ஜனங்கள் கெட்டுப்போகாதிருக்க ஒரே மனுஷன் மரிப்பது நலமே.
one man should die for the people, and not that the whole nation should perish. (John 11:49,50)
Jn11:48; Jn18:14; Mt20:28; Lk24:46; Jn16:7; Jn19:11; Ro3:8; 2Co5:14; 2Sam17:2; 2Kin6:31; Ps2:1; Jer40:15; Jona1:12
அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது, (யோவான் 11:49)
ஜனங்களெல்லாரும் கெட்டுப் போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். (யோவான் 11:50)
யோவான் 11:48; யோவான் 18:14; மத்தேயு 20:28; லூக்கா 24:46; யோவான் 16:7; யோவான் 19:11; ரோமர் 3:8; 2கொரிந்தியர் 5:14; 2சாமுவேல் 17:2; 2இராஜாக்கள் 6:31; சங்கீதம் 2:1; எரேமியா 40:15; யோனா1:1
ஒரே மனிதன்
அவ்வருடத்து பிரதான ஆசாரியனாகிய காய்பா 50 – ஆம் வசனத்தை தீர்க்கதரிசனமாக சொன்னான் என்று யோவான் 52 – ஆம் வசனத்தில் குறிப்பிடுகின்றார்யோவான் .
ஜனங்கள் கெட்டுப்போகாமல் இருக்க இயேசுவை மாத்திரம் கொன்று போட வேண்டுமென்பதே காய்பாவின் கூற்று.
ஜனங்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் விருப்பமே. இங்கே கெட்டுப்போகுதல் என்பதின் மூலச்சொல்லும் யோவான் 3:16 ல் வரும் சொல்லும் ஒன்றாகவே உள்ளது. ஆனால் இரண்டு பகுதியின் சூழலும் மாறுபடுகின்றது. யோவான் 3:16 –ல் வரும் ஜனங்கள் கெட்டுப்போகலாகாது என்று தேவன் விரும்பினார். மேலும், இயேசுவை விசுவாசிக்கிறவன் மட்டுமே கெட்டுப்போக மாட்டான் என்கிறார். ஆனால் 11:50 ல் யூதர்கள் கெட்டுப்போகாதிருக்க இயேசு மரிக்க வேண்டும் என்று பிரதான ஆசாரியர் கூறுகின்றார். அதாவது இயேசுவை கொன்றுவிட்டால் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் பின்வாங்கி விடுவார்கள் என்றும், கெட்டுப்போகுதல் என்பதை இயேசுவை பின்பற்றுவதையும் குறிப்பிடுகின்றார்.
ஜனங்கள் நமது ஆலோசனைக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டுமெனில் – ஜனங்கள் இயேசுவைப் பின்பற்றுவதை தடுக்க வேண்டுமெனில் இயேசு கொல்லப்படவேண்டும் என்கிறார். தன்னையும் தன் ஸ்தானத்தையும் தக்கவைத்துக்கொள்ள இயேசு கொல்லப்படவேண்டும். ஜனங்கள் இயேசுவைப் பின்பற்றாதிருக்க வேண்டும். ஆனால், தேவன் காய்பாவின் ஆலோசனையைத் தீர்க்கதரிசனமாக மாற்றினார்.
யோசேப்புக்கு தீங்கு செய்த சகோதர்களின் தீமையான யோசனையைத் தேவன் நன்மையாக முடியப்பன்னினார் (ஆதியாகமம் 50:20)
சபைகளை உடைத்துவிட்டால், ஊழியக்காரர்களைக் கொன்றுவிட்டால் ஜனங்கள் சிதறிப்போவார்கள் என்று நினைத்து செய்யப்படுகிற எந்த யோசனையையும் தேவன் தமது சரீரமாகிய சபைக்கு நன்மையாகவே முடியப்பண்ணுவார்.
நமக்கு தீமை செய்ய விரும்புகிறவர்களின் கூட்டத்தில் நமக்கு நன்மை செய்கிறவர்களாகவும், தீமையை நன்மையாக மாற்றுகிறவராகவும் இருக்கின்றார்.
நமக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். இயேசுவின் மரணம் ஜீவனுக்கானதாய் மாறியது போல நமக்கு உண்டாகும் எதிர்ப்பும் ஜெயமாகவே மாறும்.
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். மத்தேயு 10:82