இயேசு அவளைப் பார்த்து, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்

இயேசு அவளைப் பார்த்து, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய்

Jesus said to her,Woman, why are you weeping?.Whom are you seeking? (John 20:13) 

John 1:38; John 18:4,7; Matthew 24:23-31; Matthew 28:5; Mark 16:6; Luke 24:5; John 6:24; Song 3:2; Song 6:1.

இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். (யோவான் 20:15) 

யோவான் 1:38; யோவான் 18:4,7; மத்தேயு 24:23-31; மத்தேயு 28:5; மாற்கு 16:6; லூக்கா 24:5; யோவான் 6:24; உன்னதப்பாட்டு 3:2;6:1.

யாரைத் தேடுகிறாய்?
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள் என்று ஏசாயா கூறுகின்றார். 55:6. தேடுகிறவன் கண்டடைகிறான் என்று  இயேசு கிறிஸ்து கூறுகின்றார். மத்தேயு 7:8. என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான் என்று ஞானி கூறுகின்றார். நீதிமொழிகள் 8:35.

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே என்று பவுல் கூறுகின்றார். அப்போஸ்தலர் 17:27. 

ஆம். கர்த்தராகிய இயேசு நாம் கண்டுபிடிக்கதக்கதாகவும், அறிந்துக் கொள்ளதக்கதாகவும், ஏற்றுக்கொள்ளதக்கதாகவும் மனிதனாக வந்து மனிதரிடையில் நம் அருகில் வாசம் பண்ணினார். 

உயிரோடிருக்கும் இயேசுவிடமே இயேசுவின் சரீரத்தை எங்கே வைத்தீர்கள், எனக்கு காண்பியும் என்று கேட்கின்றாள் மரியாள். ஆம், மரியாளும் அவளின் கூட்டமும் இயேசுவை தேடுகிறார்கள். இயேசுவிடமே இயேசுவை தேடுகிறார்கள். இவர்களைபோல மெய்யான அறிவில்லாத பெண்கள் ஆதிசபையில் காணப்பட்டார்கள். அவர்கள் கள்ளபோதகர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்று  பவுல் கூறுகின்றார். 2தீமோ3:6,7. கடைசி நாட்களில் இயேசு இங்கே இருக்கிறார், இயேசு அங்கே இருக்கிறார் என்று பிரசங்கிக்கும்  பிரசங்கிகளும், இப்படிபட்ட பிரசங்கிகளை நம்பி, ஏமாந்து இயேசுவை தேடிக்கொண்டுபோகும் கூட்டங்களும்  உண்டாயிருக்கும் என்று இயேசு கிறிஸ்து தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். மத்தேயு 24:23,24. 
தேவனுடைய மனிதர்களும், தேவனுடைய சபையாரும் அறிவில்லாதிருப்பதை தேவன் விரும்பவில்லை. தேவனுடைய மக்கள் தெய்வீகத்துவத்தின் பரிணாமங்களை அறிந்தும், புரிந்தும், தெரிந்தும் கொள்வதற்காகவே தேவன் தமது ஆவியை தந்துள்ளார். 1கொரிந்தியர் 2:8-12. தமது ஆவியை நமது உள்ளங்களில் அளவில்லாமல் ஊற்றியுள்ளார். 2கொரிந்தியர் 1:22. நமது இருதயம் பெருந்திண்டியினாலும், லௌகீக கவலைகளினாலும் நிரம்பாமல் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியினால் நிற்றப்பப்பட்டவர்களாயிருப்பதை தேவன் விரும்புகின்றார். லூக்கா21:34. 

கிறிஸ்துவை நாம் எங்கும் தேடிப்போகவேண்டியதில்லை. அவரை விசுவாசிக்கிறவர்களின் உள்ளங்களில் கிறிஸ்து வாழ்கிறார். எபேசியர் 3:17; எபேசியர் 4:6. கிறிஸ்துவை தங்கள் உள்ளங்களில் பெற்றிருக்கிற யாவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய  சபையிலே ஒருங்கிணைந்து, போட்டிகள் பொறாமையின்றி தேவனை பாடி கீர்த்தனம் பண்ணி பக்தியில் வளருவதையே விரும்புகிறார். 

நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. 

ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.  இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4:14-24.

ADD YOUR COMMENT

Powered By Indic IME