மார்த்தாள் மரியாளிடம், போதகர் வந்திருக்கிறார். உன்னை அழைக்கிறார்.
she went her way and secretly called Mary her sister,saying,Teacher has come and is calling for you. (John 11:28)
Jn11:20; Jn1:41,45; Jn21:7; Lk10:38-42; Mt26:18; Mk5:35; 1Thes4:17,18; 1Thes5:11; Heb12:12,13.
இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். (யோவான் 11:28)
யோவான் 11:20; யோவான் 1:41,45; யோவான் 21:7; லூக்கா 10:38-42; மத்தேயு 26:18; மாற்கு 5:35; 1தெசலோனிக்கேயர் 4:17,18; 1தெசலோனிக்கேயர் 5:11; எபிரெயர் 12:12,13.
அழைக்கிறார் இயேசு.
கர்த்தராகிய இயேசு பரலோகம் விட்டு பூமிக்கு வந்ததின் பிரதான நோக்கமே உலக மக்கள் யாவரும் மனந்திரும்பி தேவனுடைய இராஜ்ஜியத்துக்குட்படவேண்டும் என்பதேயாகும். பாவத்தைச் சுட்டி காட்டி அதன் விளைவை எடுத்துரைத்து மனந்திரும்ப அழைப்பதே அவரின் திருப்பணியாகும். பாவத்தினிமித்தம் சாபமும், வியாதிகளும், வறுமைகளும், குறைவுகளும், மரணமும் உண்டாகி மனித குலத்தை வெகுவாகபாதித்தது. மனந்திரும்பாமல் உண்டாயிருந்த குறைபாடுகளில் மனந்திரும்ப அழைப்பு கொடுத்தவர், மனந்திரும்பியோரில் இருந்த குறைபாடுகளினிமித்தம் அந்த குறைபாடுகளைச் சொல்லி அவர்களைச் சுகமாக்க அழைத்தார்.
வருத்தம், வேதனை, கண்ணீர், இழப்பு, அவமானங்களால் நிறைந்திருந்த லாசருவின் சகோதரிகளை தம்மிடம் வரும்படி அழைக்கின்றார். இதேபோல பாடுகளை அனுபவிக்கும் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்.
பாடுகளிலும், துன்பங்களிலும், போதகரின் ஆலோசனையையும், அன்பையும், வழிகாட்டுதலையும் பெற்றுகொள்ளும்படி ஆர்வமுடையவர்களாயிருந்ததினால் தான் கர்த்தராகிய இயேசுவிடம் செல்ல தூண்டப்பட்டார்கள். அனேக நேரங்களில் நமது போதகரின் வழிகாட்டுதலைப் பெற விருப்பமில்லாமல் தன்னிஷ்டமான பாதையில் சென்று கண்ணீரின் பள்ளதாக்கைச் சொந்தமாக்கிக் கொள்ளுகிறோம். இப்படிபட்டவர்கள் நீதிமொழிகள் 5:11-14 ஐ படித்து பார்த்து சிந்தித்துக் கொள்ளுவது நல்லது.
தேவன் கிறிஸ்துவையும், கிறிஸ்து பரிசுத்த ஆவியையும், பரிசுத்த ஆவி போதகர்களையும் நமக்கு ஆலோசகர்களாக வைத்துள்ளார். நாம் நமக்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கில் நடக்கும்போது நமக்காய் உத்திரவாதம் பண்ண அவர் ஆயத்தமாயுள்ளார். நமது சரீரத்துக்கும், நமது ஆன்மாவுக்கும் , நமது குடும்பத்துக்கும் நல்ல ஆலோசகர் அவரே.
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன், சங்கீதம் 32:8