யூதாஸ் திருடனானபடியினால் இப்படி பேசினான்
He was a thief,and had the money box;and he used to take what was put in it. (John 12:6)
Jn10:8-10; Jn13:29; Mt21:13; Lk11:39; Lk12:33; Lk16:10; 1Cor6:9-21; 1Thes5:22; 2Kin5:20-27; 2Kin12:14,15; Ezr8:24-34; Ps50:16-20.
அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். (யோவான் 12:6)
யோவான் 10:8-10; யோவான் 13:29; மத்தேயு 21:13; லூக்கா 11:39; லூக்கா 12:33; லூக்கா 16:10; 1கொரிந்தியர் 6:9-21; 1தெசலோனிக்கேயர் 5:22; 2இராஜாக்கள் 5:20-27; 2இராஜாக்கள் 12:14,15; எஸ்றா 8:24-34; சங்கீதம் 50:16-20
ஏன் அவன் திருடன்?
யூதாஸ் இயேசுகிறிஸ்துவின் சீஷன். இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தில் கிடைக்கக்கூடிய பணத்தை பத்திரப்படுத்தி தன் வசமாய் வைத்துக்கொள்ள உரிமைபெற்றவன். இவன் சற்று படித்திருந்தவனாகையினாலும், கணக்கு காரியங்கள் தெரிந்தவனாகையினாலும் இவ்வித பொறுப்பு இவனுக்கு தரப்பட்டிருக்கலாம். இந்த பொறுப்பில் இவன் உண்மையாயிருக்கவில்லை என்பதை திருடன் என்றச் சொல் குறிப்பிடுகின்றது. உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்று இயேசு சொல்லக் காரணம் இதுவாக தானிருக்கும். கையில் பணம் இருப்பதினால் பாவ எண்ணங்கள் வருவதில்லை. உள்ளத்தில் இச்சைகளும், ஆசைகளும் விருப்பங்களும் இருப்பதினால்தான் பணத்தை கவன ஈனமாகவும், ஊதாரிதனமாகவும் செலவழிக்கும் பேராவல் உண்டாகின்றது. பொருள் பாவமல்ல, பொருளாசையே பாவமாகக் கருதப்படுகின்றது. அன்பு, பாசம், நேசம் பாவமாவதில்லை. அவைகள் இச்சையில் கர்ப்பம் தரிக்கும்போதுதான் பாவமாகின்றது.
நமது சேமிப்புகளையும், சம்பாத்தியங்களையும் குறித்து தேவனும் கணக்கு கேட்பார், அரசாங்கமும் கணக்கு கேட்கும். பரலோகில் குடியேற நமது சம்பாத்தியங்களில் மனப்பூர்வமாக தசமபாகங்களையும், கையின் காணிக்கைகளையும், எளியவர்க்கு உதவுவதையும், சேமிப்பையும் செயல்படுத்திதானாக வேண்டும். இந்த நாட்டின் குடிமகனாக இருக்க அரசுக்கு வரிகளையும், தனக்கு சேமிப்பையும் செயல்படுத்திதானாக வேண்டும். இந்த இரண்டில் நாம் எதை செய்யாமல் இருந்தாலும் திருடன் என்ற பட்டத்துக்கே உரியவர்களாவோம். சம்பாதிக்கும் யாவையும் வாயில் போடுகிறவனுக்கு தேவன் திரும்ப தருவதில்லை. மாதந்தோறும், வாரந்தோறும் உன் சம்பாத்தியத்தில் நீ சார்ந்துள்ள சபைக்கு உன் தசமபாகங்களையும், காணிக்கைகளையும் செலுத்து. நீ நரகத்துக்கு உரியவனல்ல, தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு உரியவன் என்பதை மறவாதே.
விதைத்துபார்… அறுவடையை அவர் தருவார்….
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணு.
அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும். நீதிிமொழிகள் 3:9,10.