பேதுரு: நான் மீன்பிடிக்கப்போகிறேன்
Simon Peter said,I am going fishing.They said,We are going with you also. (John 21:3)
Matthew 4:18-20; Luke 5:10,11; Acts 18:3; Acts 20:34; 1Corinthians 9:6; 1Thes 2:9; 2Thes 3:7-9; 2Kings 6:1-7.
சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. (யோவான் 21:3)
மத்தேயு 4:18-20; லூக்கா 5:10,11; அப்போஸ்தலர் 18:3; அப்போஸ்தலர் 20:34; 1கொரிந்தியர் 9:6; 1தெசலோனிக்கேயர் 2:9; 2தெசலோனிக்கேயர் 3:7-9; 2இராஜாக்கள் 6:1-7.
வேலை செய்யலாமா?
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவராகிய பேதுரு மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது மனுஷர்களை பிடிக்கும்படியாக இயேசுவால் அழைப்பு பெற்றார். அழைக்கப்பட்டவர் இயேசுவோடு மூன்றரை வருடங்கள் தங்கியிருந்து பயிற்சி பெற்றார். இயேசுவின் மரணத்துக்கு பின்பு தான் விட்டு வந்த வேலையை திரும்பவும் செய்வதற்கு ஆயத்தமாகின்றார்.
ஏன் பேதுரு இவ்விதம் நடந்துக்கொண்டார்? பேதுருவோடு மற்ற சீஷர்களும் பேதுருவை பின் தொடர்ந்தது ஏன்? இங்கே இதற்கான பதில் தரப்படாதிருந்தாலும் ஒருசில விஷயங்களை நாம் அனுமானிக்க முடியும்.
தனிமையில் இருப்பதை பயனுள்ள ஒன்றாக மாற்றுவதற்காக இந்த முடிவை எடுத்திருக்கலாம். சோம்பேறிதனத்தை மூலதனமாக கொண்டிருப்பதுவே அனேக வீழ்ச்சிக்கு அடிப்படை காரணம். ஒரு காரியம் தாமதம் ஆகும்போது இன்னொரு காரியத்தை செய்து மனதை ரம்மியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும், குடும்பத்தை திருப்தியாகவும், நேரத்தை பயன்படுத்துவதாகவும் வைத்திருக்க வேண்டும்.
தம்மோடிருக்கும் சீஷர்களுக்கு வேண்டிய போஜனத்துக்காக இவ்விதம் செய்திருக்கக்கூடும். தலைமைத்துவத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் தன்னோடிருப்பவர்களை நடத்துவது மட்டுமல்ல அவர்களை போஜிக்கும் தாலந்துகளை பெற்றிருப்பது அவசியம்.
இயேசு கிறிஸ்துவின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாததினாலும், அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது என்பதினாலும் சோர்ந்து போனவர்களாய், பின்மாற்றத்தின் ஆவியுடையவர்களாய், கிறிஸ்துவின் கட்டளைகளை மறந்தவர்களாய் இவ்விதம் செய்திருக்கக்கூடும். ஒருவர் இச்சையினால் மட்டும் பின்னிட்டு திரும்புவதில்லை, வெறுப்பினாலும், கசப்பினாலும் கூட பின்னிட்டு போகிறார்கள். எதிர்கால நம்பிக்கையை இழந்ததினிமித்தம் பின்னிட்டு போகிறார்கள். முறிந்த ஆவியே பின்னிட்டு போவதற்கான காரணம் ஆகும்.
பணி செய்வது ஆரோக்கியத்துக்கான நடைமுறை. பலவிதமான வியாதிகளின் இருக்கைக்கு அடிப்படை காரணமே மனிதன் எதற்காக நியமிக்கப்பட்டானோ அதனை விட்டு விடுவதாகும். ஆதியில் தேவன் நிலத்தை பண்படுத்தவே மனிதனை ஏற்படுத்தினார். எல்லா வேலைகளிலும் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வதுவே உன்னதமான பணியாகும். பேதுருவின் குலதோழில் மீன்பிடித்தல். ஆகையினால் அதை அவர் செய்தார். எந்த தொழிலும் தீண்டதகாதது அல்ல, அவரவரின் விருப்பமும் , வாஞ்சையுமே அந்தந்த தொழிலை மேம்படுத்துகிறது. கிறிஸ்துவுக்காய் காவல் வேலையாகிய ஆத்தும ஆதாய பணியை செய்கிறவர்கள் மனதை பண்படுத்துவதோடு நியலத்தை பண்படுத்துவதையும் முறையாக அனுசரித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
மிஷனெறிகளினால் பண்படுத்தும்படி வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல ஏக்கர் நிலங்கள் பின் சந்ததிகளாகிய சோம்பேறி ஊழியர்களினால் கேட்பாரற்று, கவனிப்பாரற்று ஊழையிடுதலின் தேசமாகவும், தரிசு நிலமாகவும் காணப்படுகிறது. தேவனுடைய மனிதர்கள் மனங்களோடுகூட மண்ணையும் வளப்படுத்த வேண்டும்.
Laziness is so easy, but hard to go forward….
வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளை எல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம். 2:1-5,15.
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். சங்கீதம் 128.