இயேசு வெளியரங்கமாய் சஞ்சரிக்காமல் தம் சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்

இயேசு வெளியரங்கமாய் சஞ்சரிக்காமல் தம் சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.

Jesus no longer walked openly among the Jews,there remained with His disciples. (John 11:53-57)

Mt10:23; Mt12:14,15; Mk3:6,7; Lk13:31-35; Jn4:1,2; Jn8:59; Jn12:36; Act12:17.

ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். (யோவான் 11:53-57)

மத்தேயு 10:23; மத்தேயு 12:14,15; மாற்கு 3:6,7; லூக்கா 13:31-35; யோவான் 4:1,2; யோவான் 8:59; யோவான் 12:36; அப்போஸ்தலர் 12:17

எச்சரிக்கையாயிருங்கள்:
கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் நிறைந்தவராய் அனேக நற்கிரியைகளைச் செய்து வந்தார். ஜனங்கள் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை பின்பற்றினர்.

இதனைக் கண்ணுற்ற சமயத்தலைவர்கள் இயேசுவைக் கொலை செய்யும் படி ஆலோசனைச் செய்தார்கள். இதனால் இயேசு கிறிஸ்து ஜனங்களுக்குள்ளே பகிரங்கமாக வெளிப்படாமல் தமது சீஷகளோடு மறைந்து வாழ்ந்து வந்தார். இரண்டு காரியங்களின் நிமித்தம் இவ்விதம் மறைந்து வாழ்ந்தார். ஒன்று இயேசுவை காண்கிறவர்கள் அவரைக்குறித்து உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள் ஆலோசனைச் சங்கத்தார். இரண்டாவதாக இயேசு கிறிஸ்து எதிராளிகளின் கையில் தன்னை ஒப்புக்கொடுக்கும்படியான வேளை இன்னும் வரவில்லை என்று நம்பியதாகும்.

இயேசு கிறிஸ்து மறைந்திருந்ததினால் அச்சமயம் இருந்த யூதருடைய பஸ்கா பண்டிகைக்கு இயேசு வரவில்லை. இதனால் பண்டிகைக்கு வந்தவர்கள் இயேசு பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று விவாதித்துக் கொண்டனர்.

அனேக நேரங்களில் நமக்கு உண்டாகும் ஆபத்துக்களைக் குறித்து அறிந்திருப்பது மட்டுமல்லாது, அவைகளுக்கு விலகி வாழவும் வேண்டியுள்ளது. தீமையை எதிர்த்து நிற்க வேண்டாம் என்றும் , பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதீர் என்றும், எதிர்ப்பவர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள் என்றும் விவிலியம் எச்சரிக்கின்றது. பழிக்கு பழி வாங்குவது கிறிஸ்தவ மாண்பல்ல. நம்மிடம் பறித்துக்கொள்ள விரும்புவர்களிடம் இருப்பதையும் விட்டுவிடு. கன்னத்தில் அடிப்பவனை திருப்பி அடிக்காதே. பொறுமையும், சகிப்புத்தன்மையும் நம்மிடம் இருக்க வேண்டிய குண லட்சணம். நம்மை குறித்து தீங்கு சொல்பவர் மீது கோபம் கொள்வதும், எரிச்சல் அடைவதும் பிசாசின் குணங்கள். அப்படிப்பட்ட குணங்களைத் தவிர்த்து அன்புடன் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். கவனமாயிருங்கள். இயேசு வரப்போகிறார்.

நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்கு தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். சங்கீதம் 38:20

ADD YOUR COMMENT

Powered By Indic IME