மாம்சத்தின் இச்சை உலகத்தினாலுண்டானவை.
For all that is in the world—the lust of the flesh, (1John 2:16)
Numbers 11:4,34; Psalms 78:18,30; Proverbs 6:25; Matthew 5:28; Romans 13:14; 1Corinthians 10:6; Galathians 5:17,24; Ephesians 2:3; Titus 2:11-13; 1Peter 1:14; 1Peter 4:2,3; 1Peter 2:11,12; 2Peter 2:10,18; Jud 1:16-18
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். (1 யோவான் 2:16)
எண்ணாகமம் 11:4,34; சங்கீதம் 78:18,30; நீதிமொழிகள் 6:25; மத்தேயு 5:28; ரோமர் 13:14; 1கொரிந்தியர் 10:6; கலாத்தியர் 5:17,24; எபேசியர் 2:3; தீத்து 2:11-13; 1பேதுரு 1:14; 1பேதுரு 4:2,3; 1பேதுரு 2:11,12; 2பேதுரு 2:10,18; யூதா1:16-18.
மாம்சத்தின் இச்சை.
இங்கு இச்சை என்ற சொல்லுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொல் எப்பிதூமியா என்பதாகும். அதிக ஆவலோடு விரும்புதல், பேராவல், தடுக்கப்பட்டுள்ளதை அடைய முயற்சிக்கும் ஆவல், உடல் சார்ந்த இன்பம் என்று பொருள் படுகின்றது. இங்கு இயற்கையில் உள்ள சீர்கேடுகளைக் குறிக்கவில்லை. மேலும் தாகம், பசி போன்ற மாம்சத்தின் விருப்பங்களையும் குறிக்கவில்லை. இயற்கைக்கு மாறான உடலின் வேட்கையைக் குறிக்கின்றது. விபசாரம், வேசித்தனம், காமவிகாரம், அசுத்தம், சோதோமிய பாவம் போன்றவைகளாகும். இவைகளைக் குறித்து பவுல் தனது ரோமர் 1:21-28 ல் தெளிவாக கூறியுள்ளார். கிரேக்கர்களிடையில் காணப்பட்ட உடலின்பம் குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது. இவ்விதமான இச்சைகள் முற்றிலும் வெறுக்கப்பட்டுள்ளதை விவிலியம் பல உதாரணங்கள் மூலம் காண்பிக்கின்றது.
இந்த உடலின்பம் சார்ந்த முறைகேடுகள் தேவனால் உண்டாக்கப்பட்டவைகளல்ல. உலகத்தால் உண்டானவை என்று யோவான் கூறுகின்றார். உலகம் மனிதனுக்குள் வந்துவிட்டதென்றால் இச்சையின் இருப்பிடமாகிய உடல் தன்னிலை மறந்து அதை அடையும்படியாக துடிக்கின்றது. மாம்சத்தோடு ஆத்துமா ஒட்டியிருக்குமானால் உடலின் வேட்கைக்கு ஆத்துமாவும் இணங்கி போகின்றது. இப்பொழுது ஆவி மட்டும் தனித்துவிடப்படுகின்றது. ஆவியிலிருந்து ஆன்மா பிரிந்து உடலோடு ஒட்டி வாழும்போது ஆவிக்குரிய மரணம் உண்டாகின்றது. உடலிலிருந்த ஆன்மா பிரிந்து போகும்போது சரீர மரணம் உண்டாகின்றது. ஆவியோடு ஆத்துமா சேர்ந்துக் கொள்ளும்போது ஆவிக்குரிய வாழ்வு மலர்கின்றது. ஆவி ஆத்துமாவோடு சரீரம் சேரும்போது சரீரமானது உலகத்திலிருந்து விடுபட்டு தூய்மையின் சரீரமாகின்றது.
மாம்சத்தின் இச்சையானது உலகத்தால் உண்டானதாகும். இது எவ்விதத்தில் உலகத்தால் உண்டாயிற்று?. ஆதி மனிதர்கள் உலகத்தில் இருந்தாலும் தேவனுக்குள் இருந்தார்கள். தேவனோடுள்ள உறவை இழந்தபோது உலகத்தோடு இணைந்துக் கொண்டார்கள். தேவனால் படைக்கப்பட்ட உலகம் தீயதல்ல. ஆனால் தேவனால் தள்ளப்பட்ட பிசாசானவைகள் இந்த உலகத்தில் இருந்ததினால் உலகம் பொல்லாங்கனுக்குள் அடங்கியது. ஆக, தேவனை விட்டு பிரிந்து உலகத்தோடு சேர்ந்த மனிதனுக்கு உலகத்திலிருந்து கிடைத்த வெகுமதிதான் இச்சையாகும். இந்த இச்சையானது தடுக்கப்பட்ட பழத்தின்மேல் அதிக ஆவல் கொண்ட தன்மையாகும். இந்த தன்மை ஆதிதாயின் சரீரத்திலும் ஆத்துமாவிலும் உருவாகி ஆதாமுக்குள் புகுந்து, ஆதாம் ஏவாள் மூலமாக முழு உலகிலும் பரவிவிட்டது.
மாம்சத்தில் பிறந்த இரட்சிக்கப்பட்டவர்கள் யாவரின் சரீரத்திலும் இந்த இச்சை இருந்துக்கொண்டேயிருக்கும். மரணம் மட்டுமே இதற்கு முடிவாகும். சரீரம் இந்த உலகத்தோடு ஒட்டிப்போவதினால் அவ்வப்போது இந்த உடல் வேட்கை சரீரத்தில் உண்டாகும் . ஆனால் ஆத்துமா ஆவியோடு இணைந்து இருப்பது வரையிலும் பிரச்சினையில்லை. எப்பொழுது தன் சரீரத்தின் விருப்பத்துக்கு ஆத்துமா செவிசாய்க்கிறதோ அப்பொழுது முறைகேடுகளும் வரம்பு மீறுதலும் உண்டாகும். ஒருவராலும் காப்பாற்றவியலாது.
ஆவியினால் வாழ கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இந்த மாம்ச இச்சையிலிருந்து தப்பிக்க முடியும்.
ஆவி ஆத்துமா சரீரம் ஆவிக்குரிய வாழ்வில் எத்தகைய பங்காற்றுகிறது?.
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். ரோமர் 8:1-4.