ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை.

ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை.

 if anyone keeps My word he shall never see death. (John 8:51)

Jn3:15,16,36; Jn5:24; Jn6:50;8:55; Jn11:25,26; Jn14:6; Jn15:20; 1Co2:14; Heb11:5; Ps49:9; Ps89:48.

ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:51) 

யோவான் 3:15,16,36; யோவான் 5:24; யோவான் 6:50; யோவான் 8:55; யோவான் 11:25,26; யோவான் 14:6; யோவான் 15:20; 1கொரிந்தியர் 2:14; எபிரெயர் 11:5; சங்கீதம் 49:9; சங்கீதம் 89:48.

மரணத்தைக் காண்பதில்லை:
   இயேசுகிறிஸ்து பிதாவின் வார்த்தைகளைக்கேட்டு அதையே பிரசங்கித்தார். அந்த இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன் படி நடப்பவர் மரணத்தைக் காண்பதில்லை. மரணத்திலிருந்து உயிர் பெறுவர்.

மூன்றுவிதங்களில் அழிவில்லாத வாழ்வு இயேசுவோடு சம்பந்தபட்டுள்ளது.

  • இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் மரணத்தைக் காண்பதில்லை. யோவான் 3:15,16; யோவான் 6:40.
  • இயேசுவின் சரீரம், இரத்தத்தை உண்பதின் மூலம் மரணத்தைக் காண்பதில்லை. யோவான் 6:53,54.
  • இயேசுவின் வசனத்தைக் கேட்டு அதன்படி நடப்பதன் மூலம் மரணத்தைக் காண்பதில்லை. யோவான் 8:51.
    இந்த மூன்று முறைகளிலும் கிறிஸ்துவோடு தங்களை இணைத்துக் கொள்பவர்கள் எவராயினும் மரணத்தைக் காண்பதில்லை.
  • இது எவ்விதமான மரணத்தைக் குறிக்கின்றது?
    சரீரபிரகாரமான மரணம் உண்டாகும். இந்த மரணத்திலிருந்து இயேசுகிறிஸ்து பிதாவினால் உயிர்ப்பிக்கப்பட்டது போல இவர்களும் இயேசுகிறிதுவினால் மரணத்தினின்று உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள். என்றென்றும் இயேசுவோடு வாழ்வர்.
    இயேசுவின் வார்த்தைகள் உலகியல் சார்ந்தவைகளல்ல, ஆவியியல் சார்ந்த தேவனுடைய வார்த்தைகள். இந்த வார்த்தைகளினாலேதான் இவ்வுலகம் உண்டானது.
    இந்த வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் போனதினால் பாவமும், சாபமும், மரணமும் உலகிற்கு வந்தது.
    இப்பொழுது இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதன் படி வாழ்பவன் பாவத்தினால் உண்டான மரணத்தை விட்டு நீங்கி மறுபடியும் ஜீவனுக்குட்படுகின்றான். அவரின் வார்த்தையினால் பிழைப்பான், வார்த்தையினால் ஜீவன் பெறுவான்.
    கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, தியானிக்கும்போது நாம் தேவனோடு இணைந்துக்கொள்வதை போன்ற அனுபவத்தைப் பெறுகின்றோம். எனவே, வசனத்தோடு இணைந்து ஆவியில் வளர்வோம்.
    கர்த்தாவே உம்் மகன் மூலம் ஜீவனுள்ள வார்த்தைகளைத் தந்து எங்களை மரணத்தினின்று விலக்கி நித்திய வாழ்வுக்கென்று ஆயத்தப்படுத்தி வருகின்றமைக்காய் உமக்கு நன்றி.

ADD YOUR COMMENT

Powered By Indic IME