யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனார்.
Joseph disciple of Jesus,secretly,asked Pilate gave order,he came and took the body of Jesus. (John 19:38)
Matthew 27:57,58; Mark 15:42-45; Luke 23:51,52; Proverbs 29:25; Philipians 1:14.
இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். (யோவான் 19:38)
மத்தேயு 27:57,58; மாற்கு 15:42-45; லூக்கா 23:51,52; நீதிமொழிகள் 29:25; பிலிப்பியர் 1:14.
அரிமத்தியா சீஷன் யோசேப்பு.
இயேசுகிறிஸ்துவை பின்பற்றியவர்கள் 12 பேர்கள் மட்டுமல்ல, வேறு 70 பேர்களும் உண்டு. இந்த யோசேப்பு அந்த 70 பேர்கள் கூட்டத்தை சார்ந்தவராகவோ, அல்லது ரகசியமாய் அவரை பின்பற்றியவராகவோ இருந்திருக்கக் கூடும். இந்த யோசேப்பு குறித்த அனேக குறிப்புகள் சுவிசேஷங்களில் காணப்படுகின்றன.
மத்தேயுவில். இவர் இயேசுவுக்கு சீஷன், ஐசுவரியவான் என்று குறிப்பிடுகின்றார். அப்படியென்றால் வசதிபடைத்தோரும் இயேசுவை பின்பற்றியுள்ளார்கள். மட்டுமல்ல, அவரின் 70 பேர் கொண்ட சீஷர் கூட்டத்தை சார்ந்தவராகவும் இருக்கின்றார். இயேசுவுக்கு ஆஸ்திகளால் ஊழியம் செய்த பெண்களைப்போல ஆஸ்திகளால் ஊழியம் செய்த ஆண்களும் இருந்துள்ளார்கள் என்று நம்பலாம். நாம் நமது ஆஸ்திகளால் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முனைந்துள்ளோமா?
மாற்குவில்… இவர் கனம்பொருந்தியவர், அதாவது மரியாதைக்குரியவர், ஆலோசனைக்காரர். தேவனுடைய நியமங்களின் அடிப்படையில் ஆலோசனைக் கொடுக்கிற ஆலோசனைக்காரர். அதுமட்டுமல்ல, தேவனுடைய இராஜ்யம வர காத்திருந்தவர்களில் ஒருவர் என்றும் அறியலாம். அப்படியானால் இவர் வயது முதிர்ந்தவர் எண்று அறிய முடிகின்றது. இயேசுவின் பிறப்பில் சிமியோன் என்ற முதியவர் தோன்றியதுபோல இயேசுவின் இறப்பிலும் ஒரு முதியவர் தோன்றுகின்றார். இக்கால சபைகளிலும், ஊழியங்களிலும் வயது முதிர்ந்தவர்களை கனம்பண்ணும், அவர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும் மனிதர்கள் உண்டா?
லூக்காவில்… இவர் ஒரு ஆலோசனைக்காரர், மட்டுமல்ல உத்தமரும், நீதிமானுமாயிருந்தார். இயேசுவுக்கு ஊழியம் செய்கிறவர்கள் உத்தமர்களாகவும், நீதிமான்களாகவும் இருக்க வேண்டும். தேவனுடைய இராஜ்யம் வர காத்திருக்கிறவரும், யூதருடைய சர்ப்பணையான ஆலோசனைக்கு சம்மதியாதவருமாயிருந்தார். தேவனுக்கு பயந்து வாழ்கின்றவர்கள் பிற ஆலோசனைகளை ஏற்பதில்லை.
யோவானில்… இவர் அரிமத்தியா ஊரிலிருந்து வந்தவர். யூதருக்கு பயந்ததினால் அந்தரங்க சீஷனாயிருந்தவர். இயேசு உயிரோடிருக்கும்போது மட்டுமல்ல அவர் மரித்தபின்பும் அவர்மேல் அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் கொண்டவராயிருந்தார். ஆகையினால் தான் அவரது சரீரத்தை பிலாத்துவிடம் துணிந்து போய் கேட்டார். அதன்படி இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு போனார். அந்தரங்க சீஷனே வெளியரங்கமான பணியைசெய்தார். வெளிப்படையான சீஷர்கள் அந்தரங்கத்துக்குள் மறைந்து போனார்கள்.
தேவனுடைய மக்கள் நாட்டின் சட்டத்துக்கு அடங்கி வாழவேண்டியவர்களே. ஆனால் விசுவாசத்தையும், அன்பையும், தேவனுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டியதில் கவனத்தையும், தெய்வ பயத்தையும் உடையவர்களாயிருக்க வேண்டும்.
தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தருடைய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. 1தெசலோனிக்கேயர் 1:2-10.