அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.
Heavens will be dissolved, being on fire,elements will melt with fervent heat,according to His promise,new heavens and a new earth in which righteousness dwells. (2 Peter 3:12,13)
Isaiah 2:1-22; Isaiah 64:1:12; Micah 1:4; Isaiah 65:17; Isaiah 66:22; Revelation. 21:1,27.
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். (2 பேதுரு 3:12)
அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். (2 பேதுரு 3:13)
ஏசாயா 2:1-22; ஏசாயா 64:1-12; மீகா 1:4; ஏசாயா 65:17; ஏசாயா 66:22; வெளி 21:1,27.
எரிந்துபோகின்றவை:
தேவனால் மனுகுலத்துக்கென்று படைக்கப்பட்ட வானம் பூமி ஆகியவை அனேக நன்மைகளுக்குரியதும், ஆச்சரியத்துக்குரியதுமாகும். பாவம் உலகில் உண்டானது முதல் பிசாசுகள் வானமண்டலங்களையும், பூமியையும் கெடுத்து சீரழிக்கும்படிக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரயாசப்படுகின்றது. பூமியையும் வானத்தையும் கெடுக்கின்ற சாத்தானை வெறுத்து துரத்துவதற்கு பதிலாக நேசித்து ஆராதனை செய்து பின்பற்றுகின்றது மனுகுலம். பூமியை சீர்படுத்த வந்த இயேசுகிறிஸ்துவை முற்றிலும் வெறுத்து அவருடைய இராஜ்ஜியத்தை மேற்கொள்ள முயன்றுவருகிற பிசாசுகளுக்கு மனுகுலம் ஒத்துபோகின்றது.
வானமண்டல ஆவிகளையும், அந்தகார லோகாதிபதிகளையும், இப்பிரபஞ்சத்தின் அதிபதியையும் அழித்துபோடும்படியாய் தேவன் ஒரு நாளை குறித்திருக்கின்றார். அந்த நாளிலே இந்த வானம் பூமி யாவும் அக்கினியினால் எரிக்கப்படும். பிசாசுகளும் அவன் கூட்டமும் பாதாளத்திலும், நரகத்திலும் தள்ளப்படும்.
நீதியும் தேவனுடைய மகிமையும் ஆசீர்வாதங்களும் வாசமாயிருக்கும் புது உலகம் உருவாக்கப்படும். அங்கே எரி நரகிற்கு உட்படுத்தபடாத பரிசுத்தவான்கள் நித்திய நித்தியமாய் வாசமாய் இருப்பார்கள்.
அன்பானவர்களே எரிக்கப்பட ஒப்புகொடுக்கப்பட்டிருக்கின்றவைகள் மீது ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்களாய் இராது உருவாக்கப்படபோகின்றவைகள் மீது வாஞ்சையும் எதிர்பார்ப்பும் உள்ளவர்களாய் மாறுங்கள். எரிக்கப்படவேண்டியவைகளை எரியூட்டுவோம்.
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2பேதுரு3:10-14.