பிலாத்து நியாயாசனத்தில் உட்கார்ந்தான்
he brought Jesus out and sat down in the judgment seat. (John 19 :13)
Psalm 55:12-17; Psalm 58:1,2; Psalm 82:5-7; Psalm 94:20,21; Ecc 5:8; Jeremiah 38:19; Proverb 29:25; Isaiah 51:12,13; Amos 5:10-17; Luke 12:5; Act 4:19.
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். (யோவான் 19:13)
சங்கீதம் 55:12-17; சங்கீதம் 58:1,2; சங்கீதம் 82:5-7; சங்கீதம் 94:20,21; பிரசங்கி 5:8; எரேமியா 38:19; நீதிமொழிகள் 29:25; ஏசாயா 51:12,13; ஆமோஸ் 5:10-17; லூக்கா 12:5; அப்போஸ்தலர் 4:19.
நியாயாசனம்:
நியாயாசனத்தில் வீற்றிருந்து நியாயம் செய்கிறவர் அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, கைதியாக, குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்க நீதி வழுவாது நீதி நியாயம் செய்ய பெலனில்லாத, சத்துவமில்லாத பிலாத்து நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கின்றார். நாம் இதனை அரசியல், சட்டம் சார்ந்ததாக பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இயேசுவை தேவகுமாரன் என்றும், பாவம் செய்யாதவர் என்றும், குற்றமற்றவர் என்றும் அறிந்திருந்தும் மனதைக் கல்லாக்கிக் கொண்ட பிலாத்து தெய்வபயமில்லாதவராய் தேவன் முன்னிலையில் பணிவுடன் நிற்பதற்கு பதில் ராஜதோரணையில் அவர் முன்பாக உட்கார்ந்திருக்கின்றார்.
துன்மார்க்கதனமும், தெய்வபயமில்லாத சந்ததிகளும், தாய்தகப்பனமாரை மதிக்காதவர்களும், நீதி நியாயம் என்னவென்று அறியாதவர்களும், மனிதாபிமானம் மனசாட்சியில்லாத காட்டுமிருகங்களை போன்றவர்களுமாய் இருக்கின்ற இவ்வுலகத்தில் நியாயம் துலாம்பாரமாக செலுத்தவேண்டிய நியாயாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டு நீதி நியாயம் செய்கின்றார்கள்.
இவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வபயமில்லை. தேவனை தங்கள் முன்வைத்து நோக்குவதில்லை. நியாயாசனத்தில் உட்கார்ந்து விட்டால் நானே கடவுள், கடவுளின் பிரதிநிதி என்றுச் சொல்லிக்கொண்டு பெருமையடித்துக் கொள்கிறவர்கள்.
நியாயாசனம் தேவனுடையது. நீதி தேவனுடையது. தேவனுடைய உயரிய சிங்காசனத்தின் சாயலாகவே நியயாசனம் அந்தந்த நாடுகளிலும் வைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய விருப்பங்கள் எண்ணங்களுக்கு ஏற்பவே முகஸ்துதி பாராமல் நியாயம் வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நியாயாசனத்தில் துன்மார்க்கனே உட்கார்ந்திருந்தாலும் நியாயாசனத்தை அவரே கட்டுபடுத்துகின்றார். அவரவர் தீர்ப்பு செய்யும் தீர்ப்புக்கு ஏற்பவே தீர்ப்பிட்டவர்களுக்கும் தேவன் தீர்ப்பிடுவார்.
எல்லா நியயாசனங்களும் ஒருநாள் கிறிஸ்துவின் நியாயாசனம் முன்பாக மண்டியிட்டு தீரும். ஒருவரும் தப்ப முடியாது. தீர்ப்புகளும் தப்பாது. எல்லா தீர்ப்புகளும் எழும்பி வந்து தீர்ப்பிட்டவருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ பேசும். அதன் வாயை அடைக்க முடியாது.
தெய்வபயமில்லாத சந்ததிகள் நடுவில் நீதி நியாயம் தாழ்ந்து போகலாம். ஆனாலும் தர்மம் தழைத்து , நீதி பிரகாசித்து, நியாம் எழும்பிவரும் காலம் வரப்போகின்றது.
நியாயாசனத்தில் உட்காரும் இயேசு வரப்போகின்றார்.
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். வெளிபடுத்தல் 22:11-15.
கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.
அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார். சங்கீதம் 9:7,8.
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். சங்கீதம் 98:9.