யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைப்படி சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்

யூதர்கள் அடக்கம் பண்ணும் முறைப்படி சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

Took body of Jesus,bound it in strips of linen with spices,as custom of the Jews is to bury. (John 19:40)

John 11:44; John 20:5-7; Acts 5:6; Genesis 50:2; 2Chronicals 16:14; Matthew 26:12; Matthew 18:18; Acts 2:24; Acts 12:6; 2Timothy 2:9.

அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். (யோவான் 19:40)

யோவான் 11:44; யோவான் 20:5-7; அப்போஸ்தலர் 5:6; ஆதியாகமம் 50:2; 2நாளாகமம் 16:14; மத்தேயு 26:12; மத்தேயு 18:18; அப்போஸ்தலர் 2:24; அப்போஸ்தலர் 12:6; 2தீமோத்தேயு 2:9.

கட்டப்பட்ட இயேசுவின் சரீரம். 
யூதர்களின் முறைமையின்படி இயேசுவின் சரீரத்தை சுகந்தவர்க்கமிட்டு சீலைகளில் சுற்றிகட்டினார்கள். இறந்துபோன சரீரமாயிருந்தாலும் அது தூய்மையான சரீரம், தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட சரீரம் (எபிரெயர் 10:5) இப்பொழுது கட்டப்பட்டிருக்கின்றது. சீலையில் சுற்றப்பட்டிருக்கின்றது. யாவருக்கும் தெரியும்படியாய் பூமியிலே வெளிப்பட்ட சரீரம் இப்பொழுது ஒருவருக்கும் தெரியக்கூடாதபடிக்கு கட்டப்பட்டிருக்கின்றது. இது நியாயப்பிரமாண நியமம். தேவனுடைய விருப்பம். தேவனுடைய வல்லமையை தமது குமாரனில் வெளிப்படுத்தும்படியாக தேவன் செய்த செயல். 

இயேசுவின் உண்மை சரீரம் கட்டப்பட்டதை போலவே பாவம் நிறைந்த உலகில், அக்கிரமம் நிறைந்த உலகில், இருள் நிறைந்த உலகில்  இயேசுவின் சரீரமாகிய சபையை கட்டும்படியாக சாத்தானும், அதிகாரங்களும், வல்லமைகளும்  முயற்சிக்கின்றது. பாவத்தினால் கட்டப்பட்டவர்களையும், சாத்தானால் கட்டப்பட்டவர்களையும் விடுவிக்கும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இக்காலத்தில் புறஜாதியாராலும், ஆட்சியாளர்களாலும், கட்டப்படும்படியாய் முயற்சிக்கப்படுகின்றது. சில நேரங்களில் கிறிஸ்தவம் கட்டப்பட்டதைப் போல காணப்பட்டாலும் இன்றுவரையிலும் பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்ளவில்லை. 

மரணகட்டுகளை அறுத்து உயிர்ப்பித்த இயேசு இப்பொழுது மரணகட்டுகளினால் கட்டப்பட்டுள்ளார். ஆம் இந்த இயேசு கிறிஸ்துவை போல அவரை பின்பற்றிய தேவமனிதர்களும் கட்டப்பட்டவர்களாக காவலிலும், சாவிலும், நோவிலும் கிடந்தார்கள் என்பதை நிருபங்களில் வாசிக்கின்றோம். பவுல் நான் பாதகன் போல கட்டப்பட்டு துன்பத்தை அனுபவிக்கின்றேன், வேதவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை என்று  2தீமோத்தேயு 2:9 ல் கூறுகின்றார்.

ஆம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை கட்டிப்போட எத்தனிக்கலாம். ஆனால், சுவிசேஷத்தையும், தேவனுடைய வார்த்தையையும், தேவனுடைய ஆவியையும், அவரது வல்லமையையும் கட்டிபோடவோ, மட்டுபடுத்தவோ ஒருவராலும் இயலாது. 

இவைகள் கட்டப்பட இயலாதபடிக்கு ஆற்றலுள்ளதாய் இருப்பதினால் சீலையால் சுற்றப்பட்ட , மரணகட்டுகளினால்  கட்டப்பட்ட இயேசுவின் சரீரமும் கட்டுகளை அறுத்து ஜெயமாக எழும்பிவரும். கட்டுகள் அறுக்கப்படும்படியாகவே கட்டப்பட்டுள்ளது. கட்டுகளின் பலம் எத்தகைய பலவீனம் கொண்டது என்று காட்டப்படும்படியாகவே கட்டப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.  மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. சங்கீதம் 18:1-6.நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம். எபிரேயர் 10:34-39.

ADD YOUR COMMENT

Powered By Indic IME