குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்

குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலை ஆவீர்கள்.

if the Son makes you free, you shall be free indeed. (John 8:36)

Jn8:31,32; Lk4:18,19; Ro8:2; 2Cor3:17; Gal5:1; Ps19:13; Ps119:32,133; Isa49:24,25; Isa61:1f; Zec9:11,12.

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36) 

யோவான் 8:31,32; லூக்கா 4:18,19; ரோமர் 8:2; 2கொரிந்தியர் 3:17; கலாத்தியர் 5:1; சங்கீதம் 19:13; சங்கீதம் 119:32,133; ஏசாயா 49:24,25; ஏசாயா 61:1f; சகரியா 9:111,2.

குமாரனால் விடுதலை:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் மெய்யான விடுதலையுண்டு. அவருடைய வார்த்தையினாலும், அவருடைய இரத்தத்தினாலும், அவருடைய ஆவியினாலும் விடுதலை உண்டு,
இயேசுகிறிஸ்துவினாலன்றி இவ்வுலகில் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், வியாதிகளிலிருந்தும், சிறையிருப்புகளிலிருந்தும், சாத்தானின் அடிமைபடுத்துதலிலிருந்தும் வேறு ஒருவராலும் விடுதலை தர இயலாது.
இயேசுகிறிஸ்துவினால் மட்டுமே இவ்வுலகின் வல்லடிக்கு தப்பி பரலோகத்துக்குள் செல்லும் மெய்யான விடுதலை கிடைக்கின்றது.
இவ்வுலக வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் இயேசுகிறிஸ்துவே வழி.
எவ்விதமான யாகங்களினாலோ, புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதினாலோ, தெய்வங்களினாலோ விடுதலை பெற இயலாது.
நேர்மறை சிந்தனை, நல்லொழுக்கம், நற்செயல்கள் போன்றவை மனிதனை நல்வழிபடுத்தும். ஆனால் ஆன்மீக விடுதலைக்கு இயேசு மட்டுமே.
இயேசுகிறிஸ்து எல்லாரும் விடுவிக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றார். ஆனால் அவர் எல்லாரையும் விடுவிப்பதில்லை. தமக்கு சித்தமானவர்களையே விடுவிக்கின்றார். மரணத்தினின்று உயிர்ப்பிக்கின்றார். தம் இராஜ்யத்தில் சேர்க்கின்றார்.
அவர் நம்மை விடுவித்தால் ஒழிய வேறுவழியில் நாம் விடுதலை பெறவியலாது.
இயேசுவை நம்புங்கள்.
அவர் வார்த்தையை நம்புங்கள்.
இயேசுவே மெய்யான தெய்வம்.
அவர் தருவதே மெய்யான விடுதலை.
கர்த்தாவே உம் குமாரனைக்கொண்டு அடிமைதன வாழ்விலிருந்து விடுதலையின் வாழ்விற்குள் வர வழி அமைத்ததற்காய் நன்றி. நாங்கள் அதில் செம்மையாய் ஓட பெலன் தாரும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME