13:1; யோவான் 17:1,2; யோவான் 19:11; லூக்கா 13:32,33; லூக்கா 22:53; ஏசாயா 46:10; பிரசங்கி 7:29; பிரசங்கி 3:11.

ஒருவரும் அவர்மேல் கைபோடவில்லை. தேவன் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேளையை குறித்திருக்கிறார். தேவனின் அன்றாட அலுவல் திட்ட அடிப்படையில்தான் யாவும் நடக்கிறது. நல்லதும், கெட்டதும் யாவும் அவருக்கு தெரியும்.
தமது திட்டங்களினூடே பிசாசானவன், மாம்சமானவன் செய்யும் செயல்களையும் அறிகின்றார்.
போட்டி ஆரம்பமாகின்றது.
முடிவில் தேவனுடையவைகள் தேவனுடைய வேளையில்தானே தேவனுக்குரியதாய் நடந்தேறும்.

அவருடைய வேளையில் அவர் செயல்படுகிறார்.
அவருடைய வேளை வருவது வரையிலும் எவரும், எவ்விதத்திலும் அதற்கு மாறாய் ஒன்றையும் செய்ய இயலாது.
சாத்தானுமொன்றும் செய்ய இயலாது.

இயேசுகிறிஸ்துவுக்கு பிதா கட்டளையிட்ட யாவையும் பேசி, செய்து முடிப்பது வரையிலும் அவரை பிடிக்கவோ, கொல்லவோ, அப்புறபடுத்தவோ முடியவில்லை.

அதைபோன்றே தேவனுடைய திட்டத்திற்கு உட்பட்டுள்ள எந்த தேவபிள்ளைகளையும், சபைகளையும் அழிக்கவோ, அகற்றவோ ஒருவராலும் இயலாது. அவர்களைகொண்டு தேவன் செய்துமுடிக்க வேண்டியவைகள் செய்துமுடிக்கப்பட்டால் மாத்திரமே உலகத்தின் கண்கள் அவர்கள் மேல் பட வாய்ப்புண்டு.
ஆனாலும் முடிவு ஜெயமே.

கர்த்தாவே, உம் விருப்பம் நிறைவேற்ற உம் மகனை அனுப்பியதுபோல உம் குமாரனின் விருப்பத்தை நிறைவேற்ற எங்களையும் தெரிந்துள்ளீர். நாங்கள் அவைகளை செய்து முடிப்பது வரையிலும் உம் தயவு எங்கள் மேலிருக்கட்டும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME