மணவாளன்

மணவாட்டியை உடையவனே மணவாளன்

He who has the bride is the bridegroom.(John 3:29)
Mt9:15; Mt22:2; 2Co11:2; Eph5:25-27; Rev19:7-9; Rev21:9; Ps49:9-14; Son3:11; Son4:8-12; Son5:1; Isa54:5; Se62:4,5; Jer2:2; Eze16:8; Hos2:19,20.

மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்: இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. (யோவான் 3:29)

மத்தேயு 9:15; மத்தேயு 22:2; 2Co11:2; எபேசியர் 5:25-27; வெளி19:7-9; வெளி 21:9; சங்கீதம் 49:9-14; உன்னதப்பாட்டு 3:11; உன்னதப்பாட்டு 4:8-12; உன்னதப்பாட்டு 5:1; ஏசாயா 54:5; ஏசாயா 62:4,5; எரேமியா 2:2; எசேக்கியேல் 16:8; ஓசியா 2:19,20.

இவ்வசனத்தில் 4 விஷயங்கள் அடங்கியுள்ளன:

1. மணவாட்டியை உடையவன் மணவாளன். மணவாட்டி ஆயத்தபடுத்தபடாமல் மணவாளன் தன் மணவாளனுக்குரிய அடையாளத்துக்கு வரமுடியாது. சபையாகிய மணவாட்டி என்றைக்கு சபையாக ஸ்தாபிதம் பெற்றாளோ அன்றே இயேசுகிறிஸ்து மணவாளனுக்குரிய அந்தஸ்தை பெற்றார்.

2. மணவாளனுடைய தோழன்.யோவான் ஸ்நானகன் மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் தோழனாக அடையாளபடுத்தபட்டுள்ளார். இந்த பாக்கியம் யோவானுக்கு மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுக்கின்றது.

3. மணவாளனுடைய சத்தம்.மணவாளனாகிய இயேசுவின் சத்தம் இருவிதங்களில் வெளிப்படலாம்.
– மணவாட்டியே உன்னை சந்திக்க, இதோ வருகிறேன் என்ற சத்தம்.
– மணவாட்டியே வா, என் அறைக்குள் பிரவேசி என்ற சத்தம்.

4. மணவாளனுடைய சந்தோஷம். இந்த சந்தோஷம் மூன்று நிலைகளில் வெளிப்படலாம்.
– மணவாட்டி ஆயத்தமானாள் என்கிற சந்தோஷம்.
– மணவாட்டியை திருமணம் செய்து கொள்ளும் திருமண விருந்தின் சந்தோஷம்.
– மணவாட்டியோடு இணைந்து கொள்ளும் உன்னதமான சந்தோஷம். இங்கு மணவாளன் தன் சந்தோஷத்தை மணவாட்டிக்கு கொடுக்கிறார். இதனால் மணவாளனின் தோழனும் சந்தோஷ படுகிறார்.

கர்த்தாவே, மணவாளனாகிய உமது குமாரனின் வருகையிலே மணவாட்டியாகிய நாங்கள் ஆயத்தமாகி காத்திருந்து மணவாளனோடு இணைந்து கொள்ளும் படியாய் எங்களை தெரிந்தெடுத்தீரே உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் கற்புள்ள கன்னிகையாக இருக்கும்படி இவ்வுலகில் நெறி தவறாமல் வாழ உதவி செய்தருளும்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME