என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு.
In My Father’s house are many mansions. (John 14:2)
John12:25,26; 2Corinthians 5:1; Hebrews 11:10,14-16; Hebrews 13:14; Revelation 3:12,21; Revelation 21:10- 27; Psalms 45:8; Psalms 132:7; Isaiah 32:18.
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். (யோவான் 14:2)
யோவான் 12:25,26; 2கொரிந்தியர் 5:1; எபிரெயர் 11:10,14-16; எபிரெயர் 13:14; வெளி3:12,21; வெளி 21:10-27; சங்கீதம் 45:8; சங்கீதம் 132:7; ஏசாயா 32:18.
பிதாவின் வீட்டு வாசஸ்தலம்:
கர்த்தராகிய இயேசு பிதாவினால் அனுப்பப்பட்டு பிதாவினிமிடமிருந்து வந்தவர். இயேசுகிறிஸ்து தன்னை அனுப்பிய பிதாவை அறிவார். தம்மை அனுப்பிய பிதாவின் வீட்டையும் அறிவார். ஏனெனில் பிதாவின் வீட்டின் செல்லபிள்ளையே இயேசுகிறிஸ்து ஆவார். பிதாவின் வீட்டின் அறைகளையும், அங்குள்ள திரவியங்களையும் அறிவார். ஆகையினால் இயேசு குறிப்பிட்டுள்ள பிதாவின் வீட்டு வாழ்விடங்களை நாம் மனதார ஏற்றுக்கொண்டு விசுவாசிக்க வேண்டும். கண்டவர் சாட்சியிடுகிறார். அவரின் சாட்சி மெய்யானது என்றும் நாம் அறிவோம்.
பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு என்பது எதனைக் குறிக்கின்றது?
பாவம் உட்புகுந்ததினால் பூமியின் கூடாரங்கள் யாவும் ஆகாமிய கூடாரங்களாக மாறிவிட்டது. இங்கே கொடுமையும் பொல்லாப்பும் அரங்கேறுகின்றது. சாத்தான் பூமியின் கூடாரத்தைக் கெடுத்துப் போட்டான். பாவத்தினாலும் சாபத்தினாலும் சாத்தானாலும் கெடுக்கப்பட்ட இந்த பூமியின் கூடாரங்களெல்லாம் அழிவுக்கென வைக்கப்பட்டுள்ளது. புதிய வானம் புதிய பூமியை உண்டுபண்ணும் காலம் வரும்போது இந்த வானமும் பூமியும் அழிக்கப்படும்.
நிலையில்லாத இந்த கூடார வாழ்க்கையில் நாம் யாவரும் ஒருநாள் எல்லாவற்றையும் விட்டுவிட்டுதான் போகப்போகிறோம். இவ்வுலகைவிட்டு ஆடமபரங்களை விட்டு வெளியேறும்போது எந்த வீட்டுக்கு நாம் செல்ல இயலும்? நாம் மரிக்கும்போது நித்திய வீட்டிலே நமக்கு இடம் உண்டாகும்படிக்கு கர்த்தராகிய இயேசு நமக்குரிய நிலையான வாசஸ்தலத்தை வாக்களிக்கின்றார். நாம் அவரை விசுவாசித்து அவரை பின்பற்றும்போது இந்த பிதாவின் வீட்டில் நமக்கு இடமுண்டாயிருக்கும்.
இஸ்ராயேலரின் கானான் அவர்களுக்கு நிலையான வீடல்ல, பரம கானானே அவர்களுக்கு நிலையான வீடு.
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? லூக்கா16:8-11.