மார்த்தாள் எதிர் கொண்டுபோனாள். மரியாள் வீட்டிலிருந்தாள்

மார்த்தாள் எதிர் கொண்டுபோனாள். மரியாள் வீட்டிலிருந்தாள்.

Martha, as soon as she heard that Jesus was coming, went and met Him, but Mary was sitting in the house. (John 11:20)

Jn12:13,18; Jn11:30; Mt 25:1 -13; Act10:24-26; Act 28:15; 1Thes4:17; Heb7:1,9

இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள், மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
(யோவான் 11:20)

யோவான் 12:13,18; யோவான் 11:30; மத்தேயு 25:1 -13; அப்போஸ்தலர் 10:24-26; அப்போஸ்தலர் 28:15; 1தெசலோனிக்கேயர் 4:17; எபிரெயர் 7:1,9

எதிர்கொண்டு போகுதல்:
லூக்கா 10:38-42 ல் மார்த்தாளைக் குறித்து குறைபாடாக சொல்லப்பட்டிருக்க இங்கேயோ மார்த்தாளைக் குறித்து சற்று மிகையாக சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வருகையைக்குறித்து மார்த்தாள் மரியாளுக்கு சொல்லப்பட்டிருக்க மார்த்தாள் மட்டுமே அவருக்கு எதிர்கொண்டு போனாள். மரியாள் தன் வீட்டிலில் இருந்துக் கொண்டாள்.

லூக்காவில் மரியாள்: இயேசுகிறிஸ்துவின் அருகில் இருக்க, மார்த்தாள் தூரமாய் விலகி நின்றாள். இதற்கு பல காரணங்கள் கூறினாலும் இயேசுவுக்கு எதிர்கொண்டு போகக்கூடிய வாஞ்சையைக் கொண்டிருந்த மார்த்தாளின் செயலை மட்டுமே நாம் கவனத்தில் கொள்வோம். \

இயேசுவுக்கு செய்தி அனுப்பியவளும் மார்த்தாள்தான். இப்பொழுது அவருக்கு எதிர்கொண்டு போவதும் மார்த்தாள்தான். கேள்வி கேட்பதற்காகவே சென்றாளா? அவரிடம் வேதனையைச் சொல்லி அழுவதற்காக சென்றாளா? என்று தெரியாது. ஆனால் இயேசுவை வரவேற்க ஓடினாள்.

நமது வாழ்விலும் துன்பங்களும், துயரங்களும், இழப்புகளும், தோல்விகளும் வந்தாலும் இயேசுவை நாம் வாழ்விற்குள், நம் வீட்டிற்குள் வரவேற்கும் குணம் உடையவர்களாயிருக்க வேண்டும். இயேசுவுக்கு எதிர்கொண்டு சென்று அவரை தன் வீட்டிற்கு அழைத்து வருவதை இயேசு விரும்புகிறார். தன் சகோதரனை இழந்திருந்தாலும், இயேசு தன்னுடைய சகோதரனை உயிரோடெழுப்பாதிருந்தாலும், இயேசு தன் சகோதரனின் மரணத்துக்கு வராமலிருந்தாலும் அவரை எதிர்கொண்டுபோய் அழைத்து வருவதை மார்த்தாள் சந்தோஷமாக செய்தாள்.

நமது வாழ்வில் உண்டாகும் மோசமான நிகழ்வுகளில் தேவனையும் கிறிஸ்துவையும் தன் சபை ஊழியக்காரரையும் தன் வீட்டுக்கு வரவேற்காத எத்தனை குடும்பங்கள் காணப்படுகின்றன. இயேசுகிறிஸ்து நல்லதுக்கு மட்டுமல்ல கெட்ட காரியங்களுக்கும் அவர் நமக்கு வேண்டும். தேவனிடம் சேரும் பழக்கம் இருந்தால் தான் அவர் நம்மிடமாய் சேரும் அனுபவம் கிடைக்கும். நாம் அவரை கனப்படுத்தினால் அவர் நம்மை பிரஸ்தாபப்படுத்துவார்.

நாம் அவரை நேசித்தால் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவார்.
அவரை விடாதிருங்கள்.வேறு எங்கும் போகுமுன்பு அவரை உங்கள் வீட்டுக்கு அழைத்து வாருங்கள்.

கர்த்தாவே நீர் எங்களுக்காக செயல்படுவதை நாங்கள் அறிந்து உம்மை வரவேற்று உம் நன்மைகளை பெற எங்களுக்கு உதவிடும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME